வெர்ஜில் வான் டைக் எட்டு ஆண்டுகளுக்கு முன்னர் மரணத்தின் விளிம்பு வரை சென்று திரும்பியவர். தனது கடைசி விருப்பத்தைக் கூட எழுதி கையொப்பம் இட்டார். ஆனால் அந்த மரணப் போராட்டத்தில் வென்ற அவர் கால்பந்து உலகில் உச்சத்தைத் தொட்டார்.

அது எனது கடைசி விருப்பம் அடங்கிய ஆவணம். நான் இறந்துவிட்டால் எனது பணத்தில் ஒரு பகுதியை எனது தாய்க்குக் கொடுக்க தீர்மானித்தேன். யாருக்கும் அது பற்றி பேச தேவை இருக்கவில்லை. ஆனால் அதனைச் செய்ய வேண்டி இருந்தது. ஏனென்றால் அனைத்துமே அன்று முடியவிருந்தது என்று அந்தப் பயங்கர அனுபவம் பற்றி வான் டைக் கூறுகிறார்

அதன்படி, வெர்ஜில் வான் டைக் என்ற பெயரைக் கேட்டவுடன் கடந்த பருவத்தில் அவர் வெளியிட்ட அபார திறமை தான் அனைவருக்கும் ஞாபகத்திற்கு வரும் என்றபோதும் அந்த திறமையின் பின்னால் பலருக்கும் தெரியாத கதை ஒன்று இருக்கிறது என்பது அண்மையிலேயே வெளிச்சத்திற்கு வந்தது.   

இரண்டரை ஆண்டுகளுக்குப்பின் கோமாவில் இருந்து திரும்பினார் அஜக்ஸ் வீரர் நூரி

நெதர்லாந்து முன்னணி கால்பந்து………………….

கடந்த பருவத்தில் இங்கிலாந்தின் லிவர்பூல் கழகம் போன்று நெதர்லாந்து தேசிய அணியிலும் பின்களத்தை பலப்படுத்தி அணித் தலைமையையும் ஏற்று வெளிப்படுத்திய அபார திறமை மூலம் உலகில் உள்ள சிறந்த கால்பந்து வீரர்களில் ஒருவராக தமது பெயரையும் சேர்த்துக்கொள்ள அவரால் முடிந்துள்ளது.  

எவ்வாறாயினும் 2012 ஆம் ஆண்டு இடம்பெற்ற நிகழ்வொன்று காரணமாக அவரது இந்த திறமை கால்பந்து உலகிற்கு கிடைக்காமல் போகவிருந்தமை அண்மையில் தான் தெரியவந்தது. வான் டைக் தனது தொழில்முறை கால்பந்து போட்டியை ஆரம்பித்த நெதர்லாந்தின் கிரோனின்கன் கால்பந்து கழகத்திற்காக விளையாடிக் கொண்டிருந்தபோது அதன் மேலதிக பயிற்சியாளராக செயற்பட்ட டிக் லுக்கியன் அது பற்றி கூறியிருந்தார்.       

அதாவது வான் டைக் 2012ஆம் ஆண்டில் தனது கால்பந்து வாழ்வுக்கு மாத்திரமல்ல உயிருக்கும் முற்றுப்புள்ளி வைக்கும் தருணம் ஒன்றுக்கு முகம்கொடுத்தார்

எரடவிசி லீக் தொடரில் எக்செல்சியோர் அணியுடன் இடம்பெற்ற போட்டி ஒன்றிற்குப் பின் வான் டைக் சுகவீனமுற்று வீட்டில் இருந்ததோடு எல்லோரும் அதனை சாதாரண காய்ச்சல் என்றே ஆரம்பத்தில் நினைத்திருந்தார்கள்

அவர் சுகவீனமுற்று இருந்தார். ஆனால் அது அத்தனை பாரதூரமானன ஒன்று என்று நாம் நினைத்திருக்கவில்லை. அது சாதாரண காய்ச்சல் என்றே நாம் ஆரம்பத்தில் நினைத்தோம்.” அந்த நிகழ்வு பற்றி கூற ஆரம்பிக்கும்போது லுக்கியன் இவ்வாறு தொடங்கினார்

