Home Tamil நியூசிலாந்தை வீழ்த்தி உலகக் கிண்ண அரையிறுதி வாய்ப்பை தக்கவைத்த பாகிஸ்தான்

நியூசிலாந்தை வீழ்த்தி உலகக் கிண்ண அரையிறுதி வாய்ப்பை தக்கவைத்த பாகிஸ்தான்

244

கிரிக்கெட் உலகக் கிண்ணத் தொடரின் 33ஆவது லீக் போட்டியில், பாகிஸ்தான் அணி பலம் மிக்க நியூசிலாந்து அணியினை 6 விக்கெட்டுகளால் தோற்கடித்து தமது அரையிறுதி வாய்ப்பை தக்கவைத்துள்ளது.

ஜிம்பாப்வே தொடருக்கான அயர்லாந்து குழாம் அறிவிப்பு

ஜிம்பாப்வே கிரிக்கெட் அணியானது அயர்லாந்து நாட்டுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டு அங்கு அயர்லாந்து கிரிக்கெட்…

பர்மிங்கமில் நேற்று (26) நடைபெற்ற இப்போட்டி மழை காரணமாக சற்று தாமதித்து ஆரம்பித்திருந்தது. போட்டியின் நாணய சுழற்சியில் வென்ற நியூசிலாந்து அணியின் தலைவர் கேன் வில்லியம்சன் முதலில் துடுப்பாடும் சந்தர்ப்பத்தை தனது தரப்பிற்காக தெரிவு செய்து கொண்டார்.

இந்த உலகக் கிண்ணத் தொடரில் எந்த தோல்விகளையும் சந்திக்காத நியூசிலாந்து அணி, மேற்கிந்திய தீவுகள் அணிக்கு எதிரான தமது கடைசிப் போட்டியில் வெற்றி பெற்ற வண்ணம் இப்போட்டியில் மாற்றங்கள் ஏதுமின்றி விளையாடியது.

நியூசிலாந்து அணி

மார்டின் கப்டில், கொலின் மன்ரோ, கேன் வில்லியம்சன் (அணித் தலைவர்), ரொஸ் டெய்லர், டொம் லேதம், ஜேம்ஸ் நீஷம், கொலின் டி கிரான்ட்ஹோமே, மிச்செல் சான்ட்னர், மேட் ஹென்ரி, லொக்கி பெர்குஸன், ட்ரென்ட் போல்ட் 

இதேநேரம், உலகக் கிண்ண அரையிறுதிச் சுற்று வாய்ப்பை எதிர்பார்த்திருக்கும் பாகிஸ்தான் அணியும், தமது கடைசி உலகக் கிண்ண மோதலில் தென்னாபிரிக்க அணிக்கு எதிராக வெற்றி பெற்ற நிலையில் இப்போட்டியில் கட்டாய வெற்றி ஒன்றினை எதிர்பார்த்து  மாற்றங்கள் எதனையும் மேற்கொள்ளவில்லை.

கெயில் ஓய்வு பெறுவதாக எடுத்த முடிவில் மாற்றம்

தற்போது நடைபெற்று வரும் கிரிக்கெட் உலகக் கிண்ணத்தோடு ஒருநாள் போட்டிகளில் இருந்த…

பாகிஸ்தான் அணி

இமாம்-உல்-ஹக், பக்கார் சமான், பாபர் அசாம், மொஹமட் ஹபீஸ், ஹரிஸ் சொஹைல், சர்பராஸ் அஹ்மட் (அணித் தலைவர்), இமாத் வஸீம், சதாப் கான், வஹாப் ரியாஸ், மொஹமட் ஆமீர், சஹீன் அப்ரிடி 

பின்னர் நாணய சுழற்சி முடிவுகளுக்கு அமைவாக துடுப்பாட்டத்தை ஆரம்பித்த நியூசிலாந்து அணிக்கு சிறந்த ஆரம்பம் அமையவில்லை. நியூசிலாந்து அணியின் முதல் விக்கெட்டாக மார்டின் கப்டில் வெறும் 5 ஓட்டங்கள் பெற்ற நிலையில் மொஹமட் ஆமிரினால் போல்ட் செய்யப்பட்டு ஆட்டமிழக்க, ஏனைய ஆரம்ப துடுப்பாட்ட வீரரான கொலின் மன்ரோ 12 ஓட்டங்களை மாத்திரமே பெற்றார். 

