குசல் ஜனித் பெரேராவின் போராட்டம் வீண்

143

மிக விறுவிறுப்பாக இடம்பெற்றுவரும் அபுதாபி T10 லீக் கிரிக்கெட் தொடரின் ஆறாம் நாளில் (21) மூன்று போட்டிகள் நிறைவுக்கு வந்தன. 

மராத்தா அரபியன்ஸ் எதிர் டெல்லி புல்ஸ்

ஷேக் ஸெயத் மைதானத்தில் நிறைவுக்கு வந்த இப்போட்டியில் மராத்தா அரபியன்ஸ் அணி 30 ஓட்டங்களால் வெற்றியைப் பதிவு செய்தது.

போட்டியில் முதலில் துடுப்பாடிய மராத்தா அரபியன்ஸ் அணியினர் அதன் தலைவர் கிறிஸ் லின்னின் அபார ஆட்டத்தோடு 10 ஓவர்களில் 4 விக்கெட்டுக்களை இழந்து 146 ஓட்டங்களைப் பெற்றுக் கொண்டனர்.

அடுத்தடுத்த வெற்றிகளைப் பதிவு செய்த திசரவின் பங்ளா டைகர்ஸ்

ஐக்கிய அரபு இராச்சியத்தில் நடைபெற்றுவரும்……….

மராத்தா அரபியன்ஸ் அணிக்காக துடுப்பாட்டத்தில் அசத்திய கிறிஸ் லின் வெறும் 33 பந்துகளில் 9 இமாலய சிக்ஸர்கள் மற்றும் 5 பெளண்டரிகள் உடன் 89 ஓட்டங்களைப் பெற்றார்.

அதேநேரம் டெல்லி புல்ஸ் அணிக்காக ரவி ராம்போல் மற்றும் அலி கான் ஆகியோர் தலா 2 விக்கெட்டுக்கள் வீதம் சாய்த்தனர். 

பின்னர் போட்டியின் வெற்றி இலக்காக நிர்ணயம் செய்யப்பட்ட 147 ஓட்டங்களை அடைய டெல்லி புல்ஸ் அணி களமிறங்கியது.

தொடர்ந்து டெல்லி புல்ஸ் அணிக்காக குசல் ஜனித் பெரேரா மற்றும் செர்பானே ரத்தர்போர்ட் ஆகியோர் சிறந்த துடுப்பாட்டத்தை வெளிப்படுத்திய போதிலும் வெற்றி இலக்கினை அடைய முடியவில்லை. அதன்படி, 10 ஓவர்கள் நிறைவில் டெல்லி புல்ஸ் அணி 3 விக்கெட்டுக்களை இழந்து 116 ஓட்டங்கள் மாத்திரம் பெற்று போட்டியில் தோல்வியினை தழுவியது.

டெல்லி புல்ஸ் அணியின் துடுப்பாட்டம் சார்பில் குசல் ஜனித் பெரேரா 27 பந்துகளுக்கு 45 ஓட்டங்கள் எடுக்க, செர்பானே ரத்தர்போர்ட் 16 பந்துகளுக்கு 41 ஓட்டங்களைக் குவித்திருந்தார்.

மராத்தா அரபியன்ஸ் அணியின் வெற்றியினை லசித் மாலிங்க, சிராஸ் அஹ்மட் மற்றும் வேய்ன் ப்ராவோ ஆகியோர் தலா ஒரு விக்கெட் வீதம் கைப்பற்றி உறுதி செய்திருந்தனர்.

போட்டியின் சுருக்கம்

மராத்தா அரபியன்ஸ – 146/4 (10) கிறிஸ் லின் 89(33), அலி கான் 15/2(2), ரவி ராம்போல் 27/2(2)

டெல்லி புல்ஸ் – 116/3 (10) குசல் பெரேரா 45(27), செர்பானே ரத்தர்போர்ட் 41(16), லசித் மாலிங்க 10/1 (2)

முடிவு – மராத்தா அரபியன்ஸ் 30 ஓட்டங்களால் வெற்றி 

கலந்தர்ஸ் எதிர் கர்நாடகா டஸ்கர்ஸ்

ஷேக் ஸெயத் மைதானத்தில் இடம்பெற்று முடிந்த மற்றுமொரு போட்டியில் கலந்தர்ஸ் அணி கர்நாடகா டஸ்கர்ஸ் அணியை 32 ஓட்டங்களால் தோற்கடித்தது.

போட்டியின் நாணய சுழற்சியில் வென்று முதலில் துடுப்பாடிய கலந்தர்ஸ் அணி 10 ஓவர்களுக்கு 7 விக்கெட்டுக்களை இழந்து 130 ஓட்டங்களைக் குவித்தது.

கலந்தர்ஸ் அணிக்காக மிகவும் அதிரடியான முறையில் செயற்பட்ட அதன் ஆரம்ப துடுப்பாட்ட வீரர்களில் ஒருவரான டொம் பேன்டன் வெறும் 28 பந்துகளில் 6 சிக்ஸர்கள் மற்றும் 9 பெளண்டரிகள் அடங்கலாக 80 ஓட்டங்களைப் பெற்றார். 

இதேநேரம் கர்நாடகா டஸ்கர்ஸ் அணியின் பந்துவீச்சில் சந்தீப் லமிச்சானே மற்றும் அஹ்மட் ரேசா ஆகியோர் தலா 2 விக்கெட்டுகள் வீதம் சாய்த்திருந்தனர்.