பின்னர் அவர் அருகில் இருக்கும் மருத்துவமனைக்கு சென்றிருந்தபோதும் அவரது நோய் என்னவென்று கண்டறியப்படவில்லை

பல நாட்கள் அவர் வீட்டிலேயே இருந்தார். ஆனால் அவர் அதிக வேதனையுடன் இருந்தார். இதனால் அவர் அருகில் இருக்கும் மருத்துவமனை ஒன்றுக்கு சென்றாலும் அவர்களுக்கு அவரது நோய் பற்றி எந்த தடயத்தையும் கண்டறிய முடியாததால் அவர்கள் அவரை மீண்டும் திருப்பி அனுப்பியிருந்தார்கள் என்று அவர் மேலும் குறிப்பிட்டார்

பின்னர் வான் டைக்கின் தாய் அவரது நிலை பற்றி தெரிந்திருக்கிறார். அவ்வாறு இல்லாவிட்டால் அவரது உயிர் அத்தோடு முடிந்திருக்கும்.  

நாளுக்கு நாள் அவரது வேதனை அதிகரிக்க ஆரம்பித்தது. தொடர்ந்து அவரது தாய் அவரை பார்க்க வந்த பின்னர் தான் அவருக்கு தமது மோசமான நிலை பற்றி தெரியவந்தது. அவரது தாய் உடன் அவரை வேறு வைத்தியசாலை ஒன்றுக்கு அழைத்துச் சென்றார். அப்போது தான் அவரது நிலை எவ்வளவு மோசமானது என்று எமக்குத் தெரிந்தது.”

அப்போது மேற்கொள்ளப்பட்ட சோதனையின் மூலம் வான் டைக்கிற்கு குடல்வால் அழற்சி (Appendicitis) மற்றும் வயிற்றறை உறையழற்சி (Peritonitis) பாதிப்பு ஏற்பட்டிருப்பதும் தொடர்ந்தும் அவர் சிறுநீரக நோயினால் பாதிக்கப்பட்டிருப்பதும் தெரியவந்தது. அதன்படி மருத்துவர்கள் அவரை உடன் சத்திரசிகிச்சைக்கு உற்பத்தியிருப்பதோடு அது வெற்றி பெற்றதன் பின்னர் அவருக்கு அடுத்த ஒருசில தினங்கள் தீவிர சிகிச்சை பிரிவில் காலத்தை செலவிட வேண்டி ஏற்பட்டது.

நான் படுக்கையில் கிடந்த விதம் எனக்கு இன்றும் நன்றாக ஞாபகம் இருக்கிறது. நான் Appendicitis மற்றும் Peritonitis நோய்களால் மற்றும் சிறுநீரக பாதிப்புக்கு உள்ளாகி இருந்தேன். அவ்வாறான பெரும்பாலான நேரங்களில் நோயாளிகள் உயிரை இழந்திருக்கிறார்கள். நான் அப்படி இருக்கும்போது எனது உடலில் குழாய்கள் பொருத்தப்பட்டிருப்பது மாத்திரம் தான் எனக்குத் தெரிந்தது. எனது உடல் முழுமையாக செயலிழந்து இருந்தது. எனக்கு எதனையும் செய்ய முடியாமல் இருந்தது என்று தாம் இருந்த நிலை குறித்துக் கூறிகிறார் வான் டைக்.

கழிப்பறை சுத்தம் செய்யும் நட்சத்திர வீரர்: சாடியோ மானேயின் மறுபக்கம்

கால்பந்து மைதானத்தில் சாடியோ………………

அவர் எவ்வளவு மோசமான நிலையில் இருந்தார் என்றால் அவர் அப்போது தமது இறுதி விருப்பத்தையும் வெளியிட்டு அதில் கையொப்பம் இடும் அளவுக்கு நம்பிக்கை இழந்திருந்தார்

