பாகிஸ்தான் அணிக்காக மீண்டும் விளையாட ஆமிர் தயார்

177
mohammad amir
Image Courtesy - AFP

சர்வதேச கிரிக்கெட்டிலிருந்து ஓய்வு பெறுவதாக பாகிஸ்தான் கிரிக்கெட் அணியின் நட்சத்திர வேகப் பந்துவீச்சாளர் மொஹமட் ஆமிர் கடந்த வருடம் டிசம்பர் 15ஆம் திகதி திடீரென அறிவித்தார்.  

இந்நிலையில் பாகிஸ்தான் கிரிக்கெட் அணியின் தலைமைப் பயிற்சியாளர் மிஸ்பா உல் ஹக், பந்துவீச்சுப் பயிற்சியாளர் வகார் யூனுஸ் உள்ளிட்ட தற்போதைய அணி முகாமைத்துவம் மாறினால் மீண்டும் பாகிஸ்தான் அணிக்காக விளையாடத் தயாராக இருப்பதாக மொஹமட் ஆமிர் கூறியுள்ளார்.  

>> பாகிஸ்தான் மண்ணில் 14 வருடங்களின் பின் தென்னாரிக்கா அணி

கடந்த 2010இல் பாகிஸ்தான் அணி, இங்கிலாந்தில் சுற்றுப் பயணம் செய்து விளையாடியபோது அப்போதைய பாகிஸ்தான் அணித் தலைவர் சல்மான் பட், மொஹமட் ஆசிப், மொஹமட் ஆமிர் ஆகியோர் ஆட்டநிர்ணயத்தில் ஈடுபட்டதாகக் கைது செய்யப்பட்டனர். பின்னர் .சி.சி குறித்த வீரர்கள் மூவருக்கும் தடை விதித்தது

இவர்களில் மொஹமட் ஆமிர் 5 வருடகால தண்டனைக் காலத்தை நிறைவு செய்ததைத் தொடர்ந்து 2016இல், இங்கிலாந்துக்கு எதிராக மீண்டும் டெஸ்ட் கிரிக்கெட் விளையாட ஆரம்பித்தார்

இதனிடையே, ஒருநாள் மற்றும் T20 போட்டிகளில் மாத்திரம் அதிக கவனம் செலுத்துவதற்காக தன்னுடைய 27ஆவது வயதில், டெஸ்ட் கிரிக்கெட்டிலிருந்து ஓய்வு பெறுவதாக மொஹமட் ஆமிர் அறிவித்தார்

இதனிடையே, மொஹமட் ஆமிர் இறுதியாக நடைபெற்ற நியூஸிலாந்துக்கான சுற்றுப்பயணத்தில் இடம்பெறவில்லை. போதியளவு திறமைகளை வெளிப்படுத்தாத காரணத்தால் மொஹமட் ஆமிரை அணியில் இணைத்துக் கொள்ளவில்லை என மிஸ்பா உல் ஹக் உள்ளிட்ட அந்நாட்டு தேர்வுக்குழு தெரிவித்தது.   

>> Video – Lahiru Thirimanne சதமடித்தும் இலங்கைக்கு ஏன் தோல்வி? | Sports Roundup – Epi 145

இதனையடுத்து, இலங்கையில் கடந்த டிசம்பர் மாதம் நடைபெற்ற லங்கா ப்ரீமியர் லீக்கில் பங்கேற்ற பிறகு தற்போதைய நிர்வாகத்தின் தலைமையில் தன்னால் விளையாட முடியாது என மொஹமட் ஆமிர் அறிக்கை வெளியிட்டு சர்வதேச கிரிக்கெட்டிலிருந்துய்வு பெறுவதாக அறிவித்தார்.  

ஓய்வு அறிவிப்பு தொடர்பாக அவர் வெளியிட்டிருந்த வீடியோ பதிவில்,உண்மையாக, இந்த நிர்வாகத்தின் தலைமையில் என்னால் கிரிக்கெட் ஆட்டங்களில் விளையாட முடியாது. நான் கிரிக்கெட்டை விட்டு தற்போது விலகுகிறேன். என்னைக் கொடுமைப்படுத்தியுள்ளார்கள். என்னால் இதை எதிர்கொள்ள முடியவில்லை. 2010-15 வரை எல்லாம் பார்த்துவிட்டேன்

எல்லோரும் நாட்டுக்காக விளையாட ஆசைப்படுவார்கள். உலகம் முழுக்க உள்ள T20 லீக்குகளில் விளையாடுவதற்காக டெஸ்ட் கிரிக்கெட்டிலிருந்து விலகியுள்ளதாக அவர்கள் கூறுகிறார்கள்.  

பிக்பேஷ் லீக் போட்டியில் விளையாடி, மீண்டும் கிரிக்கெட்டுக்குத் திரும்பினேன். லீக்குகளில் விளையாட எனக்கு ஆர்வம் என்றால் பாகிஸ்தானுக்கு விளையாட விருப்பம் இல்லை என்று கூறியிருப்பேன். ஒவ்வொரு மாதமும் யாராவது ஒருவர் ஆமிர், நம்மைப் புறக்கணித்துவிட்டார் எனக் கூறுகிறார்கள் என்றார்

>> ஆசிய கிண்ணமா? டெஸ்ட் சம்பியன்ஷிப்பா? குழப்பத்தில் இந்தியா

இதனையடுத்து சர்வதேச கிரிக்கெட்டிலிருந்து மொஹமட் ஆமிர் ஓய்வு பெற்றதை பாகிஸ்தான் கிரிக்கெட் சபையும் உறுதி செய்தது

இந்நிலையில், தற்போதைய மிஸ்பா உல் ஹக் தலைமையிலான நிர்வாகம் பதவியை விட்டு விலகினால் பாகிஸ்தான் அணிக்காக மீண்டும் விளையாடத் தயாராக உள்ளேன். எனவே தவறான செய்திகளைப் பரப்ப வேண்டாம் என்று தனது டுவிட்டரில் பதிவொன்றை வெளியிட்டுள்ளார்.

28 வயதான ஆமிர், பாகிஸ்தான் அணிக்காக 36 டெஸ்ட் போட்டிகள், 61 ஒருநாள், 50 T20 போட்டிகளில் விளையாடியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

>> மேலும் பல கிரிக்கெட் செய்திகளைப் படிக்க <<