அணிகளின் வெற்றிக்காக அபாரமாக ஆடிய தெனுவன் மற்றும் அகீல் இன்ஹாம்

189
Mercantile Cricket

வர்த்தக நிறுவனங்களுக்கிடையிலான கிரிக்கெட் போட்டிகளின் பிரிவு B இற்கான 3 போட்டிகள் இன்று நடைபெற்று நிறைவடைந்தன.

மாஸ் சிலுவேட்டா A எதிர் ஜோன் கீல்ஸ் ஹோல்டிங்க்ஸ்  B

மூர்ஸ் கிரிக்கெட் மைதானத்தில் இன்று காலை ஆரம்பமான இப்போட்டியில் நாணய சுழற்சியில் வெற்றி பெற்ற ஜோன் கீல்ஸ் அணி முதலில் துடுப்பெடுத்தாடும் சந்தர்ப்பத்தை மாஸ் சிலுவேட்டா அணிக்கு வழங்கியது.  

ஜெப்ரி வண்டேர்சேயின் அதிரடிப் பந்துவீச்சால் இலகு வெற்றியடைந்த டீஜே லங்கா

வர்த்தக நிறுவனங்களுக்கு இடையிலான கிரிக்கெட் சுற்றுப் போட்டியின் சிங்கர் நிறுவன அனுசரணையில் நடக்கும் பிரிவு A இன் முதல் சுற்றுக்கான போட்டிகள் இன்று நடைபெற்றன. இன்றைய

இதன்படி களமிறங்கிய மாஸ் அணி தெனுவன் ராஜகருண ஆட்டமிழக்காது பெற்ற சதத்தின் உதவியுடன் 50 ஓவர்கள் நிறைவில் 9 விக்கெட்டுக்களை இழந்து 256 ஓட்டங்க்களைப் பெற்றது. மிகச்சிறப்பாக துடுப்பெடுத்தாடிய ராஜகருண  117 ஓட்டங்களையும் சரண நாணயக்கார 63 ஓட்டங்களையும் அஞ்செலோ எமானுவேல் 25 ஓட்டங்களையும் பெற்றனர்.  

பந்து வீச்சில் ஜோன் கீல்ஸ் அணி சார்பாக அக்தாப் காதர் 54 ஓட்டங்களை விட்டுக்கொடுத்து 4 விக்கெட்டுக்களைக் கைப்பற்ற நுவான் துஷார 47 ஓட்டங்களை விட்டுக்கொடுத்து 2 விக்கெட்டுக்களைக் கைப்பற்றினார்.  

பதிலுக்கு துடுப்பெடுத்தாடிய ஜோன் கீல்ஸ் அணி 36.1 ஓவர்களில் 137 ஓட்டங்களை மாத்திரம் பெற்று தோல்வியைத் தழுவியது. அவ்வணி சார்பாக கவீன் பண்டார ஆட்டமிழக்காமல் 76 ஓட்டங்களை பெற்ற போதிலும் ஏனைய வீரர்களின் ஆதரவு இல்லாத காரணத்தினால் அவ்வணி விரைவாக சகல விக்கெட்டுக்களையும் இழந்தது. அவ்வணி சார்பாக மனோஜ் சரத்சந்திர 30 ஓட்டங்களைப் பெற்றார்.  

மாஸ் சிலுவேட்டா அணி சார்பாக சிறப்பாக பந்து வீசிய அஞ்செலோ இமானுவேல் 32 ஓட்டங்களை விட்டுகொடுத்து 4 விக்கெட்டுக்களையும் புத்திக்க சன்ஜீவ 24 ஓட்டங்களை விட்டுக்கொடுத்து 3 விக்கெட்டுக்களையும் ரொமேஷ் சில்வா 23 ஓட்டங்களை விட்டுக்கொடுத்து 2 விக்கெட்டுக்களையும் கைப்பற்றினர்.    

