Home Tamil ஒருநாள் தொடரினை சமநிலைப்படுத்திய இலங்கை கிரிக்கெட் அணி

ஒருநாள் தொடரினை சமநிலைப்படுத்திய இலங்கை கிரிக்கெட் அணி

2202

சுற்றுலா இலங்கை மற்றும் ஆப்கான் அணிகள் இடையிலான இரண்டாவது ஒருநாள் போட்டியில் இலங்கை 132 ஓட்டங்களால் வெற்றி பெற்றிருப்பதோடு மூன்று போட்டிகள் கொண்ட தொடரினையும் 1-1 என சமநிலைப்படுத்தியிருக்கின்றது. 

ஆப்கானுடனான 2ஆவது ஒருநாள் போட்டியை தவறவிடும் லஹிரு குமார

தீர்மானம் கொண்ட இலங்கை – ஆப்கான் அணிகள் இடையிலான இரண்டாவது ஒருநாள் போட்டி முன்னதாக ஹம்பாந்தோட்டையில் ஆரம்பமாகியது. போட்டியின் நாணய சுழற்சியில் வெற்றி பெற்ற இலங்கை முதலில் துடுப்பாட்டத்தை தெரிவு செய்திருந்தது.

இரு அணிகளுக்கும் இடையிலான முதல் போட்டியில் ஆப்கான் வெற்றி பெற்று தொடரில் 1-0 என முன்னிலை பெற்ற நிலையில், தொடரை தக்க வைக்கும் நோக்குடன் களமிறங்கிய இலங்கை அணி நான்கு மாற்றங்களை மேற்கொண்டிருந்தது.

அதன்படி முதல் ஒருநாள் போட்டியில் ஆடிய அஞ்செலோ மெதிவ்ஸ், துஷான் ஹேமன்த, லஹிரு குமார மற்றும் மதீஷ பத்திரன ஆகியோருக்குப் பதிலாக இலங்கை குழாத்தில் சதீர சமரவிக்ரம, வனிந்து ஹஸரங்க, மகீஷ் தீக்ஷன மற்றும் துஷ்மன்த சமீர ஆகியோர் இணைக்கப்பட்டிருந்தனர்.

இலங்கை திமுத் கருணாரட்ன, பெதும் நிஸ்ஸங்க, குசல் மெண்டிஸ், சதீர சமரவிக்ரம, சரித் அசலன்க, தனன்ஞய டி சில்வா, தசுன் ஷானக்க (அணித்தலைவர்), வனிந்து ஹஸரங்க, துஷ்மன்த சமீர, மகீஷ் தீக்ஷன, கசுன் ராஜித

ஆப்கானிஸ்தான் ஹஸ்மத்துல்லா சஹிதி (தலைவர்), ரஹ்மத் சாஹ், றஹ்மானுல்லா குர்பாஸ், இப்ராஹிம் சத்ரான், நஜிபுல்லா சத்ரான், மொஹமட் நபி, அஷ்மத்துல்லா ஓமர்சாய், முஜிபுர் ரஹ்மான், நூர் அஹ்மட், பசால்ஹக் பரூக்கி, பரீட் அஹ்மட்

இதன் பின்னர் நாணய சுழற்சிற்கு அமைய துடுப்பாட்டத்தினை ஆரம்பித்த இலங்கை அணி பெதும் நிஸ்ஸங்க மற்றும் திமுத் கருணாரட்ன மற்றும் சிறந்த அடித்தளம் ஒன்றைப் பெற்றது. அணியின் முதல் விக்கெட் இணைப்பாட்டமாக 87 ஓட்டங்கள் பெறப்பட்டதோடு, இலங்கை அணியின் முதல் விக்கெட்டாக ஆட்டமிழந்த பெதும் நிஸ்ஸங்க 43 ஓட்டங்கள் எடுத்தார். இதன் பின்னர் திமுத் கருணாரட்ன ஒருநாள் போட்டிகளில் தன்னுடைய 7ஆவது அரைச்சதத்துடன் இலங்கை தரப்பினை பலப்படுத்தினார்.

தொடர்ந்த ஆட்டத்தில் சீரான இடைவெளிகளில் விக்கெட்டுக்களை பறிகொடுத்த இலங்கை வீரர்கள் சார்பில் சதீர சமரவிக்ரம – குசல் மெண்டிஸ் ஜோடி மூன்றாம் விக்கெட் இணைப்பாட்டமாக 88 ஓட்டங்களைப் பகிர்ந்தது. இந்த இணைப்பாட்டத்தின் நிறைவாக ஆட்டமிழந்த சதீர சமரவிக்ரம 46 பந்துகளில் 5 பௌண்டரிகள் அடங்கலாக 44 ஓட்டங்கள் பெற்றார்.

