நியூசிலாந்து அணிக்கு இன்னிங்ஸ் வெற்றி

39
©ICC

நீல் வெக்னரின் அதிரடி ஐந்து விக்கெட்டுகள் மூலம் இங்கிலாந்துடனான முதலாவது டெஸ்ட் போட்டியில் நியூசிலாந்து அணி இன்னிங்ஸ் மற்றும் 65 ஓட்டங்களால் வெற்றியீட்டியது. 

இதன்மூலம் இரண்டு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் தோற்கடிக்க முடியாத நிலையை எட்டியிருக்கும் நியூசிலாந்து அணி தனது சொந்த மண்ணில் தொடர்ச்சியாக ஏழு தொடர்களில் தோல்வியுறாத அணியாக நீடிக்கிறது. 

பாகிஸ்தானுக்கு எதிராக அவுஸ்திரேலியா இன்னிங்ஸ் வெற்றி

ஐ.சி.சி. உலக டெஸ்ட் சம்பியன்ஷிப்பிற்காக ……………..

மௌண்ட் மவுன்கனுயில் நடைபெற்ற போட்டியின் கடைசி நாளான இன்று (25) இன்னிங்ஸ் தோல்வியை தவிர்ப்பதற்கு 207 ஓட்டங்களை பெற வேண்டிய நிலையிலேயே இங்கிலாந்து தனது இரண்டாவது இன்னிங்ஸை தொடர்ந்தது. 55 ஓட்டங்களுக்கு 3 விக்கெட்டுகளை இழந்திருந்த இங்கிலாந்து அணி தோல்வியை தவிர்ப்பதற்கு நாள் முழுவதும் துடுப்பெடுத்தாட வேண்டி ஏற்பட்டது. 

எனினும் அந்த அணி 21.4 ஓவர்களில் 197 ஓட்டங்களுக்கு சகல விக்கெட்டுகளையும் பறிகொடுத்தது. இதன்போது தோல்வியை தவிர்க்கும் நோக்குடன் ஆடிய ஜோ டென்லி 142 பந்துகளில் 35 ஓட்டங்களை பெற்றதோடு பென் ஸ்டொக்ஸ் 84 பந்துகளில் 28 ஓட்டங்களை பெற்றார். முன்னதாக ஆரம்ப வீரர் ரோரி பேர்ன்ஸ் 76 பந்துகளில் 31 ஓட்டங்களை பெற்றார். 

வேகப்பந்து வீச்சாளர் நீல் வெக்னரின் 44 ஓட்டங்களுக்கு 5 விக்கெட்டுகளை வீழ்த்தியதோடு மிச்சல் சான்ட்னர் 3 விக்கெட்டுகளை பதம்பார்த்தார். 

இந்த போட்டியின் நாணய சுழற்சியில் வென்று முதலில் துடுப்பெடுத்தாடிய இங்கிலாந்து அணி 353 ஓட்டங்களுகளை பெற்றது. 

தொடர்ந்து தனது முதல் நியூசிலாந்து அணியின் அரம்ப விக்கெட்டுகள் முன்கூட்டியே பறிபோன போதும் மத்திய வரிசையில் வந்த பி.ஜே. வொட்லிங் மற்றும் மிச்சல் சான்ட்னர் 7 ஆவது விக்கெட்டுக்காக 261 ஓட்டங்களை பகிர்ந்துகொண்டனர்.  இதில் வொட்லிங் 473 பந்துகளுக்கு 205 ஓட்டங்களை பெற்றதோடு சான்ட்னர் 269 பந்துகளில் 126 ஓட்டங்களை பெற்றார். 

போட்டியில் நியூசிலாந்து அணி தங்களுடைய முதல் இன்னிங்ஸில் 9 விக்கெட்டுகளை இழந்து 615 ஓட்டங்களை பெற்றிருந்ததுடன், இங்கிலாந்து அணி முதல் இன்னிங்ஸில் 353 ஓட்டங்களுக்கு சகல விக்கெட்டுகளையும் இழந்திருந்தது. இங்கிலாந்து அணி சார்பில் முதல் இன்னிங்ஸில் அதிகபட்சமாக பென் ஸ்டோக்ஸ் 91 ஓட்டங்களையும், ஜோ டென்லி 74 ஓட்டங்களையும் பெற்றுக்கொடுத்திருந்தனர்.

ஐ.சி.சி. உலக டெஸ்ட் சம்பியன்ஷிப்பில் ஆதிக்கம் செலுத்தும் இந்தியா

பங்களாதேஷ் கிரிக்கெட் அணியினை தமது ………

நியூசிலாந்து அணி 2017 ஆம் ஆண்டு தொடக்கம் தங்களுடைய சொந்த மண்ணில் டெஸ்ட் தொடர் ஒன்றில் தோல்வியடைவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. 

சுருக்கம் 

இங்கிலாந்து (முதல் இன்னிங்ஸ்) – 353/10 (124) – பென் ஸ்டொக்ஸ் 91, ஜோ டென்லி 74, ரோரி பேர்ன்ஸ் 52, ஜோஸ் பட்லர் 43, டிம் சௌதி 4/88, நீல் வெக்னர் 3/90

நியூசிலாந்து (முதல் இன்னிங்ஸ்) – 615/9 (201) – பீ.ஜே. வொட்லிங் 205, மிச்சல் சன்ட்னர் 126, கொலின் டி கிரெண்ட்ஹோம் 65, சேம் கர்ரன் 3/119, பென் ஸ்டொக்ஸ் 2/74, ஜக் லீச் 2/74

இங்கிலாந்து (இரண்டாவது இன்னிங்ஸ்) – 197/10 (96.2) – ஜோ டென்லி 35, ரோரி பேர்ன்ஸ் 31, நீல் வெக்னர் 5/44, மிச்சல் சன்ட்னர் 3/53

முடிவு – நியூசிலாந்து இன்னிங்ஸ் மற்றும் 65 ஓட்டங்களால் வெற்றி

>> மேலும் கிரிக்கெட் செய்திகளை படிக்க <<