பாகிஸ்தான் டெஸ்ட் அணியில் மீண்டும் இடம்பிடித்த வஹாப் ரியாஸ்

132

டெஸ்ட் போட்டிகளில் இருந்து தற்காலிகமாக விலகியிருந்த பாகிஸ்தான் அணியின் அனுபவ வேகப்பந்துவீச்சாளரான வஹாப் ரியாஸ் இங்கிலாந்து டெஸ்ட் தொடருக்கான பாகிஸ்தான் அணியில் மீண்டும் இணைத்துக் கொள்ளப்பட்டுள்ளார்.

பாகிஸ்தான் கிரிக்கெட் சபை விடுத்திருந்த கோரிக்கைக்கு அமையவே தான் இந்த முடிவை எடுத்ததாக அவர் மேலும் தெரிவித்தார்.  

இங்கிலாந்து தொடரில் அனுபவமிக்க பந்து வீச்சாளர்கள் பற்றாக்குறையால் வஹாப் ரியாஸின் ஓய்வு அறிவிப்பைத் திரும்பப் பெற்றுக்கொள்ள பாகிஸ்தான் அணி நிர்வாகம் கோரிக்கை விடுத்தது. அதன்படி அவர் ஓய்வு அறிவிப்பைத் திரும்பப்பெற்றுக் கொண்டு இங்கிலாந்து தொடரிலும் இடம்பெற்றுள்ளார்.

வஹாப் ரியாஸ் கடந்த பத்து வருடங்களுக்கு முன் இங்கிலாந்து அணிக்கெதிரான டெஸ்ட் தொடரில் அறிமுகமானார். அதிவேக பவுண்சர் பந்துகள் மூலம் எதிரணி துடுப்பாட்ட வீரர்களை திணறடித்தவர்

இங்கிலாந்து செல்லும் பாகிஸ்தான் குழாம் அறிவிப்பு

அதேபோல, வீரர்களை கோபப்படுத்தி ஆட்டமிழக்கச் செல்வதில் வல்லவர். டெஸ்ட் கிரிக்கெட் போட்டிகளில் ஓய்வு பெறுவதாக அறிவித்த அவர் தற்போது மீண்டும் உற்சாகத்துடன் அணிக்குத் திரும்பியுள்ளார்.

இதுகுறித்து வஹாப் ரியாஸ் கருத்து வெளியிடுகையில், பாகிஸ்தான் கிரிக்கெட் நிர்வாகத்திடம் இருந்து அழைப்பு வந்தது. அணியில் மீண்டும் வாய்ப்பு கிடைத்தால் விளையாடத் தயாரா? என்று கேட்டார்கள். தாய் நாட்டிற்காக (பாகிஸ்தான்) விளையாடுவதே முதன்மையானது

ஆகையால், உடனே விருப்பம் என்று கூறிவிட்டேன். அணியின் வெற்றிக்கு என்னுடைய பங்கு முதன்மையானதாக இருக்கும் என்று அவர் நம்பிக்கை தெரிவித்தார்

நீண்ட நாட்களாக பாகிஸ்தான் அணியில் இடம்பெறாமல் இருந்த அவர் கடந்த வருடம் இங்கிலாந்தில் நடைபெற்ற உலகக் கிண்ணப் போட்டிக்கு முன் அணிக்குத் திரும்ப அழைக்கப்பட்டதுடன், எதிர்பார்த்தபடியே சிறப்பாக விளைடியிருந்தார்

இங்கிலாந்து செல்ல பாகிஸ்தானுக்கு அனுமதியளித்த இம்ரான் கான்

இதனிடையே, கடந்த வருட பிற்பகுதியில் டெஸ்ட் போட்டிகளிலிருந்து திடீரென்று ஓய்வு பெறுவதாக அறிவித்தார். இதற்கு அந்த அணியின் முன்னாள் வேகப்பந்து வீச்சாளரான வகார் யூனிஸ் அதிருப்தி வெளியிட்டார்

மொத்தம் 27 டெஸ்ட் போட்டிகளில் மட்டும் விளையாடியுள்ள வஹாப் ரியாஸ், கடைசியாக 2018ஆம் ஆண்டு அவுஸ்திரேலிய அணிக்கு எதிரான டெஸ்ட் போட்டியில் பங்கேற்றார். அதன்பிறகு அவரால் பாகிஸ்தான் டெஸ்ட் அணியில் இடம்பெற முடியவில்லை. டெஸ்ட் போட்டிகளில் 34.50 என்ற சராசரியில் ஓட்டங்களை விட்டுக்கொடுத்து 83 விக்கெட்களை கைப்பற்றியுள்ளார்.

இதுஇவ்வாறிருக்க, சொந்த காரணங்களை முன் வைத்து மொஹமட் ஆமிர் இங்கிலாந்து தொடரைப் புறக்கணித்துள்ளதால், அவரது இழப்பை ஈடுசெய்ய வஹாப் ரியாஸ் அணியில் சேர்க்கப்பட்டுள்ளார் என்று கிரிக்கெட் வட்டாரங்களில் பேசப்படுகிறது.

 >> மேலும் பல கிரிக்கெட் செய்திகளைப் படிக்க <<