ஐ.சி.சி. உலக டெஸ்ட் சம்பியன்ஷிப்பில் ஆதிக்கம் செலுத்தும் இந்தியா

125
©AP

பங்களாதேஷ் கிரிக்கெட் அணியினை தமது சொந்த மண்ணில் வைத்து இடம்பெற்ற இரண்டு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் 2-0 என வைட்வொஷ் செய்திருக்கும் இந்திய கிரிக்கெட் அணி, ஐ.சி.சி. உலக டெஸ்ட் சம்பியன்ஷிப் தொடரின் புள்ளிகள் பட்டியலில் தனது ஆதிக்கத்தை தொடர்ந்தும் முன்னெடுக்கின்றது.

பங்களாதேஷ் கிரிக்கெட் அணியினை வீழ்த்தியதன் மூலம் ஐ.சி.சி. உலக டெஸ்ட் சம்பியன்ஷிப்பின் தொடர் ஒன்றுக்கு வழங்கப்படும் 120 புள்ளிகளையும் முழுமையாக பெற்றிருக்கும் இந்திய கிரிக்கெட் அணி, மொத்தமாக 360 புள்ளிகளுடன் ஐ.சி.சி. உலக டெஸ்ட் சம்பியன்ஷிப்பில் முதலிடத்தில் நீடிக்கின்றது.

பாகிஸ்தானுக்கு எதிராக அவுஸ்திரேலியா இன்னிங்ஸ் வெற்றி

ஐ.சி.சி. உலக டெஸ்ட் சம்பியன்ஷிப்பிற்காக இடம்பெறும் பாகிஸ்தான் – அவுஸ்திரேலிய …

முன்னதாக, மேற்கிந்திய தீவுகளுக்கு எதிரான 2 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் மேற்கிந்திய தீவுகள் அணியை தோற்கடித்து ஐ.சி.சி. உலக டெஸ்ட் சம்பியன்ஷிப்பை ஆரம்பம் செய்த இந்திய கிரிக்கெட் அணி, அதன் பின்னர் தமது சொந்த மண்ணில் இடம்பெற்ற தென்னாபிரிக்க அணிக்கு எதிரான மூன்று போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரினையும் 3-0 எனக் கைப்பற்றியிருந்தது. இவ்வாறாக ஐ.சி.சி. உலக டெஸ்ட் சம்பியன்ஷிப்பிற்காக தாம் விளையாடிய மூன்று டெஸ்ட் தொடர்களிலும் வெற்றி பெற்றே இந்திய கிரிக்கெட் அணி 360 புள்ளிகளை பெற்றிருக்கின்றது.

இதேநேரம், பாகிஸ்தான் அணிக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியில் இன்னிங்ஸ் வெற்றியை பதிவு செய்த அவுஸ்திரேலிய கிரிக்கெட் அணி அதற்காக 60 புள்ளிகள் பெற்று மொத்தமாக 116 புள்ளிகளுடன் ஐ.சி.சி. உலக டெஸ்ட் சம்பியன்ஷிப்பில் இரண்டாம் இடத்தில் காணப்படுகின்றது.

பாகிஸ்தான் அணிக்கு எதிராக 2 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் பங்கேற்றுவரும் அவுஸ்திரேலிய கிரிக்கெட் அணி இதற்கு முன்னர் நடைபெற்ற ஆஷஸ் டெஸ்ட் தொடர் மூலம் 56 புள்ளிகளை ஐ.சி.சி. உலக டெஸ்ட் சம்பியன்ஷிப்பிற்காக பெற்றுக் கொண்டிருந்தமை குறிப்பிடத்தக்க விடயமாகும்.

அதேநேரம் நியூசிலாந்து, இலங்கை ஆகிய அணிகள் ஐ.சி.சி. உலக டெஸ்ட் சம்பியன்ஷிப்பின் புள்ளிகள் பட்டியலில் 60 புள்ளிகளுடன் முறையே மூன்றாம், நான்காம்  இடங்களில் காணப்படுகின்றன. இந்த இரண்டு அணிகளும் இந்த ஆண்டு ஓகஸ்ட் மாதம் தங்களுக்கிடையே இடம்பெற்ற இரண்டு போட்டிகள் கொண்ட இருதரப்பு டெஸ்ட் தொடர் மூலம் ஐ.சி.சி. உலக டெஸ்ட் சம்பியன்ஷிப்பிற்கான புள்ளிகளைப் பெற்றுக் கொண்டிருந்தது குறிப்பிடத்தக்கது. 

அணித்தலைவராக பொண்டிங்கின் சாதனையை முறியடித்த விராட் கோஹ்லி

பங்களாதேஷ் அணிக்கு எதிரான வரலாற்று பகலிரவு டெஸ்ட் போட்டியில் ஆட்டமிழக்காது …

இதில், நியூசிலாந்து கிரிக்கெட் அணி தற்போது ஐ.சி.சி. உலக டெஸ்ட் சம்பியன்ஷிப் புள்ளிகள் பட்டியலில் ஐந்தாம் இடத்தில் 56 புள்ளிகளுடன் இருக்கும் இங்கிலாந்து அணியுடன் 2 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் ஆடிவருகின்றது.  

அதேவேளை, இலங்கை கிரிக்கெட் அணி தமது அடுத்த ஐ.சி.சி. உலக சம்பியன்ஷிப் டெஸ்ட் தொடரில் பாகிஸ்தான் அணியுடன் டிசம்பர் மாதம் விளையாடவிருக்கின்றது. 

இதேநேரம் ஐ.சி.சி. உலக டெஸ்ட் சம்பியன்ஷிப்பில் தங்களது முதல் தொடர்களில் ஆடி முடித்திருக்கும் மேற்கிந்திய தீவுகள், பங்களாதேஷ் மற்றும் தென்னாபிரிக்கா ஆகிய அணிகள் இதுவரையில் புள்ளிகள் எதனையும் பெறவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. அதேநேரம், பாகிஸ்தான் அணிக்கு அவுஸ்திரேலிய அணியுடனான டெஸ்ட் தொடரே ஐ.சி.சி. உலக டெஸ்ட் சம்பியன்ஷிப்பின் முதல் தொடராகும்.

ஐ.சி.சி. உலக டெஸ்ட் சம்பியன்ஷிப் புள்ளிகள் அட்டவணை (24.11.2019 திகதியை அடிப்படையாகக் கொண்டது)

  1. இந்தியா – 360 புள்ளிகள்
  2. அவுஸ்திரேலியா – 116 புள்ளிகள்
  3. நியூசிலாந்து – 60 புள்ளிகள்
  4. இலங்கை – 60 புள்ளிகள்
  5. இங்கிலாந்து – 56 புள்ளிகள்
  6. பாகிஸ்தான் – 0 புள்ளிகள்
  7. மேற்கிந்திய தீவுகள் – 0 புள்ளிகள்
  8. பங்களாதேஷ் – 0 புள்ளிகள்
  9. தென்னாபிரிக்கா – 0 புள்ளிகள்

மேலும் கிரிக்கெட் செய்திகளைப் படிக்க…