அவ்வாறான நேரத்தில் எந்த ஒருவருக்கும் மனதில் மிக பயங்கர எண்ணம் தோன்றும். எனது உயிர் அப்போது ஆபத்தில் இருந்தது. நான், அம்மா இருவரும் கடவுளிடம் பிரார்த்தித்தோம். அதேபோன்று எதிர்காலத்தில் ஏற்படக் கூடிய விடயங்கள் பற்றியும் பேசினோம். ஒரு சந்தர்ப்பத்தில் சில ஆவணங்களில் கையெழுத்திட வேண்டி ஏற்பட்டது. அது எனது கடைசி விருப்பம் அடங்கிய ஆவணம். நான் அதில் உயிரிழந்தால் எனது பணத்தில் ஒரு பகுதியை எனது தாய்க்கு கொடுக்க தீர்மானித்தேன். யாருக்கும் அது பற்றி பேச தேவை இருக்கவில்லை. ஆனால் அதனைச் செய்ய வேண்டி இருந்தது. ஏனென்றால் அனைத்துமே அன்று முடியவிருந்தது என்று வான் டைக் மேலும் கூறினார்.

இதன்போது அவர் தொடர்ந்து கூறும்போது முதல் முறையாக தமது வாழ்வில் கால்பந்து விளையாடத் தேவையில்லை என்று உணர்ந்ததாகக் குறிப்பிடுகிறார்.

நான் மரணத்தின் விளிம்பில் இருந்தேன். அது ஒரு பயங்கர அனுபவம். எனது வாழ்வில் முதல்முறையாக கால்பந்து விளையாட்டு எனக்குத் தேவை அல்லது எனது வாழ்வின் ஒரு பகுதி என உணரவில்லை. அதற்கு எந்த முக்கியத்துவமும் இருக்கவில்லை. ஏனென்றால் அந்த நேரத்தில் உயிர் பிழைப்பது எப்படி என்பது மாத்திரமே முக்கியமாக இருந்தது என்று அவர் கூறுகிறார்

அவரது அதிக உடற்தகைமை காரணமாகவே இந்த நிலையில் இருந்து மீண்டும் உயிர்வாழ முடிந்தது என்று அப்போது மருத்துவர்கள் என்னிடம் கூறினார்கள்என்று வான் டைக்கின் தாய் அந்த சம்பவம் குறித்து கூறும்போது தெரிவித்தார்.   

அவர் சுகம் பெற்று வந்த பின்னர் அவரைப் பார்த்து நான் அதிர்ச்சி அடைந்தேன். ஏனென்றால் திடகாத்திரமான ஒருவரிடம் இருந்து பலவீனமான ஒருவராக மாறியிருந்தார். ஆனால் அவர் மீண்டு வந்தது பற்றி அதிக மகிழ்ச்சி அடைந்தேன் என்பது எனக்கு ஞாபகம் இருக்கிறது. ஏனென்றால் அவர் போன்ற திறமையான வீரர் ஒருவர் எமக்கு கிடைக்காமல் போகும் என்று நாம் அதிக பயத்துடன் இருந்தோம் என்று வான் டைக் குணமடைந்து மீண்டும் அணிக்குத் திரும்பியது பற்றி லுக்கியன் தெரிவித்தார்.  

கொரோனா வைரஸும் கால்பந்து உலகும்

இங்கிலாந்து ப்ரீமியர் லீக், ஸ்பெயின்………………

அவ்வாறாக மரணத்தின் பிடியில் இருந்து விடுதலை பெற்று 9 ஆண்டுகள் முன்னோக்கி வந்த பின்னர் உலகின் மிகச் சிறந்த கால்பந்து வீரர்களில் ஒருவராக தமது பெயரை இணைத்திருக்கும் பிரபல வீரர் ஒருவரையே இன்று நாம் பார்க்கிறோம்.   

கிரோனிகன் கழகத்தில் அவர் வெளிப்படுத்திய திறமை மூலம் வான் டைக் 2013 ஆம் ஆண்டு ஸ்கொட்லாந்தின் பிரபல கெல்டிக் கழகத்தில் இணைந்தார். அதன் பின் இரண்டு ஆண்டுகளுக்குப் பின்னர் அவர் இங்கிலாந்து ப்ரீமியர் லீக் போட்டிகளில் சௌதம்டன் அணியுடன் இணைந்தார்.   

