Home Tamil நிஷானின் இரட்டைச் சதத்தோடு சமநிலை அடைந்த முதல் உத்தியோகபூர்மற்ற டெஸ்ட்

நிஷானின் இரட்டைச் சதத்தோடு சமநிலை அடைந்த முதல் உத்தியோகபூர்மற்ற டெஸ்ட்

254

சுற்றுலா இங்கிலாந்து லயன்ஸ் மற்றும் இலங்கை A கிரிக்கெட் அணிகள் இடையிலான முதலாவது உத்தியோகபூர்வமற்ற டெஸ்ட் போட்டியானது சமநிலை அடைந்திருக்கின்றது.

அபார இரட்டைச் சதத்துடன் இலங்கை A தரப்பினை பலப்படுத்திய நிஷான் மதுஷ்க

இலங்கைக்கு சுற்றுப் பயணம் மேற்கொண்டுள்ள இங்கிலாந்து லயன்ஸ் அணி இங்கே இரண்டு போட்டிகள் கொண்ட உத்தியோகபூர்வமற்ற டெஸ்ட் தொடரில் ஆடுகின்றது. இந்த நிலையில் காலி சர்வதேச மைதானத்தில் இந்த உத்தியோகபூர்மற்ற டெஸ்ட் தொடரின் முதல் போட்டி ஆரம்பமாகியதோடு நேற்று (02) போட்டியின் மூன்றாம் நாள் ஆட்டம் நிறைவுக்கு வந்தது.

நேற்று போட்டியின் ஆட்டநேரம் நிறைடையும் போது தமது இரண்டாம் இன்னிங்ஸில் துடுப்பாடி வந்த இலங்கை A கிரிக்கெட்  அணி 580 ஓட்டங்களுக்கு 3 விக்கெட்டுக்களை இழந்து காணப்பட்டிருந்தது. இலங்கை தரப்பிற்கு பலமளித்து களத்தில் இருந்த நிஷான் மதுஷ்க இரட்டைச்சதம் விளாசி 207 ஓட்டங்கள் பெற்றிருக்க, நிப்புன் தனன்ஞய 89 ஓட்டங்கள் எடுத்திருந்தார்.

இன்று இங்கிலாந்து லயன்ஸை விட 249 ஓட்டங்கள் முன்னிலை பெற்றவாறு இரண்டாம் இன்னிங்ஸ் துடுப்பாட்டத்தை தொடர்ந்த இலங்கை A கிரிக்கெட் அணி நேற்றைய நாளினை விட ஒப்பிடும் போது துரித கதியில் விக்கெட்டுக்களை பறிகொடுத்ததுடன் 663 ஓட்டங்களுக்கு 9 விக்கெட்டுக்களை இழந்து காணப்பட்ட போது ஆட்டத்தினை இடைநிறுத்திக் கொண்டது.

இலங்கை A அணியின் துடுப்பாட்டம் சார்பில் நிஷான் மதுஷ்க 25 பௌண்டரிகள் மற்றும் 4 சிக்ஸர்கள் அடங்கலாக 241 ஓட்டங்கள் எடுக்க,  இலங்கை A தரப்பின் தலைவர் நிப்புன் தனன்ஞய சதம் விளாசி ஒரு சிக்ஸர் மற்றும் 18 பௌண்டரிகள் உடன் 128 ஓட்டங்கள் பெற்றார்.

அரசியல் பிரச்சாரத்தில் ஈடுபடுகிறாரா தசுன் ஷானக?

இலங்கை A அணியின் இரண்டாம் இன்னிங்ஸ் துடுப்பாட்டத்தை அடுத்து  போட்டியின் வெற்றி இலக்காக 333 ஓட்டங்கள் நிர்ணயம் செய்யப்பட்டது. இந்த வெற்றி இலக்கை அடைய இரண்டாம் இன்னிங்ஸ் துடுப்பாட்டத்தை ஆரம்பித்த இங்கிலாந்து லயன்ஸ் அணி ஆரம்பத்தில் இருந்தே தடுமாறியதோடு அவ்வணி 7 விக்கெட்டுக்களை இழந்து 221 ஓட்டங்கள் பெற்ற போது போட்டியின் நான்காம் நாள் ஆட்டம் நிறைவடைந்து போட்டியும் சமநிலை அடைந்தது.

மகளிர் கிரிக்கெட் அபிவிருத்திக்காக சுசந்திகா ஜயசிங்க நியமனம்

இங்கிலாந்து லயன்ஸ் துடுப்பாட்டத்தில் ஜோஸ் பொஹன்னன் அரைச்சதம் விளாசி 57 ஓட்டங்கள் எடுக்க, ஜேக் ஹேய்னஸ் 38 பந்துகளில் 3 பௌண்டரிகள் உடன் 43 ஓட்டங்கள் பெற்றார்.

இலங்கை A கிரிக்கெட் அணியின் பந்துவீச்சில் மிலான் ரத்நாயக்க 3 விக்கெட்டுக்களையும், லக்ஷித மானசிங்க 2 விக்கெட்டுக்களையும் சுருட்டியிருந்தமை குறிப்பிடத்தக்கது.