போட்டியின் சுருக்கம்  

மாஸ் சிலுவேட்டா 256/9 (50) – தெனுவன் ராஜகருணா 117*, சரண நாணயக்கார 63, அஞ்செலோ இமானுவேல் 25.  அக்தாப் காதர் 4/54, நுவான் துஷார 2/47  

ஜோன் கீல்ஸ் ஹோல்டிங்ஸ் 137/10 (36.1) – கவீன் பண்டார 76*, மனோஜ் சரத்சந்திர 30. அஞ்செலோ இமானுவேல் 4/32, புத்திக்க சந்ஜீவ 3/24, ரொமேஷ் சில்வா 2/23

போட்டி முடிவு – மாஸ் சிலுவேட்டா அணி 119 ஓட்டங்களால் அபார வெற்றியீட்டியது.

புதிய வீரர்களோடு பாகிஸ்தானை எதிர்கொள்ளவுள்ள இலங்கை டெஸ்ட் அணி

பாகிஸ்தான் அணியுடன் ஆரம்பமாகும் டெஸ்ட் தொடரில் மோதுவதற்காக ஐக்கிய அரபு இராச்சியம் பயணிக்கவுள்ள இலங்கை அணியில் சதீர சமரவிக்ரம மற்றும் ரோஷன் சில்வா


பவர்டெக் சிமென்ட் ப்ரைவேட் லிமிடெட் எதிர் மொபிடெல் A

மக்கோன சர்ரே கிரிக்கெட் மைதானத்தில் இன்று காலை ஆரம்பமான இப்போட்டியில் நாணய சுழற்சியில் வெற்றி பெற்ற பவர்டெக் அணி முதலில் துடுப்பெடுத்தாடத் தீர்மானித்தது. இதன்படி களமிறங்கிய அவ்வணி 50 ஓவர்கள் நிறைவில் சகல விக்கெட்டுக்களையும் இழந்து 246 ஓட்டங்களைப் பெற்றது. லஹிரு ஜயக்கொடி 80 ஓட்டங்களையும், தசுன் செனவிரத்ன 44 ஓட்டங்களையும், திலான் சந்திம 27 ஓட்டங்களையும் பெற்றனர்.

மொபிடெல் அணி சார்பில் பந்து வீச்சில் லக்ஷான் ஜயசிங்ஹ 34 ஓட்டங்களை விட்டுக்கொடுத்து 2 விக்கெட்டுக்களையும், சாமிக கருணாரத்ன 46 ஓட்டங்களை விட்டுக்கொடுத்து 2 விக்கெட்டுக்களையும் கைப்பற்றினர்.   

பதிலுக்கு துடுப்பெடுத்தாடிய மொபிடெல் அணி 36.4 ஓவர்களில் சகல விக்கெட்டுக்களையும் இழந்து 189 ஓட்டங்களை மாத்திரம் பெற்று தோல்வியைத் தழுவியது. அவ்வணி சார்பாக கொஷான் ஜெயவிக்கிரம 104 ஓட்டங்க்களைப் பெற்றதுடன் சரித் ஜயம்பதி 33 ஓட்டங்களைப் பெற்றார். பந்து வீச்சில் சதுரங்க லக்மால் 15 ஓட்டங்களை விட்டுக்கொடுத்து 3 விக்கெட்டுக்களைக் கைப்பற்றியதுடன் திலான் நிமேஷ் 37 ஓட்டங்களை விட்டுக்கொடுத்து 2 விக்கெட்டுக்களைக் கைப்பற்றினார்.

போட்டியின் சுருக்கம்

பவர்டெக் சிமென்ட் 246/10 (50) – லஹிரு ஜெயகொடி 80, தசுன் செனவிரத்ன 44, திலான் சந்திம 27.  லஹிரு சமரகோன் 3/63, லக்ஷான் ஜெயசிங்ஹ 2/34, சாமிக கருணாரத்ன 2/46

மொபிடெல் (A) 189/10 (36.4) – கோஷான் ஜயவிக்கிரம 104, சரித் ஜயம்பதி 33.  சதுரங்க லக்மால் 3/15, திலான் நிமேஷ் 2/37  

போட்டி முடிவு – பவர்டெக் அணி 57 ஓட்டங்களால் வெற்றிபெற்றது.