அங்கு மூன்று ஆண்டுகளாக வெளிப்படுத்திய அபார திறமை காரணமாக ஐரோப்பாவில் உள்ள அனைத்து கால்பந்து கழகங்களினதும் அவதானத்தை தன் மீது ஈர்க்கச் செய்த வான் டைக் 2018 ஜனவரி மாதம் 75 மில்லியன் யூரோ ஒப்பந்தத்தில் இங்கிலாந்தின் பிரபல லிவர்பூல் கழகத்துடன் இணைந்தார். அப்போது அதிக விலைபோன பின்கள வீரராகவும் அவர் சாதனை படைத்தார்

அதுவே வான் டைக்கின் கால்பந்து வாழ்வில் திருப்புமுனையாக இருந்தது. லிவர்பூல் அணிக்காக அவர் விளையாடிய முதல் போட்டியிலேயே எவர்டன் அணிக்கு எதிராக கோல் ஒன்றை பெற்று தமது அணிக்காக அந்தப் போட்டியில் வெற்றியை பெற்றுக் கொடுத்து தமது வெற்றிப் பாதையை தொடங்கினார்.  

லிவர்பூல் அணிக்காக ஆடிய முதல் பருவத்தில் அந்த அணியை ஐரோப்பிய சம்பியன்ஸ் லீக் தொடரின் இறுதிப் போட்டி வரை அழைத்துச் செல்வதில் வான் டைக் பெரும் பங்காற்றினார். அப்போது அவர்கள் இறுதிப் போட்டியில் ரியல் மெட்ரிட்டிடம் 1-3 என்ற கோல் வித்தியாசத்தில் தோல்வியடைந்தபோதும் தொடரின் ஆரம்பச் சுற்று தொடக்கம் வான் டைக் அணிக்காக பெற்றுக் கொடுத்த பங்களிப்பு அனைவரினதும் பாராட்டைப் பெற்றது.    

தொடர்ந்து 2018/19 பருவத்தில் அவரது திறமை உச்சத்தில் இருந்தது. அதில் லிவர்பூல் அணி ஐரோப்பிய சம்பியன்ஸ் லீக் கிண்ணம் மற்றும் பிஃபா கழகங்களுக்கு இடையிலான உலகக் கிண்ணத்தை வெல்வதில் அவர் பின்களத்தை பலப்படுத்திக் கொடுத்திருந்தார்.   

இரண்டரை ஆண்டுகளுக்குப்பின் கோமாவில் இருந்து திரும்பினார் அஜக்ஸ் வீரர் நூரி

நெதர்லாந்து முன்னணி கால்பந்து……………….

அதேபோன்று லிவர்பூல் தொடர்ந்து ப்ரீமியர் லீக்கில் இரண்டாவது இடத்தை பெறுவதற்கும் வான் டைக் பெரும் பங்காற்றி இருந்தார். முன்னர் பலவீனமான தற்காப்பு ஆட்டத்திற்காக அடிக்கடி விமர்சனத்திற்கு உள்ளாகிவந்த லிவர்பூல் இந்தப் பருவத்தில் 38 போட்டிகளில் எதிரணிக்கு 22 கோல்களையே விட்டுக்கொடுத்தது. இது அந்தப் பருவத்தில் ப்ரீமியர் லீக் தொடரில் அணி ஒன்று விட்டுக் கொடுத்த மிகக் குறைவான கோல்களாகவும் இருந்தது.  

மேலும் கடந்த காலங்களில் பெரும் பின்னடைவை சந்தித்து வந்த நெதர்லாந்து தேசிய கால்பந்து அணிக்கு தலைமை ஏற்று அந்த அணியை 2018/19 ஐரோப்பிய தேசிய லீக் தொடரில் இரண்டாம் இடம் வரை அழைத்துச் சென்று அவர்கள் தற்போது சார்வதேச கால்பந்து அரங்கில் வலுவான ஓர் அணியாக மாறியுள்ளனர். இதில் வான் டைக்கின் பங்களிப்பு குறிப்பிடத்தக்கதாகும்

அதேபோன்று, கடந்த பருவத்தில் எந்த ஒரு போட்டியிலும் எந்த ஒரு வீரரும் அவரை முறியடித்து பந்தைக் கடத்திச் செல்ல முடியாதது அனைவரினதும் அவதானத்தை பெற்றதோடு அது அவர் ஒரு தற்காப்பு வீரராக முழுமை பெற்றவர் என்பதை காட்டுகிறது.  

