என்னை சிறு பையன் என நினைக்க வேண்டாம்: நசீம் ஷா

253

இங்கிலாந்து அணிக்கெதிராக நடைபெறவுள்ள தொடரில் தன்னை சிறு பையனாக நினைத்தால் அது அந்த அணிக்கு மிகப் பெரிய இழப்பாகும் எனவும், வயதைக் காட்டிலும் பந்துவீச்சு தான் முக்கியம் எனவும் பாகிஸ்தான் கிரிக்கெட் அணியில் இடம்பெற்றுள்ள 17 வயதான இளம் வேகப் பந்துவீச்சாளரான நசீம் ஷா தெரிவித்துள்ளார்.   

கொரோனா வைரஸ் காரணமாக கிரிக்கெட் விளையாட்டு முற்றிலும் முடங்கி உள்ளது. இங்கிலாந்து அணி மட்டுமே முதல் அணியாக சர்வதேச கிரிக்கெட் தொடர்களை நடத்த முன்வந்துள்ளது.  

பாகிஸ்தான் வீரர்களுக்கு லாகூரில் கொரோனா பரிசோதனை

முதலில், மேற்கிந்திய தீவுகள் அணியுடனும், தொடர்ந்து பாகிஸ்தான் அணியுடனும் கிரிக்கெட் தொடர்களில் இங்கிலாந்து அணி விளையாட உள்ளது. 

இந்த நிலையில், கொரோனா வைரஸுக்கு மத்தியில் பாகிஸ்தான் அணி எதிர்வரும் 28ஆம் திகதி இங்கிலாந்துக்கான சுற்றுப்பயணத்தை மேற்கொள்ள உள்ளது. 

இதற்கான 29 பேர் கொண்ட பாகிஸ்தான் அணியில் இளம் வேகப் பந்துவீச்சாளர் நசீம் ஷா இடம்பெற்றுள்ளார். அவர் இங்கிலாந்துக்கு முதல் முறையாக சுற்றுப்பயணம் மேற்கொள்ள உள்ளமை மற்றுமொரு சிறப்பம்சமாகும்

இந்த நிலையில், இங்கிலாந்து டெஸ்ட் தொடர் குறித்து அவரிடம் கேட்கப்பட்டது. அப்போது அவர், தன்னை சின்னப் பையன் என கருதினால், அது அவர்களுக்கு பெரிய ஷ்டம்

மேலும், வயது என்பது ஒரு விடயமே இல்லை. பந்துவீச்சு தான் முக்கியம். எனவே, அவர்கள் என்னை தீவிரமாக எடுத்துக் கொள்ள வேண்டும்” எனவும் கூறி உள்ளார்

இத்தனைக்கும் இங்கிலாந்து வீரர்களில் ஜோ ரூட் தவிர மற்றவர்கள் பெயர்கள் கூட தனக்கு தெரியாது என்றும் அவர் கூறியுள்ளார்

“இங்கிலாந்தில் உள்ள ஆடுகளங்களில் வேகம் முக்கியமானது. அதிகபட்ச வேகத்தை அடைய நான் தொடர்ந்து முயற்சிகளை மேற்கொள்வேன். அதற்கு மேல், அந்த வேகத்தில் பந்தை வீசுவதற்கும் முயற்சிப்பேன். அதில் நான் வெற்றி பெற்றால், அது நிச்சயமாக துடுப்பாட்ட வீரர்களுக்கு அழுத்தம் கொடுக்கும்

மேலும், பல புகழ்பெற்ற துடுப்பாட்ட வீரர்களை அவர்களின் வேகத்தாலும், ஆக்கிரமிப்பினாலும் கிரிக்கெட் உலகில் சாதனை படைத்தவர்களை நான் பின்பற்ற விரும்புகிறேன். உலகின் முதல் மூன்று வேகப் பந்துவீச்சாளர்களில் ஒருவராக நான் வெளிவர விரும்புகிறேன்.  

அதேபோல, பாகிஸ்தான் அணியின் ஒரு சிறந்த பயிற்சியாளராக இருந்த வகார் யூனிஸை விட எனக்கு சிறந்த பயிற்சியாளர் இருக்க மாட்டார் என்று நான் நம்புகிறேன்” என அவர் தெரிவித்தார்

இதனிடையே, கடந்த சில நாட்களுக்கு முன்பு தான் விராட் கோஹ்லியை கண்டு பயப்பட மாட்டேன். அவருக்கு எதிராக சிறப்பாக பந்துவீசுவேன் எனவும் இவர் கூறி இருந்தார்

பாகிஸ்தான் டெஸ்ட் அணியில் மீண்டும் இடம்பிடித்த வஹாப் ரியாஸ்

6 அடி 6 அங்கும் உயரம் கொண்ட 17 வயதான நசீம் ஷா கடந்த வருடம் அவுஸ்திரேலிய மண்ணில் டெஸ்ட் தொடரில் அறிமுகமானார்.  

அப்போது அவர் மீது பெரும் எதிர்பார்ப்பு இருந்தது. ஆனால், அவர் பெரிய அளவில் திறமைகளை வெளிப்படுத்தவில்லை

பின்னர் பாகிஸ்தான் மண்ணில் இலங்கை அணிக்கு எதிரான டெஸ்ட் தொடரில் பங்கேற்றார். அந்த தொடரில் அவர் ஒரே இன்னிங்ஸில் ஐந்து விக்கெட் வீழ்த்தி மிக இளம் வயதில் ஐந்து விக்கெட் வீழ்த்திய பந்துவீச்சாளர் என்ற சாதனையை நிகழ்த்தினார்

நசீம் ஷா இதுவரை 4 டெஸ்ட் போட்டிகளில் விளையாடி, 13 விக்கெட்டுக்கள் வீழ்த்தி உள்ளமை குறிப்பிடத்தக்கது. 

 >> மேலும் பல கிரிக்கெட் செய்திகளைப் படிக்க <<