உபாதையினால் மே.இ.தீவுகள் தொடரிலிருந்து வெளியேறும் மோர்கன்

131

மட்டுப்படுத்தப்பட்ட ஓவர்கள் கொண்ட போட்டிகளில் இங்கிலாந்து கிரிக்கெட் அணியின் தலைவராக காணப்படும் இயன் மோர்கன் தசை உபாதை காரணமாக மேற்கிந்திய தீவுகள் அணியுடன் எஞ்சியிருக்கும் T20I போட்டிகளில் இருந்து வெளியேறுவதாக குறிப்பிடப்பட்டிருக்கின்றது.

>>இலங்கையின் இளையோர் உலகக் கிண்ண கனவு பறிபோனது

மேற்கிந்திய தீவுகளுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இங்கிலாந்து கிரிக்கெட் அணி அங்கே தாம் விளையாடவுள்ள டெஸ்ட் தொடருக்கு முன்னதாக 5 போட்டிகள் கொண்ட T20I தொடரில் ஆடி வருகின்றது.

தற்போது இந்த T20I தொடரின் முதல் மூன்று போட்டிகளும் நிறைவடைந்து மேற்கிந்திய தீவுகள் தொடரில் 2-1 என முன்னிலை பெற்று இரு போட்டிகள் எஞ்சியிருக்கும் நிலையில் இங்கிலாந்து அணி அதன் தலைவரினை உபாதை காரணமாக இழந்திருக்கின்றது.

இங்கிலாந்து அணித்தலைவர் இயன் மோர்கன் மேற்கிந்திய தீவுகளுடன் நடைபெற்ற T20I தொடரின் மூன்றாவது போட்டியிலும் தசை உபாதை காரணமாக விளையாடாது போன நிலையில், தற்போது இந்த T20I தொடரிலிருந்து முழுமையாக வெளியேறியிருக்கின்றார்.

>>சஹீட் அப்ரிடிக்கு கொரோனா தொற்று உறுதி

மோர்கன் இல்லாத நிலையில், மேற்கிந்திய தீவுகளுக்கு எதிரான மூன்றாவது T20I போட்டி போன்று இங்கிலாந்து கிரிக்கெட் அணி எஞ்சியிருக்கும் இரண்டு போட்டிகளிலும் சகலதுறைவீரரான மொயின் அலி மூலம் வழிநடாத்தப்படும் எனக் குறிப்பிடப்பட்டிருக்கின்றது.

இதேவேளை மேற்கிந்திய தீவுகள் – இங்கிலாந்து T20I தொடரில் எஞ்சியிருக்கும் இறுதி இரண்டு போட்டிகளும் 29ஆம் மற்றும் 30ஆம் திகதிகளில் நடைபெறவிருக்கின்றன.

>>மேலும் பல கிரிக்கெட் செய்திகளைப் படிக்க<<