மகளிருக்கான உலகக் கிண்ண கிரிக்கெட் தொடரின் திகதி அறிவிப்பு

337
Getty Image

சர்வதேச கிரிக்கெட் பேரவை (ஐ.சி.சி) நடாத்தும் மகளிருக்கான உலகக் கிண்ண கிரிக்கெட் போட்டித் தொடர் நியூசிலாந்தில் 2021ஆம் ஆண்டு ஜனவரி 30ஆம் திகதி முதல் பெப்ரவரி 20ஆம் திகதி வரை நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

.சி.சியினால் ஒழுங்கு செய்யப்படுகின்ற ஆடவருக்கான உலகக் கிண்ண கிரிக்கெட் தொடரைப் போல மகளிருக்கான உலகக் கிண்ண கிரிக்கெட் தொடர் ஒவ்வொரு நான்கு வருடங்களுக்கு ஒருமுறை நடைபெற்று வருகிறது.

ரோஹித் சர்மாவின் சாதனையை தகர்த்து வரலாற்று சாதனை படைத்த இயன் மோர்கன்

இங்கிலாந்து அணியின் தலைவர் இயன் ……….

கடந்த 1973ஆம் ஆண்டு முதல் நடைபெற்று வருகின்ற இந்தத் தொடரில் இங்கிலாந்து, அவுஸ்திரேலியா, இந்தியா உள்ளிட்ட எட்டு நாடுகள் பங்குபற்றி வருகின்றன.

இறுதியாக, 2017ஆம் ஆண்டு இங்கிலாந்தில் நடைபெற்ற மகளிருக்கான உலகக் கிண்ண இறுதிப் போட்டியில் இந்தியாவை வீழ்த்தி இங்கிலாந்து சம்பியனாகத் தெரிவாகியிருந்தது.  

இந்த நிலையில், 2021ஆம் ஆண்டு நடைபெறவுள்ள மகளிருக்கான உலகக் கிண்ண (50 ஓவர்கள்) கிரிக்கெட் தொடர் நியூசிலாந்தில் ஜனவரி மாதம் 30ஆம் திகதி முதல் பெப்ரவரி 20ஆம் திகதி வரை நடைபெறும் என .சி.சி நேற்று (18) அறிவித்தது. இதன்படி, லீக் மற்றும் அரையிறுதி, இறுதி ஆட்டங்கள் என மொத்தம் 31 போட்டிகள் நடைபெறவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

இதுஇவ்வாறிருக்க, போட்டித் தொடரை நடாத்தும் நாடு என்ற அடிப்படையில் நியூசிலாந்து அணி நேரடியாக உலகக் கிண்ணத்துக்கு தகுதியினைப் பெற்றுக் கொள்ளும். அத்துடன், தற்போது நடைபெற்று வருகின்ற .சி.சியின் மகளிருக்கான ஒருநாள் சம்பின்யஷிப் போட்டித் தொடரில் முதல் நான்கு இடங்களைப் பெற்றுக்கொளும் அணிகளும் நேரடியாக உலகக் கிண்ணத்துக்கு தகுதிபெறும்.

உலகக் கிண்ண வெற்றிக்கு இலங்கை தரப்பு என்ன செய்ய வேண்டும்?

இலங்கை அணி, 1996ஆம் ஆண்டில் கிரிக்கெட் ………

இறுதி மூன்று அணிகளும் உலகக் கிண்ணத்துக்கான தகுதிச் சுற்றின் மூலம் வாய்ப்பைப் பெற்றுக் கொள்ளும்.

ஏற்கனவே, நியூசிலாந்து 1992 மற்றும் 2015 ஆகிய ஆண்டுகளில் அவுஸ்திரேலியாவுடன் இணைந்து ஆடவருக்கான உலகக் கிண்ண கிரிக்கெட் தொடரை நடத்தியுள்ளது. 2000ஆம் ஆண்டில் மகளிருக்கான உலகக் கிண்ணத்தை நடத்தியுள்ளது.

இதேவேளை, இதுவரை நடைபெற்ற 11 மகளிருக்கான உலகக் கிண்ணத் தொடர்களில் அவுஸ்திரேலிய அணி 7 தடவைகளும், இங்கிலாந்து அணி 4 தடவைகளும் சம்பியன் பட்டத்தை வென்றிருக்கின்றன.

>> மேலும் பல கிரிக்கெட் செய்திகளைப் படிக்க <<