 

2019 உலகக் கிண்ணத்திற்கு நேரடியாகத் தகுதி பெற்ற இலங்கை அணி

எதிர்வரும் 2019ஆம் ஆண்டு இங்கிலாந்தில் நடைபெறவுள்ள உலகக் கிண்ண கிரிக்கெட்


கொமர்சியல் கிரெடிட் B எதிர் சிங்கர் ஸ்ரீ லங்கா A

இப்போட்டி கொழும்பு BRC கிரிக்கெட் மைதானத்தில் இடம்பெற்றது. இதன் நாணய சுழற்சியில் வெற்றிபெற்ற சிங்கர் ஸ்ரீ லங்கா அணி முதலில் துடுப்பெடுத்தாடும் சந்தர்ப்பத்தினை கொமர்சியல் கிரெடிட் அணிக்கு வழங்கியது. இதன்படி களம் இறங்கிய கொமர்சியல் கிரெடிட் அணி 50 ஓவர்கள் நிறைவில் 5 விக்கெட்டுக்களை இழந்து 288 ஓட்டங்களைப் பெற்றது.

சிறப்பான துடுப்பாட்டம் மூலம் கொமர்சியல் கிரெடிட் அணிக்கு சிறந்த ஆரம்பத்தை வழங்கிய அகீல் இன்ஹாம் 77 ஓட்டங்களையும் அனுரா டயஸ் 51 ஓட்டங்களையும் பெற்றனர். பின்வரிசையில் வந்த சனித் டி மேல் மற்றும் மலித் பெர்னாண்டோ ஆகியோர் முறையே ஆட்டமிழக்காமல் பெற்ற 49* மற்றும் 31* ஓட்டங்களின் உதவியுடன் கொமர்சியல் கிரெடிட் அணி சிறப்பான ஓட்ட எண்ணிக்கையை பெற்றது. பந்து வீச்சில் சிங்கர் ஸ்ரீ லங்கா சார்பில் சாமிக மகேஷ் 38 ஓட்டங்களை விட்டுக்கொடுத்து 2 விக்கெட்டுக்களைக் கைப்பற்றினார்.

பதிலுக்கு துடுப்பெடுத்தாடிய சிங்கர் ஸ்ரீ லங்கா அணி 50 ஓவர்களில் 9 விக்கெட்டுகளை இழந்து  211 ஓட்டங்களை மாத்திரம் பெற்று தொல்வியைத் தழுவியது. அவ்வணி சார்பாக பசிந்து தில்ஷான் ஆட்டமிழக்காது 72 ஓட்டங்க்களைப் பெற்றதுடன் ராஜித பிரியன் 45 ஓட்டங்களைப் பெற்றார். பந்து வீச்சில் கொமர்சியல் கிரடிட் சார்பாக சமிந்த பத்திரன 50 ஓட்டங்களை விட்டுக்கொடுத்து 2 விக்கெட்டுக்களையும் பிரனீத் விஜேசேன 41 ஓட்டங்களை விட்டுக்கொடுத்து 2 விக்கெட்டுக்களையும் கைப்பற்றினர்.

போட்டியின் சுருக்கம்

கொமர்சியல் கிரெடிட் (B) 288/5 – அகீல் இன்ஹாம் 77, அனுர டயஸ் 51, சனித் டி மெல் 49*, மலித் பெர்னாண்டோ 31*, பிரனீத் விஜேசேன 25.  சாமிக மகேஷ் 2/38  

சிங்கர் ஸ்ரீ லங்கா (A) – 211/9 (50) பசிந்து தில்ஷான் 72*, ராஜித பிரியன் 45.  சமிந்த பத்திரன 2/50, சாமிக மகேஷ் 2/41

போட்டி முடிவு – கொமர்சியல் கிரெடிட் அணி 77 ஓட்டங்களால் வெற்றிபெற்றது.