இதன் பின்னர் நியூசிலாந்து அணியின் முன்வரிசை துடுப்பாட்ட வீரர்களான ரொஸ் டெய்லர் (3), டொம் லேதம் (1) ஆகியோரும் பாகிஸ்தான் அணியின் பந்துவீச்சினை சமாளிக்க முடியாமல் பத்து ஓட்டங்களுக்குள் ஆட்டமிழந்து சென்றனர். இதனால், நியூசிலாந்து அணி ஒரு கட்டத்தில் 46 ஓட்டங்களுக்கு 4 விக்கெட்டுகளை இழந்து தடுமாறியது. 

இதனை அடுத்து நியூசிலாந்து அணிக்காக அதன் தலைவர் கேன் வில்லியம்சன் 41 ஓட்டங்கள் பெற்று சிறிய போராட்டம் காண்பித்திருந்தார். அவரின் விக்கெட்டினை அடுத்து அவ்வணி மீண்டும் 83 ஓட்டங்களுக்கு 5 விக்கெட்டுகளை இழந்து தடுமாறியது. 

இந்நிலையில் நியூசிலாந்து அணியின் ஆறாம் விக்கெட்டுக்காக ஜோடி சேர்ந்த ஜேம்ஸ் நீஷம் மற்றும் கொலின் டி கிரான்ட்ஹோமே ஜோடி, நிதானமான முறையில் துடுப்பாடியது. இதனால், இரண்டு வீரர்கள் மூலமும் நியூசிலாந்து அணியின் ஆறாம் விக்கெட்டுகாக 132 ஓட்டங்கள் பகிரப்பட்டன.

இறுதி டி20 யில் சுப்பர் ஓவரில் வெற்றியை தனதாக்கிய ஜிம்பாப்வே

இரு அணிகளின் கைகளுக்கும் மாறி மாறி சென்ற போட்டியில் இறுதியில் அமைந்த இலகு வெற்றியை கைவிட்ட ஜிம்பாப்பே அணி சுப்பர்…

இந்த இணைப்பாட்டத்துடன் சரிவிலிருந்து மீண்டு கொண்ட நியூசிலாந்து அணி, 50 ஓவர்கள் நிறைவில் 6 விக்கெட்டுகளை இழந்து 237 ஓட்டங்களை பெற்று பாரிய சரிவில் இருந்து மீண்டு கொண்டது.

நியூசிலாந்து அணியின் துடுப்பாட்டத்தில் ஜேம்ஸ் நீஷம் அவரின் 6ஆவது அரைச்சதத்தோடு 3 சிக்ஸர்கள் மற்றும் 5 பெளண்டரிகள் அடங்கலாக 97 ஓட்டங்கள் பெற்று ஆட்டமிழக்காமல் இருந்தார். மேலும், இது ஜேம்ஸ் நீஷம் ஒருநாள் போட்டி ஒன்றில் பெற்றுக் கொண்ட அதிகூடிய ஓட்டங்களாகவும் அமைந்தது. 

இதேநேரம், இந்த உலகக் கிண்ணத் தொடரில் தனது இரண்டாவது தொடர்ச்சியான அரைச்சதம் பெற்ற கொலின் டி கிரான்ட்ஹோமே 71 பந்துகளில் 6 பெளண்டரிகள் மற்றும் ஒரு சிக்ஸர் அடங்கலாக 64 ஓட்டங்களை குவித்திருந்தார்.

மறுமுனையில் பாகிஸ்தான் அணியின் பந்துவீச்சு சார்பில் சஹீன் அப்ரிடி வெறும் 28 ஓட்டங்களுக்கு 3 விக்கெட்டுகளை சாய்க்க, மொஹமட் ஆமீர் மற்றும் சதாப் கான் ஆகியோர் தலா ஒரு விக்கெட் வீதம் சுருட்டியிருந்தனர்.

