திரித்துவக் கல்லூரி மற்றும் ஆனந்தக் கல்லூரி பாரிய வெற்றி

163
U15 round up
 

சிங்கர் 15 வயதிற்குட்பட்ட பிரிவு 1 கிரிக்கட் போட்டிகளின் 2ஆம் சுற்று இத்தினங்களில் நடைபெற்று வருகின்றது. இவ்வாரம் நடைபெற்ற போட்டிகளில் திரித்துவக் கல்லூரி, ஆனந்தக் கல்லூரி மற்றும்  டி மசேநொட் கல்லூரி முதல் இன்னிங்ஸ் வெற்றியைப் பெற்றுக்கொண்டன.

பண்டாரநாயக்க மற்றும் அலோசியஸ் கல்லூரிகளுக்கிடையிலான போட்டி

அலோசியஸ் மைதானத்தில் நடைபெற்ற இப்போட்டியில் நாணய சுழற்சியில் வெற்றி பெற்ற அலோசியஸ் கல்லூரி பண்டாரநாயக்க கல்லூரியை முதலில் துடுப்பெடுத்தாடும்படி பணித்தது. இதன்படி முதலில் துடுப்பெடுத்தாடிய பண்டாரநாயக்க கல்லூரிக்காக ஜனிது ஜயவர்தன சதம் அடிக்க அவ்வணி 233 ஓட்டங்களுக்கு 7 விக்கட்டுகள் என்ற நிலையில் ஆட்டத்தை இடை நிறுத்திக்கொண்டது. தொடர்ந்து துடுப்பெடுத்தாடிய அலோசியஸ் அணி பசிந்துவின் பந்து வீச்சில் தடுமாறியபோதும் ஆட்ட நேர முடிவின்போது 6 விக்கட்டுகளை இழந்து 134 ஓட்டங்களைப் பெற்றது. இதனால் போட்டி வெற்றி தோல்வி இன்றி நிறைவடைந்தது.

பண்டாரநாயக்க கல்லூரி 233-7d(67) –  ஜனிது ஜயவர்தன 126*, கயஸான் 56, சானுக 3/51, மினிது 2/26

ஆலோசியஸ் கல்லூரி 134/69(41) – ஒமல் சஜித் 26, ரவிந்து 31, பசிந்து 6/37


இசிபதன மற்றும் வெஸ்லி கல்லூரிகளுக்கிடையிலான போட்டி

நாணய சுழற்சியில் வெற்றி பெற்ற வெஸ்லி கல்லூரி அணியானது இசிபதன கல்லூரி அணியை முதலில் துடுப்பெடுத்தாடும்படி பணித்தது. முதலில் துடுப்பெடுத்தாடிய இசிபதன கல்லூரி அணிக்காக சுதீப 49 ஓட்டங்களைப் பெற்றுக் கொடுக்க இசிபதன கல்லூரி அணியானது சகல விக்கட்டுகளையும் இழந்து 204 ஓட்டங்களைப் பெற்றுக் கொண்டது. தொடர்ந்து துடுப்பெடுத்தாடிய வெஸ்லி கல்லூரி அணியானது ஆட்ட நேர முடிவின்போது 8 விக்கட்டுகளை இழந்து 174 ஓட்டங்களைப் பெற்றது.  இசிபதன அணியினால் இரண்டு மேலதிக விக்கட்டுகளை வீழ்த்த முடியாமல்போக போட்டி வெற்றி தோல்வி இன்றி சமநிலையில் முடிந்தது.

இசிபதன கல்லூரி 206(50.4) – சுதீப 66, மனீஷ 42, சக்விதி சிடாத் 3/7, முஃதி மைசான் 2/31

வெஸ்லி கல்லூரி 174/8 (54) – ராகுல் குணசேகர 49, அகீல் தாஹிர் 41*, கவிந்து 3/31, இஷான் 2/26


லும்பினி மற்றும் கண்டி திரித்துவக் கல்லூரிகளுக்கிடையிலான போட்டி

நாணய சுழற்சியில் வெற்றி பெற்ற திரித்துவக் கல்லூரி லும்பினி கல்லூரி அணியை முதலில் துடுப்பெடுத்தாடப் பணித்தது. இதன்படி முதலில் துடுப்பெடுத்தாடிய லும்பினி கல்லூரி அணி 41.2 ஓவர்களில் 87 ஓட்டங்களுக்கு சுருண்டது. பதிலுக்குத் துடுப்பெடுத்தாடிய திரித்துவக் கல்லூரி அபிஷேக் ஆனந்தகுமாரவின் உதவியுடன் 3 விக்கட்டுகளுக்கு 163 ஓட்டங்களைப் பெற்ற நிலையில் ஆட்டத்தை இடை நிறுத்திக்கொண்டது. தொடர்ந்து 2ஆவது இனிங்ஸைத் துடுப்பெடுத்தாடிய லும்பினி கல்லூரி அணியானது ஆட்ட நேர முடிவின்போது 7 ஓவர்களில் 3 விக்கட்டுகளை இழந்து 21 ஓட்டங்களைப் பெற்றது. இதன் மூலம் திரித்துவக் கல்லூரி முதல் இனிங்ஸ் வெற்றியைப் பெற்றுக்கொண்டது.