பின்னர் போட்டியின் வெற்றி இலக்காக நிர்ணயம் செய்யப்பட்ட 131 ஓட்டங்களை அடைய பதிலுக்கு துடுப்பாடிய கர்நாடகா டஸ்கர்ஸ் அணி 10 ஓவர்களில் 9 விக்கெட்டுகளை இழந்து 98 ஓட்டங்களை மாத்திரம் பெற்று போட்டியில் தோல்வியினை தழுவியது.

கர்நாடகா டஸ்கர்ஸ் அணியின் துடுப்பாட்டம் சார்பில் றயான் டன் டஸ்ஹட்டே 25 ஓட்டங்கள் பெற்று தனது தரப்பில் அதிக ஓட்டங்கள் பெற்ற வீரராக மாறினார். 

இதேநேரம், கலந்தர்ஸ் அணியின் பந்துவீச்சு சார்பாக சுல்டான் அஹ்மட் மற்றும் ஜோர்ஜ் கார்டோன் ஆகியோர் தலா 2 விக்கெட்டுகள் வீதம் சாய்த்து தமது தரப்பு வெற்றியினை ஊர்ஜிதம் செய்தனர்.

போட்டியின் சுருக்கம் 

கலந்தர்ஸ் – 137/7 (10) டொம் பேன்டன் 80(28), சந்தீப் லமிச்சானே 30/2(2), அஹ்மட் ரேசா 33/2(2)

கர்நாடகா டஸ்கர்ஸ் – 98/9 (10) றயான் டென் டசகர்ட்டே 25(15), சுல்டான் அஹ்மட் 5/2(2), ஜோர்ஜ் கார்டன் 21/2(2)

முடிவு – கலந்தர்ஸ் அணி 32 ஓட்டங்களால் வெற்றி 

டெக்கான் கிளேடியேட்டர்ஸ் எதிர் நோத்தர்ன் வோரியர்ஸ்

ஷேக் ஸெயத் மைதானத்தில் முடிவடைந்த கடைசிப் போட்டியில் நோத்தர்ன் வோரியர்ஸ் அணி டெக்கான் கிளேடியேட்டர்ஸ் வீரர்களை 10 ஓட்டங்களால் தோற்கடித்தது.  

இப்போட்டியில் முதலில் துடுப்பாடிய நோத்தர்ன் வோரியர்ஸ் அணி லென்ட்ல் சிம்மோன்ஸின் அதிரடியோடு 10 ஓவர்களில் 5 விக்கெட்டுகளை இழந்து 107 ஓட்டங்களைப் பெற்றனர். 

இலங்கையில் மற்றொரு கிரிக்கெட் மைதானம்!

இலங்கை கிரிக்கெட் சபை மற்றும் இலங்கை தொலைத் தொடர்பு நிறுவனங்களின் ஒன்றான………

அதிரடி ஆட்டத்தை வெளிக்காட்டிய லென்ட்ல் சிம்மோன்ஸ் 39 பந்துகளில் 4 சிக்ஸர்கள் மற்றும் 8 பெளண்டரிகள் அடங்கலாக 70 ஓட்டங்களைப் பெற்றிருந்தார்.

மறுமுனையில் டெக்கான் கிளேடியேட்டர்ஸ் அணியின் பந்துவீச்சில் சஹூர் கான் மற்றும் பென் கட்டிங் ஆகியோர் தலா 2 விக்கெட்டுகள் வீதம் சாய்த்திருந்தது குறிப்பிடத்தக்கது.

பின்னர் போட்டியின் வெற்றி இலக்காக நிர்ணயம் செய்யப்பட்ட 108 ஓட்டங்களை அடைய பதிலுக்கு துடுப்பாடிய டெக்கான் கிளேடியேட்டர்ஸ் அணி 10 ஓவர்களில் 3 விக்கெட்டுகளை இழந்து 97 ஓட்டங்களை மாத்திரமே பெற்று தோல்வியடைந்தது.

டெக்கான் கிளேடியேட்டர்ஸ் அணியின் துடுப்பாட்டம் சார்பாக அதன் தலைவர் ஷேன் வொட்சன் அதிரடியாக செயற்பட்டு 35 பந்துகளில் 75 ஓட்டங்கள் பெற்ற போதிலும் அது வீணானது. 

இதேநேரம் கர்நாடகா டஸ்கர்ஸ் அணியின் பந்துவீச்சில் நுவன் பிரதீப் மற்றும் ஜுனைட் சித்தீக் மற்றும் அன்ட்ரூ ரசல் ஆகியோர் தலா ஒரு விக்கெட் வீதம் சாய்த்திருந்தது குறிப்பிடத்தக்கது.

போட்டியின் சுருக்கம்

நோத்தர்ன் வோரியர்ஸ் – 107/5 (10) லென்ட்ல் சிம்மோன்ஸ் 70(39), ஸஹூர் கான் 8/2(2), பென் கட்டிங் 9/2(1)

டெக்கான் கிளேடியேட்டர்ஸ் – 97/3 (10) ஷேன் வொட்சன் 75(35), நுவான் பிரதீப் 10/1(2), அன்ட்ரூ ரசல் 18/(1)

முடிவு – நோத்தர்ன் வோரியர்ஸ் 10 ஓட்டங்களால் வெற்றி

>> மேலும் பல கிரிக்கெட் செய்திகளை படிக்க <<