கோல்ட்ஸ் – பதுரெலிய, விமானப்படை – களுத்துறை மோதல்கள் சமநிலையில்

131
Major Emerging Tournament

இலங்கை கிரிக்கெட் சபை உள்ளூர் கிரிக்கெட் கழகங்கள் இடையே நடாத்தும், இரண்டு நாட்கள் கொண்ட மேஜர் எமர்ஜிங் கிரிக்கெட் தொடரில் இன்று (27) இரண்டு போட்டிகள் நிறைவுக்கு வந்தன. 

கோல்ட்ஸ் கிரிக்கெட் கழகம், கொழும்பு எதிர் பதுரெலிய கிரிக்கெட் கழகம்

மக்கோன சர்ரேய் கிரிக்கெட் மைதானத்தில் நிறைவுக்கு வந்த இப்போட்டி சமநிலை அடைந்தது.

T10 லீக்கில் ஆடுகிறார் இலங்கையின் அசாதாரண சுழல் வீரர் கொத்திகொட

இலங்கை 19 வயதுக்கு உட்பட்ட தேசிய அணியின் முன்னாள் வீரர் கெவின்…

போட்டியில் முதலில் துடுப்பாடிய கோல்ட்ஸ் அணிக்கு நிஸான் மதுஷ்க (77) மற்றும் சந்துஷ் குணத்திலக்க (53) ஆகியோர் அரைச்சதங்கள் பெற்று உதவினர். இதனால், கோல்ட்ஸ் அணி தமது முதல் இன்னிங்ஸில் 312 ஓட்டங்களை பெற்றது. அதேநேரம், பதுரெலிய கிரிக்கெட் கழகம் சார்பில் யொமேஷ் ரணசிங்க 6 விக்கெட்டுக்களை சாய்த்திருந்தார். 

பின்னர் தமது முதல் இன்னிங்ஸில் துடுப்பாடிய பதுரெலிய கிரிக்கெட் கழக அணி 50.5 ஓவர்களில் அனைத்து விக்கெட்டுக்களையும் பறிகொடுத்து 166 ஓட்டங்களை மாத்திரமே பெற்றது. பதுரெலிய கிரிக்கெட் அணியின் சார்பில், லஹிரு சமரக்கோன் 46 ஓட்டங்கள் பெற, ரெஷான் தனுஷ்க கோல்ட்ஸ் அணியின் பந்துவீச்சு சார்பில் 4 விக்கெட்டுக்களை சுருட்டியிருந்தார். 

பின்னர், 146 ஓட்டங்கள் முன்னிலை பெற்றவாறு இரண்டாம் இன்னிங்ஸ் துடுப்பாட்டத்தை ஆரம்பித்த கோல்ட்ஸ் கிரிக்கெட் கழகம் இரண்டாம் இன்னிங்ஸில் 26 ஓட்டங்களுக்கு 2 விக்கெட்டுக்களை இழந்து காணப்பட்டிருந்த போது போட்டியின் ஆட்ட நேரம் நிறைவுக்கு வந்து போட்டி சமநிலை அடைந்தது. 

போட்டியின் சுருக்கம்

கோல்ட்ஸ் கிரிக்கெட் கழகம் (முதல் இன்னிங்ஸ்) – 312 (101.4) நிஷான் மதுஷ்க 77, சந்துஷ் குணத்திலக்க 53, யொமேஷ் ரணசிங்க 6/115

பதுரெலிய கிரிக்கெட் கழகம் (முதல் இன்னிங்ஸ்)- 166 (50.5) லஹிரு சமரக்கோன் 46, ரெஷான் தனுஷ்க 43/5

கோல்ட்ஸ் கிரிக்கெட் கழகம் (இரண்டாம் இன்னிங்ஸ்) – 26/2 (10.2)

முடிவு – போட்டி சமநிலை அடைந்தது. 


களுத்துறை நகர கழகம் எதிர் விமானப்படை விளையாட்டுக் கழகம்

கட்டுநாயக்கவில் உள்ள விமானப்படை கிரிக்கெட் கழகத்தின் சொந்த மைதானத்தில் இடம்பெற்ற இப்போட்டியும் சமநிலை அடைந்தது. 

போட்டியில் முதலில் துடுப்பாடிய களுத்துறை நகர கழக அணி வெறும் 99 ஓட்டங்களுக்குள் தமது முதல் இன்னிங்ஸின் அனைத்து விக்கெட்டுக்களையும் பறிகொடுத்தது. களுத்துறை அணியினை பந்துவீச்சில் மிரட்டிய நுஸ்க்கி அஹமட் விமானப்படை அணிக்காக 4 விக்கெட்டுக்களை சாய்த்தார். 

பின்னர் தமது முதல் இன்னிங்ஸில் துடுப்பாடிய விமானப்படை கிரிக்கெட் கழகம், 225 ஓட்டங்களுக்கு 8 விக்கெட்டுக்களை இழந்து காணப்பட்டிருந்த போது ஆட்டத்தை இடைநிறுத்தியது. விமானப்படை அணிக்காக லக்ஷான் பெர்னாந்து அரைச்சதம் (74) தாண்டியிருந்தார். அதேநேரம், களுத்துறை நகர கழக அணியின் பந்துவீச்சில் இசுரு பிரதீப் 4 விக்கெட்டுக்களை தனக்கு சொந்தமாக்கியிருந்தார். 

வோர்னர், மெக்ஸ்வெல் அசத்த இலங்கையை இலகுவாக வீழ்த்திய ஆஸி.

சுற்றுலா இலங்கை மற்றும் அவுஸ்திரேலிய அணிகள் இடையிலான T20i தொடரின்..

தொடர்ந்து மீண்டும் 126 ஓட்டங்கள் பின்தங்கிய நிலையில் தமது இரண்டாம் இன்னிங்ஸ் துடுப்பாட்டத்தை ஆரம்பித்த களுத்துறை நகர கழகம், 46 ஓட்டங்களுக்கு 6 விக்கெட்டுக்களை இழந்து தடுமாறிக் காணப்பட்ட போது போட்டியின் ஆட்டநேரம் நிறைவுக்கு வந்து போட்டி சமநிலை அடைந்தது. இம்முறையும் விமானப்படை அணிக்காக பந்துவீச்சில் அசத்திய நுஸ்க்கி அஹமட் மீண்டும் 4 விக்கெட்டுக்களை சாய்த்திருந்தது குறிப்பிடத்தக்கது. 

போட்டியின் சுருக்கம்

களுத்துறை நகர கழகம் (முதல் இன்னிங்ஸ்) – 99 (37) டைரோன் பாஸ்கரன் 41, ருசிரு ராஜபக்ஷ 20, நுஸ்க்கி அஹமட் 4/32

விமானப்படை விளையாட்டுக் கழகம் (முதல் இன்னிங்ஸ்) – 225/9d (58.3) லக்ஷான் பெர்னாந்து 74, ஹசின்த மல்ஷான் 47, இசுரு பிரதீப் 4/80

களுத்துறை நகர கழகம் (இரண்டாம் இன்னிங்ஸ்) – 46/6 (27.4) நுஸ்க்கி அஹமட் 4/24

முடிவு – போட்டி சமநிலை அடைந்தது. 

>> மேலும் கிரிக்கெட் செய்திகளை படிக்க <<