லும்பினி கல்லூரி 87(41.2) – உதார சாந்தீப 36, நாகித்த 4/22, கவிந்து 2/9

திரித்துவக் கல்லூரி 163/6d (43.3) – அபிஷேக் ஆனந்தகுமார 50, உமர் 28, சஷிக்க 3/19, உதார 2/29


ரிச்மன்ட் மற்றும் கோட்டே தோமஸ் கலோரிகளுக்கிடையிலான போட்டி

முதலில் துடுப்பெடுத்தாடிய ரிச்மன்ட் கல்லூரி அணியானது 52.5 ஓவர்களில் சகல விக்கட்டுகளையும் இழந்து 185 ஓட்டங்களைப் பெற்றுக்கொண்டது. ஒரேன் டி சில்வா 45 ஓட்டங்களைப் பெற்று ரிச்மன்ட் கல்லூரி அணியை வலுப்படுத்தினார். தொடர்ந்து துடுப்பெடுத்தாடிய தோமஸ் கல்லூரி ஆட்ட நேர முடிவின்போது 6 விக்கட்டுகளை இழந்து 151 ஓட்டங்களைப் பெற்றுக்கொண்டது. இதனால் போட்டி சமநிலையில் முடிந்தது.

ரிச்மன்ட் கல்லூரி 185(52.5) – ஒரேன் டி சில்வா 45, சமத் 27, ஹர்ஷ 27, ஜனித்த பெரேரா 4/53,

கோட்டே தோமஸ் கல்லூரி 151/6(47) – அஷென் சமுடித்த 40, பசன் பெரேரா 30, சதுன் 3/42, சுஜித் 2/35


இப்பாகமுவ மத்திய கல்லூரி மற்றும் ஆனந்த கல்லூரிகளுக்கிடையிலான போட்டி

ஜூலை 4ஆம் திகதி நடைபெற்ற இப்போட்டியில் ஆனந்த கல்லூரி அணி நாணய சுழற்சியில் வெற்றி கொண்டு இப்பாகமுவ கல்லூரியை முதலில் துடுப்பெடுத்தாடும்படி பணித்தது, முதலில் துடுப்பெடுத்தாடிய இப்பாகமுவ கல்லூரியானது பூர்ண குணரத்னவின் பந்து வீச்சுக்கு முகம் கொடுக்க முடியாமல் 63 ஓட்டங்களுக்கு சகல விக்கட்டுகளையும் இழந்தது. சிறப்பாகப் பந்து வீசிய பூர்ண 6 விக்கட்டுகளைக் கைப்பற்றினார். தொடர்ந்து துடுப்பெடுத்தாடிய ஆனந்த கல்லூரியானது அதிரடியாக விளையாடி 144 ஓட்டங்களைப் பெற்ற நிலையில் ஆட்டத்தை இடை நிறுத்திக்கொண்டது. தமது இரண்டாவது இனிங்ஸைத் தொடர்ந்த இப்பாகமுவ கல்லூரி ஆட்ட நேர முடிவின்போது 6 விக்கட்டுகளுக்கு 52 ஓட்டங்களைப் பெற்றுக்கொண்டது. இதனால் ஆனந்த கல்லூரியானது போட்டியை முழுமையாக வெற்றிகொள்ளும் சந்தர்ப்பத்தை தவறவிட்டது. இருப்பினும் முதல் இனிங்ஸ் வெற்றியைத் தமதாக்கிக்கொண்டது.

இப்பாகமுவ மத்திய கல்லூரி 63(31.1) – பானு ஏக்கநாயக்க 36, பூர்ண குணரத்ன 6/21, யசித் 2/6

2ஆம் இன்னிங்ஸ் 52/6(45) – கனிஷ்க 2/11 ,யசித் 2/30.

ஆனந்த கல்லூரி 144/7d (25.4) – அதிஷ பேரேரா 61, ரனுல 23, தரங்க 3/5


டி மசேனன்ட் மற்றும் பெனடிக்ட்ஸ் கல்லூரிகளுக்கிடையிலான போட்டி

முதலில் துடுப்பெடுத்தாடிய டி மசேனன்ட் கல்லூரி சகல விக்கட்டுகளையும் இழந்து 174 ஓட்டங்களைப் பெற்றது. பதிலுக்குத் துடுப்பெடுத்தாடிய பெனடிக்ட்ஸ் கல்லூரி அணிக்கு 35.1 ஓவர்களில் சகல விக்கட்டுகளையும் இழந்து 166 ஓட்டங்களை மட்டுமே பெறமுடிந்தது தொடர்ந்து 2ஆவது இனிங்ஸை விளையாடிய டி மசேனன்ட் கல்லூரி 27 ஓட்டங்களுக்கு 4 விக்கட்டுகளை இழந்த நிலையில் ஆட்ட  நேரம் முடிவடைந்தது. இதனால் டி மசேனன்ட் கல்லூரி முதல் இனிங்ஸ் வெற்றியைப் பெற்றுக்கொண்டது.

டி மசேனன்ட்  கல்லூரி 174(53.3) – ராகித்த 41, அசித்த 20, விஹங்க 3/39, அபிஷேக் 2/18

2ஆவது இன்னிங்ஸ் 27/4(5) – கவிறு 3/12

பெனடிக்ட்ஸ் கல்லூரி 166(35.1) – அபிஷேக் பேரேரா 35, விஹங்க 30, ஹசித சில்வா 4/34, தீக்ஷான 2/45