இந்தத் திறமைகள் அனைத்துக்காகவும் வான் டைக் அந்தப் பருவத்தில் ஐரோப்பாவின் ஆண்டின் சிறந்த வீரருக்கான விருதையும், இங்கிலாந்து கால்பந்து தொடரில் சிறந்த வீரருக்கான PFA ஆண்டு விருதையும், ஐரோப்பாவின் சிறந்த பின்கள வீரருக்கான விருதையும் வென்றதோடு அதனுடன் அவர் ஐரோப்பாவின் ஆண்டின் சிறந்த வீரருக்கான விருதை வென்ற முதல் பின்கள வீரராகவும், 2007-05 பருவத்தில் ஜோன் டெர்ரிக்குப் பின்னர் PFA விருதை வென்ற முதல் பின்கள வீரராகவும் அவர் வரலாறு படைத்தார்

மேலும் உலகின் சிறந்த கால்பந்து வீரருக்கு வழங்கப்படுகின்ற பல்லோன் டியோர் விருதின்போது லியோனல் மெஸ்ஸிக்கு அடுத்து இரண்டாவது இடத்தை பெறுவதற்கு அவரால் முடிந்தது. 2006 ஆம் ஆண்டு பபியோ கன்னவாரோ அந்த விருதை வென்ற பின்னர் அதன் முதல் 3 இடங்களுக்கு வந்த முதல் தற்காப்பு வீரராகவும் அவர் பதிவானார். மேலும் சிறந்த கால்பந்து வீரருக்கான பிஃபா விருதிலும் இரண்டாவது இடத்தை உறுதி செய்வதற்கு அவரால் முடிந்தது.    

கொரோனா வைரஸினால் ஸ்பெயின் கால்பந்து பயிற்சியாளர் பலி

கொரோனா வைரஸ் பாதிப்பால்………………

அவரது திறமை இந்தப் பருவத்திலும் அவ்வாறே வெளிப்பட்டது. லிவர்பூல் தற்போது 30 ஆண்டுகளின் பின் தமது முதல் ப்ரீமியர் லீக் பட்டத்தை வெல்ல நெருங்கியுள்ளது.

இங்கிலாந்தின் சிறந்த கால்பந்து கழகங்களில் ஒன்றாக கருதப்படுகின்ற லிவர்பூல் கடந்த காலங்களில் கடும் பின்னடைவை சந்தித்திருந்தபோதும் அவர்கள் தற்போது பலம்மிக்க அணி ஒன்றாக மாறியிருப்பதோடு அதற்காக பயிற்சியாளர் ஜர்கன் க்ளொப்பின் வழிகாட்டல், மொஹமது சலாஹ், சாடியோ மானே, அலிசன் பெக்கர் மற்றும் அலெக்சான்டர் ஆர்னோல்ட் போன்ற வீரர்கள் முதற்கொண்டு அணியின் பங்களிப்பு உச்சத்தில் இருந்தபோதும் பெரும்பாலான கால்பந்து விமர்சகர்களின் கருத்துப்படி, இந்த மாற்றத்திற்கு அடித்தளம் வான் டைக் அந்த அணியில் சேர்ந்ததாகும் என்கின்றனர். கடந்த காலங்களில் அவர்கள் தொடர்ச்சியாக காண்பிக்கின்ற திறமை அதற்கு சாட்சியாக உள்ளது

மரணத்தை வென்றுவந்து உலகின் சிறந்த வீரர்களில் ஒருவராக இணைந்தது வரை வான் டைக் நீண்ட பயணம் ஒன்றை வந்திருப்பதோடு அவர் காண்பிக்கின்ற திறமையை எதிர்காலத்திலும் கால்பந்து ரசிகர்களுக்கு காண முடியும் என்பதில் சந்தேகமில்லை.  

மேலும் பல கால்பந்து செய்திகளைப் படிக்க