பின்னர் குசல் மெண்டிஸ் சற்று அதிரடியாக ஆடத் தொடங்கியதோடு மத்திய வரிசையில் வனிந்து ஹஸரங்க மற்றும் தனன்ஞய டி சில்வா ஆகியோரும் சிறப்பாக செயற்பட்டனர். இதனால் இலங்கை 50 ஓவர்கள் நிறைவில் 6 விக்கெட்டுக்களை இழந்து 326 ஓட்டங்கள் எடுத்தது.

இலங்கை அணியின் துடுப்பாட்டம் சார்பில் தன்னுடைய 20ஆவது ஒருநாள் அரைச்சதத்தோடு குசல் மெண்டிஸ் 75 பந்துகளில் ஒரு சிக்ஸர் மற்றும் 7 பௌண்டரிகள் அடங்கலாக 78 ஓட்டங்கள் பெற்றார். அதேநேரம் ஆட்டமிழக்காது இருந்த வனிந்து ஹஸரங்க 12 பந்துகளில் 29 ஓட்டங்களையும், தனன்ஞய டி சில்வா 24 பந்துகளில் 29 ஓட்டங்களையும் பெற்றனர்.

ஆப்கான் பந்துவீச்சில் பரீட் அஹ்மட் மற்றும் மொஹமட் நபி ஆகியோர் தலா 2 விக்கெட்டுக்கள் வீதம் சுருட்டியிருந்தமை குறிப்பிடத்தக்கது.

இலங்கை அணியின் முதல் இன்னிங்ஸை அடுத்து போட்டியின் வெற்றி இலக்காக நிர்ணயிக்கப்பட்ட 326 ஓட்டங்களை 50 ஓவர்களில் அடைய தமது இரண்டாம் இன்னிங்ஸை தொடங்கிய ஆப்கானிஸ்தான் அணி சிறந்த ஆரம்பம் ஒன்றை பெற்ற போதும் தனன்ஞய டி சில்வா மற்றும் வனிந்து ஹஸரங்க ஆகியோரின் சுழல் மூலம் பின்னர் தடுமாறத் தொடங்கியது.

அதன்படி ஒரு கட்டத்தில் 146 ஓட்டங்களுக்கு 3 விக்கெட்டுக்களை இழந்து காணப்பட்ட ஆப்கானிஸ்தான் இலங்கை சுழல்வீரர்களை சமாளிக்க முடியாமல் 42.1 ஓவர்களுக்கு அனைத்து விக்கெட்டுக்களையும் இழந்து 191 ஓட்டங்களை மாத்திரம் எடுத்து போட்டியில் தோல்வியினைத் தழுவியது.

>>சத்ரானின் ஆட்டத்தோடு ஆப்கான் ஒருநாள் தொடரில் முன்னிலை<<

ஆப்கான் அணியின் துடுப்பாட்டம் சார்பில் அதிகபட்சமாக அதன் தலைவர் ஹஸ்மத்துல்லா சஹிதி 62 பந்துகளில் 6 பௌண்டரிகள் அடங்கலாக 57 ஓட்டங்கள் எடுக்க, இப்ராஹிம் சத்ரான் 75 பந்துகளில் 54 ஓட்டங்களை எடுத்திருந்தார்.

இலங்கை அணியின் பந்துவீச்சில் வனிந்து ஹஸரங்க மற்றும் தனன்ஞய டி சில்வா ஆகியோர் தலா 3 விக்கெட்டுக்கள் வீதம் கைப்பற்றி தமது தரப்பு வெற்றியினை உறுதி செய்ய, துஷ்மன்த சமீரவும் 2 விக்கெட்டுக்களை கைப்பற்றி தமது தரப்பு வெற்றியை உறுதி செய்தார். இப்போட்டியின் வெற்றி மூலம் இலங்கை ஒருநாள் போட்டிகளில் 400ஆவது வெற்றியினைப் பதிவு செய்தது. போட்டியின் ஆட்டநாயகன் விருது இலங்கை அணிக்காக சகலதுறைகளிலும் பிரகாசித்த தனன்ஞய டி சில்வா பெற்றுக் கொண்டார்.

