ஜொப்ரா ஆர்ச்சரிடம் மன்னிப்பு கோரவுள்ள நியூசிலாந்து கிரிக்கெட்

88

நியூசிலாந்து மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கு இடையிலான முதல் டெஸ்ட் போட்டியின் போது, பார்வையாளர் ஒருவர் இங்கிலாந்து அணியின் வேகப் பந்துவீச்சாளர் ஜொப்ரா ஆர்ச்சரை இன ரீதியாக அவமதித்த சம்பவத்திந்காக நியூசிலாந்து கிரிக்கெட், ஆர்ச்சரிடம் மன்னிப்பு கோரவுள்ளது. 

நியூசிலாந்து அணிக்கு இன்னிங்ஸ் வெற்றி

நீல் வெக்னரின் அதிரடி ஐந்து விக்கெட்டுகள்…..

மௌண்ட் மவுன்கனுயில் இன்று (25) முடிவுக்கு வந்த இங்கிலாந்து அணிக்கு எதிரான டெஸ்ட் போட்டியில் நியூசிலாந்து அணி இன்னிங்ஸ் அடிப்படையில் வெற்றிபெற்றது.

இந்தப் போட்டியின் இறுதி நாளான இன்று இங்கிலாந்து அணி தங்களுடைய இரண்டாவது இன்னிங்ஸில் துடுப்பெடுத்தாடியது. இதன்போது களமிறங்கி துடுப்பெடுத்தாடிய ஜொப்ரா ஆர்ச்சர் 30 ஓட்டங்களை பெற்றுக்கொடுத்து ஆட்டமிழந்தார்.

ஆர்ச்சர் துடுப்பெடுத்தாடிக்கொண்டிருந்த சந்தர்ப்பத்தில் மைதானத்திலிருந்து பார்வையாளர் ஒருவர் ஜொப்ரா ஆர்ச்சரை இன ரீதியான கருத்துகளை பயன்படுத்தி அவமதித்துள்ளார். இதனை ஜொப்ரா ஆர்ச்சர் தனது உத்தியோகபூர்வ டுவிட்டர் தளத்தில் பதிவிட்டுள்ளார்.

“இன்றைய போட்டியில் நான் அணியை தோல்வியிலிருந்து மீட்பதற்காக துடுப்பெடுத்தாடிக்கொண்டிருந்தேன். குறித்த சந்தர்ப்பத்தில் என்னை இன ரீதியாக அவமதிக்கும் வகையில் ஒருவர் வார்த்தைகளை பிரயோகித்தார். அந்த ஒருவரை தவிர மைதானத்திலிருந்த இரசிகர்கள் அற்புதமானவர்கள். எப்போதும் போன்று பார்மி ஆர்மியின் ஆதரவும் சிறப்பானது” என பதிவிட்டிருந்தார்.

ஜொப்ரா ஆர்ச்சர் இவ்வாறான குற்றச்சாட்டை முன்வைத்த நிலையில், குறித்த சம்பவத்துக்காக மன்னிப்பு கோரவுள்ளதாக நியூசிலாந்து கிரிக்கெட் சபை தகவல் வெளியிட்டுள்ளது.

ஐ.சி.சி. உலக டெஸ்ட் சம்பியன்ஷிப்பில் ஆதிக்கம் செலுத்தும் இந்தியா

பங்களாதேஷ் கிரிக்கெட் அணியினை …………

அத்துடன், ஜொப்ரா ஆர்ச்சரை இன ரீதியாக தாழ்த்தும் வகையில் கருத்து வெளியிட்ட நபரை, பாதுகாப்பு அதிகாரிகளால் அடையாளம் காண முடியவில்லை எனவும், அதனால் சி.சி.டி.வி. காணொளிகள் மூலம் குறித்த நபரை அடையாளம் காண்பதற்கான நடவடிக்கைகளை எடுத்து வருவதாகவும் நியூசிலாந்து கிரிக்கெட் சபை சுட்டிக்காட்டியுள்ளது.

இதேவேளை, நியூசிலாந்து கிரிக்கெட் சபை நாளைய தினம் ஜொப்ரா ஆர்ச்சரிடம் மன்னிப்பு கோரவுள்ளதுடன், ஹெமில்டனில் நடைபெறவுள்ள அடுத்தப் போட்டியில் இதுபோன்ற சம்பவங்கள் நடைபெறாமல் இருக்க, கண்காணிப்பினை அதிகப்படுத்தியுள்ளதாகவும் தெரிவித்துள்ளது.

இங்கிலாந்து தேசிய அணியில் விளையாடி வரும் ஜொப்ரா ஆர்ச்சர், பார்படோஸை பிறப்பிடமாக கொண்டவர் என்பதுடன், 19 வயதுக்குட்பட்டோருக்கான கிரிக்கெட்டினை மேற்கிந்திய தீவுகள் அணிக்காக விளையாடியிருந்தார் என்பதும் குறிப்பிடத்தக்கது.

>> மேலும் கிரிக்கெட் செய்திகளை படிக்க <<