T20 உலகக் கிண்ணத்தில் ஆஸி. அணியின் தலைவராக மிச்சல் மார்ஷ்??

56
Mitchell Marsh

இந்த ஆண்டுக்கான (2024) T20 உலகக் கிண்ணத் தொடரில் அவுஸ்திரேலிய கிரிக்கெட் அணியின் தலைவராக யார் செயற்படுவார் என்பது குறித்த அறிவிப்பு ஒன்று வெளியாகியிருக்கின்றது.  

ஐசிசியின் சிறந்த வீரருக்கான விருதை வென்ற ஜெய்ஸ்வால்

T20 உலகக் கிண்ணத் தொடர் இந்த ஆண்டு மேற்கிந்திய தீவுகள் மற்றும் ஐக்கிய அமெரிக்கா ஆகிய நாடுகளில் ஜூன் மாதம் 02ஆம் திகதி தொடக்கம் 29ஆம் திகதி வரையில் நடைபெற ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது 

இந்த நிலையில் அவுஸ்திரேலிய கிரிக்கெட் அணியின் தலைமைப் பயிற்சியாளராகவும், அவுஸ்திரேலிய கிரிக்கெட் தேர்வுக்குழு உறுப்பினர்களில் ஒருவராகவும் காணப்படும் அன்ட்ரூ மெக்டொனால்ட் T20 உலகக் கிண்ணத்தில் அவுஸ்திரேலிய அணியின் தலைவராக செயற்பட சகலதுறைவீரரான மிச்சல் மார்ஷினை பரிந்துரை செய்யவிருப்பதாக குறிப்பிட்டிருக்கின்றார். 

அவுஸ்திரேலியாவின் முன்னாள் தலைவரான ஆரோன் பின்ச் ஓய்வினை அறிவித்த பின்னர் மிச்சல் மார்ஷ் அவுஸ்திரேலிய அணியினை இதுவரை 8 T20 போட்டிகளில் வழிநடாத்தியிருக்கின்றார். இதேவேளை மெதிவ் வேட் அவுஸ்திரேலிய அணியினை பின்ச்சின் ஓய்வினை தொடர்ந்து 5 T20 போட்டிகளில் வழிநடாத்தியிருந்தார் 

விடயங்கள் இவ்வாறு காணப்படும் நிலையிலையே அவுஸ்திரேலிய அணியின் தலைவராக T20 உலகக் கிண்ணத்தில் யார் செயற்படுவார் என்கிற கேள்வி எழுந்து வருகின்றது. இதற்கு தீர்வு தரும் விதமாகவே அவுஸ்திரேலிய தலைமைப் பயிற்சியாளரின் கூற்று அமைந்திருக்கின்றது 

ஐசிசியின் சிறந்த வீரருக்கான விருதை வென்ற ஜெய்ஸ்வால்

இதேநேரம் T20 உலகக் கிண்ணத்திற்கான அணிகளில் குழு B இல் இடம் பிடித்திருக்கும் அவுஸ்திரேலியா தமது முதல் T20 உலகக் கிண்ணப் போட்டியில் ஜூன் 05ஆம் திகதி ஓமான் அணியை எதிர்கொள்ளவிருப்பதோடு அதன் பின்னர் முறையே ஜூன் 8, 11 மற்றும் 15ஆம் திகதிகளில் முறையே இங்கிலாந்து, நமீபியா மற்றும் ஸ்கொட்லாந்து ஆகிய அணிகளை எதிர்கொள்ளவிருக்கின்றமை சுட்டிக்காட்டத்தக்கது 

>>மேலும் கிரிக்கெட் செய்திகளைப் படிக்க<<