இனி இலங்கை – ஆப்கான் அணிகள் இடையிலான ஒருநாள் தொடரினை தீர்மானிக்கும் மூன்றாவதும் இறுதியுமான ஒருநாள் போட்டி எதிர்வரும் புதன்கிழமை (07) நடைபெறுகின்றது.

போட்டியின் சுருக்கம்

Result


Sri Lanka
323/6 (50)

Afghanistan
191/10 (42.1)

Batsmen R B 4s 6s SR
Pathum Nissanka lbw b Mohammad Nabi 43 56 6 0 76.79
Dimuth Karunaratne lbw b Noor Ahmad 52 62 7 0 83.87
Kusal Mendis c Rahmanullah Gurbaz b Fareed Ahmad 78 75 7 1 104.00
Sadeera Samarawickrama b Mujeeb ur Rahman 44 46 5 0 95.65
Charith Asalanka lbw b Mohammad Nabi 6 12 0 0 50.00
Dhananjaya de Silva not out 29 24 1 1 120.83
Dasun Shanaka c Rahmanullah Gurbaz b Fareed Ahmad 23 13 2 1 176.92
Wanindu Hasaranga not out 29 12 4 1 241.67


Extras 19 (b 6 , lb 3 , nb 0, w 10, pen 0)
Total 323/6 (50 Overs, RR: 6.46)
Fall of Wickets 1-82 (15.5) Pathum Nissanka, 2-110 (22.3) Dimuth Karunaratne, 3-198 (36.5) Sadeera Samarawickrama, 4-213 (39.5) Charith Asalanka, 5-254 (43.4) Kusal Mendis, 6-288 (47.1) Dasun Shanaka,

Bowling O M R W Econ
Fazal Haq Farooqi 7 0 44 0 6.29
Azmatullah Omarzai 5 0 48 0 9.60
Mujeeb ur Rahman 10 0 39 1 3.90
Fareed Ahmad 9 0 61 2 6.78
Mohammad Nabi 10 0 52 2 5.20
Noor Ahmad 9 0 70 1 7.78


Batsmen R B 4s 6s SR
Rahmanullah Gurbaz c Kusal Mendis b Dushmantha Chameera 2 12 0 0 16.67
Ibrahim Zadran c Kusal Mendis b Dhananjaya de Silva 54 75 2 2 72.00
Rahmat Shah lbw b Dasun Shanaka 36 42 3 0 85.71
Hashmatullah Shahidi lbw b Dhananjaya de Silva 57 62 6 0 91.94
Najibullah Zadran c Pathum Nissanka b Dhananjaya de Silva 2 8 0 0 25.00
Mohammad Nabi c Kusal Mendis b Dushmantha Chameera 2 5 0 0 40.00
Azmatullah Omarzai c Dasun Shanaka b Mahesh Theekshana 28 31 4 1 90.32
Noor Ahmad b Wanindu Hasaranga 3 7 0 0 42.86
Mujeeb ur Rahman lbw b Wanindu Hasaranga 0 2 0 0 0.00
Fareed Ahmad b Wanindu Hasaranga 0 5 0 0 0.00
Fazal Haq Farooqi not out 0 4 0 0 0.00


Extras 7 (b 0 , lb 2 , nb 0, w 5, pen 0)
Total 191/10 (42.1 Overs, RR: 4.53)
Fall of Wickets 1-11 (3.2) Rahmanullah Gurbaz, 2-62 (15.4) Rahmat Shah, 3-146 (30.3) Ibrahim Zadran, 4-157 (32.5) Najibullah Zadran, 5-160 (33.5) Mohammad Nabi, 6-160 (34.1) Hashmatullah Shahidi, 7-169 (37.1) Noor Ahmad, 8-169 (37.3) Mujeeb ur Rahman, 9-191 (41.2) Fareed Ahmad, 10-191 (42.1) Azmatullah Omarzai,

Bowling O M R W Econ
Kasun Rajitha 5 0 26 0 5.20
Dushmantha Chameera 7 0 18 2 2.57
Mahesh Theekshana 7.1 0 35 1 4.93
Dasun Shanaka 4 0 29 1 7.25
Wanindu Hasaranga 9 2 42 3 4.67
Dhananjaya de Silva 10 0 39 3 3.90



 >>மேலும் கிரிக்கெட் செய்திகளைப் படிக்க<<