ஸ்கோர் விபரம்

Result

Match drawn

Sri Lanka A Team
136/10 (35.4) & 663/9 (157.1)

England Lions
467/10 (87.5) & 221/7 (48)

Batsmen R B 4s 6s SR
Nishan Madushka lbw b Matt Fisher 1 2 0 0 50.00
Oshada Fernando c Jack Haynes b Liam Patterson-White 21 39 3 0 53.85
Nuwanidu Fernando st Jamie Smith b Liam Patterson-White 17 27 3 0 62.96
Nipun Dhananjaya c Haseeb Hameed b Sam Cook 15 21 2 0 71.43
Sadeera Samarawickrama c Liam Patterson-White b Matt Fisher 43 61 7 0 70.49
Sahan Arachchige c Jamie Smith b Tom Abell 3 20 0 0 15.00
Dunith Wellalage c Jamie Smith b Liam Patterson-White 0 4 0 0 0.00
Lakshitha Manasinghe c Jamie Smith b Liam Patterson-White 26 27 5 0 96.30
Amshi De Silva c Jamie Smith b Matt Fisher 0 4 0 0 0.00
Lasith Embuldeniya c Jamie Smith b Matt Fisher 3 9 0 0 33.33
Milan Rathnayake not out 1 5 0 0 20.00


Extras 6 (b 0 , lb 1 , nb 5, w 0, pen 0)
Total 136/10 (35.4 Overs, RR: 3.81)
Bowling O M R W Econ
Sam Cook 7 2 17 1 2.43
Matt Fisher 9.4 1 34 5 3.62
Liam Patterson-White 13 1 51 3 3.92
Tom Abell 4 0 17 1 4.25
Jack Carson 2 0 16 0 8.00
Batsmen R B 4s 6s SR
Alex Lees b Lasith Embuldeniya 56 69 7 1 81.16
Haseeb Hameed c Sadeera Samarawickrama b Sahan Arachchige 81 109 10 0 74.31
Tom Haines c Lahiru Udara b Lakshitha Manasinghe 118 138 12 1 85.51
Tom Abell lbw b Lasith Embuldeniya 7 7 0 1 100.00
Josh Bohannon c Milan Rathnayake b Lasith Embuldeniya 42 50 5 0 84.00
Jack Haynes c Sadeera Samarawickrama b Amshi De Silva 16 13 3 0 123.08
Jamie Smith b Lakshitha Manasinghe 22 23 3 0 95.65
Liam Patterson-White c Dunith Wellalage b Amshi De Silva 41 61 6 0 67.21
Matt Fisher c Sadeera Samarawickrama b Milan Rathnayake 53 46 2 2 115.22
Jack Carson c Nishan Madushka b Amshi De Silva 4 10 1 0 40.00
Sam Cook not out 2 6 0 0 33.33


Extras 25 (b 7 , lb 12 , nb 5, w 1, pen 0)
Total 467/10 (87.5 Overs, RR: 5.32)
Bowling O M R W Econ
Milan Rathnayake 16.5 1 81 1 4.91
Amshi De Silva 10 0 59 3 5.90
Lasith Embuldeniya 30 0 158 3 5.27
Lakshitha Manasinghe 17 1 85 2 5.00
Sahan Arachchige 9 1 44 1 4.89
Dunith Wellalage 5 0 21 0 4.20
Batsmen R B 4s 6s SR
Nishan Madushka c Matt Fisher b Jack Carson 241 423 25 4 56.97
Oshada Fernando c Alex Lees b Liam Patterson-White 114 134 18 0 85.07
Lakshitha Manasinghe c Sam Cook b Tom Abell 73 107 11 2 68.22
Nuwanidu Fernando b Jack Carson 80 90 11 2 88.89
Nipun Dhananjaya b Liam Patterson-White 128 170 18 1 75.29
Sadeera Samarawickrama lbw b Jack Carson 1 2 0 0 50.00
Sahan Arachchige c Tom Haines b Liam Patterson-White 4 11 0 0 36.36
Dunith Wellalage run out (Haseeb Hameed) 0 2 0 0 0.00
Amshi De Silva c & b Jack Carson 0 5 0 0 0.00
Lasith Embuldeniya not out 0 4 0 0 0.00


Extras 22 (b 11 , lb 6 , nb 5, w 0, pen 0)
Total 663/9 (157.1 Overs, RR: 4.22)
Bowling O M R W Econ
Sam Cook 19 1 95 0 5.00
Matt Fisher 15 3 57 0 3.80
Liam Patterson-White 50 7 231 3 4.62
Jack Carson 44.1 6 173 4 3.92
Tom Abell 20 7 55 1 2.75
Tom Haines 9 0 35 0 3.89


Batsmen R B 4s 6s SR
Alex Lees c Sadeera Samarawickrama b Milan Rathnayake 1 8 0 0 12.50
Haseeb Hameed c & b Milan Rathnayake 15 33 3 0 45.45
Tom Haines c Nishan Madushka b Milan Rathnayake 20 24 3 0 83.33
Tom Abell c Sadeera Samarawickrama b Amshi De Silva 11 21 1 0 52.38
Josh Bohannon lbw b Lakshitha Manasinghe 57 86 7 0 66.28
Jack Haynes lbw b Lakshitha Manasinghe 43 38 3 0 113.16
Jamie Smith not out 39 44 5 0 88.64
Liam Patterson-White run out (Lakshitha Manasinghe) 25 34 2 1 73.53
Matt Fisher not out 1 3 0 0 33.33


Extras 9 (b 4 , lb 0 , nb 3, w 2, pen 0)
Total 221/7 (48 Overs, RR: 4.6)
Bowling O M R W Econ
Lasith Embuldeniya 19 3 82 0 4.32
Milan Rathnayake 8 0 31 3 3.88
Dunith Wellalage 5 0 24 0 4.80
Amshi De Silva 5 1 25 1 5.00
Lakshitha Manasinghe 11 0 55 2 5.00



>>மேலும் கிரிக்கெட் செய்திகளைப் படிக்க<<