வீடியோ : ஒலிம்பிக் பந்தத்தை அணைக்க முயற்சி, ரியோவில் பரபரப்பு

284

பிரேசில் நாட்டில் ஆகஸ்ட் மாதம் 5ஆம் திகதி ஒலிம்பிக் விளையாட்டுப் போட்டிகள் நடைபெறுவதற்கு பலரும் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.

ஏனெனில், அதிக விளையாட்டு வீரர்கள் ஸிகா வைரஸ் குறித்து அச்சம் கொண்டுள்ளதால், பன்னாட்டு மருத்துவ நிபுணர்கள் மற்றும் அறிவியலாளர்கள் ஒலிம்பிக் போட்டிகளை ஒத்திவைக்க அல்லது வேறு இடத்திற்கு மாற்றி வைக்க கோரிக்கை எழுப்பியுள்ளனர்.

இருப்பினும், ஆகஸ்ட் மாதம் ரியோ டி ஜெனிரோவில் நடைபெறும் ஒலிம்பிக் விளையாட்டுப் போட்டிகள் திட்டமிட்டப்படி நடைபெறும் என்று பிரேசில் வலியுறுத்தியுள்ளது

இதற்கிடையில் போட்டி நடைபெறவிருப்பதை முன்னிட்டு, நபர் ஒருவர் கையில் ஒலிம்பிக் தீப்பந்தத்தை ஏந்திக்கொண்டு, பொலிசார் பாதுகாப்புடன் சாலையில் ஓடிவருகிறார்.

அப்போது, ஒலிம்பிக் போட்டிக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் மற்றொரு நபர், அந்தத் தீயை அணைப்பதற்காக ஸ்பிரேயினை தெளித்துள்ளார், ஆனாலும் ஒலிம்பிக் தீ அணையவில்லை, இருப்பினும் மீண்டும் ஸ்பிரேயினை தெளிக்க முயற்சிசெய்கையில் அது தோல்வியில் முடிந்தது.

அடுத்த மாதம் போட்டி நடைபெறவிருப்பதால் இது போன்ற சம்பவம் நடப்பது இது இரண்டாவது முறை என்பது குறிப்பிடத்தக்கது.