இதன் பின்னர் போட்டியின் வெற்றி இலக்காக நிர்ணயம் செய்யப்பட்ட 238 ஓட்டங்களை அடைய பதிலுக்கு துடுப்பாடிய பாகிஸ்தான் அணிக்கு அதன் ஆரம்ப துடுப்பாட்ட வீரர்களான பக்கார் சமான் (9), இமாம்-உல்-ஹக் (19) ஆகியோர் ஏமாற்றம் தந்தனர். இதனை அடுத்து சீரான இடைவெளியில் தமது மூன்றாம் விக்கெட்டாக மொஹமட் ஹபீஸினை பாகிஸ்தான் அணி பறிகொடுத்தது. மொஹமட் ஹபீஸ் 32 ஓட்டங்களை பெற்றிருந்ததார். 

இதன் பின்னர் பாகிஸ்தான் அணிக்காக பாபர் அசாம் மற்றும் ஹரிஸ் சொஹைல் ஆகியோர் மிகச் சிறந்த இணைப்பாட்டத்தை (126) வெளிப்படுத்தினர். இதனால், பாகிஸ்தான் அணி போட்டியின் வெற்றி இலக்கினை 49.1 ஓவர்களில் 4 விக்கெட்டுகளை 241 ஓட்டங்களுடன் அடைந்தது.

பாகிஸ்தான் அணிக்கு அவ்வணி வெற்றியினை பெற உதவிய பாபர் அசாம் அவரின் 10ஆவது ஒருநாள் சதத்தோடு 127 பந்துகளில் 11 பெளண்டரிகள் அடங்கலாக 101 ஓட்டங்களுடன் ஆட்டமிழக்காமல் இருந்தார். பாபர் அசாம் இந்த உலகக் கிண்ணத் தொடரில் ஏற்கனவே இரண்டு அரைச்சதங்கள் பெற்றிருந்ததும் குறிப்பிடத்தக்கது. 

பாகிஸ்தான் அணியின் வெற்றிக்கு உதவிய ஏனைய வீரரான ஹரிஸ் சொஹைல் அவரின் 12ஆவது ஒருநாள் அரைச்சதத்துடன் 2 சிக்ஸர்கள் மற்றும் 5 பெளண்டரிகள் அடங்கலாக 68 ஓட்டங்களை பெற்றிருந்தார். இது ஹரிஸ் சொஹைலிற்கு இந்த உலகக் கிண்ணத் தொடரில் இரண்டாவது தொடர்ச்சியான அரைச்சதமாகவும் அமைந்தது.

நியூசிலாந்து அணியின் பந்துவீச்சு சார்பில் ட்ரென்ட் போல்ட், லொக்கி பெர்குஸன் மற்றும் அணித்தலைவர் கேன் வில்லியம்சன் ஆகியோர் தலா ஒரு விக்கெட் வீதம் கைப்பற்றியிருந்தது குறிப்பிடத்தக்கது.

போட்டியின் ஆட்ட நாயகனாக பாகிஸ்தான் அணியின் பாபர் அசாம் அவரின் சிறந்த துடுப்பாட்டத்திற்காக தெரிவாகினார்.

இப்போட்டியில் கிடைத்த வெற்றியோடு இந்த உலகக் கிண்ணத்தில் 7 போட்டிகளில் ஆடி 3 வெற்றிகளுடன் 7 புள்ளிகள் பெற்றுள்ள பாகிஸ்தான் அணி இன்னும் 2 போட்டிகள் எஞ்சியிருப்பதால் தமது உலகக் கிண்ண அரையிறுதி வாய்ப்பினை தொடர்ந்தும் தக்கவைத்துள்ளது. பாகிஸ்தான் அணி தமது அடுத்த உலகக் கிண்ண மோதலில் ஆப்கானிஸ்தான் அணியினை எதிர்வரும் சனிக்கிழமை (29) லீட்ஸ் நகரில் வைத்து எதிர்கொள்கின்றது.

மறுமுனையில் இப்போட்டி மூலம் இந்த உலகக் கிண்ணத் தொடரில் முதல் தடவையாக தோல்வியினை தழுவியிருக்கும் நியூசிலாந்து அணி தமது அடுத்த உலகக் கிண்ண மோதலில் அவுஸ்திரேலிய அணியினை சனிக்கிழமை (29) லண்டன் லோர்ட்ஸ் மைதானத்தில் வைத்து எதிர்கொள்கின்றது.

>>மேலும் பல கிரிக்கெட் செய்திகளைப் படிக்க<<

போட்டியின் சுருக்கம்

Upcoming


New Zealand

Pakistan




முடிவு – பாகிஸ்தான் அணி 6 விக்கெட்டுகளால் வெற்றி