Home Tamil ரோஹித்தின் சதத்துடன் இந்தியாவுக்கு முதல் வெற்றி

ரோஹித்தின் சதத்துடன் இந்தியாவுக்கு முதல் வெற்றி

336
உலகக் கிண்ணத்தின் தங்களுடைய முதல் போட்டியில் விளையாடிய இந்திய அணி, ரோஹித் சர்மாவின் சதத்தின் உதவியுடன் தென்னாபிரிக்க அணியை 6 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வீழ்த்தியதுடன், தென்னாபிரிக்க அணி தொடர்ச்சியாக தங்களுடைய மூன்றாவது தோல்வியினை சந்தித்துள்ளது.

சௌதெம்டனில் உள்ள ரொஸ் போவ்ல் கிரிக்கெட் மைதானத்தில் ஆரம்பமாகிய இந்தப் போட்டியில் நாணய சுழற்சியில் வெற்றிபெற்ற தென்னாபிரிக்க அணி முதலில் துடுப்பெடுத்தாட தீர்மானித்தது. குறிப்பாக இம்முறை அணிகள் முதலில் களத்தடுப்பை தேர்வு செய்துவரும் நிலையில், தென்னாபிரிக்க அணியின் இந்த முடிவு ஆச்சரியத்தை ஏற்படுத்தியது. அத்துடன், இரண்டு அணிகளும் தங்களுடைய அணிகளில் முதன்மை சுழல் பந்துவீச்சாளர்கள் இருவரை இணைத்திருந்தது.

ரோய், ஆர்ச்சர் மற்றும் சர்பராஸிற்கு ஐசிசி அபராதம்

இங்கிலாந்து மற்றும் பாகிஸ்தான் அணிகளுக்கு இடையில் நேற்று (03) நடைபெற்ற உலகக்…

இவ்வாறு தங்களுடைய முடிவுக்கு ஏற்ப முதலில் துடுப்பெடுத்தாடிய தென்னாபிரிக்க அணி ஆரம்பம் முதல் விக்கெட்டுகளை பறிகொடுத்து வந்தது. ஆரம்ப துடுப்பாட்ட வீரர்களான குயிண்டன் டி கொக் மற்றும் ஹஷிம் அம்லா ஆகியோரை தனது வேகத்தின் மூலமாக பும்ரா ஓய்வறை நோக்கி அனுப்பிவைத்தார். முதல் இரண்டு விக்கெட்டுகளும் வேகப் பந்துவீச்சுக்கு விழ, இந்திய அணி தங்களுடைய துறுப்பு சீட்டுகளான யுஸ்வேந்திர சஹால் மற்றும்  குல்தீப் யாதவ் ஆகிய சுழல் பந்துவீச்சாளர்களை அழைத்தது.

எதிர்பார்த்தபடியே, இவர்கள் இருவரும் தென்னாபிரிக்க அணியின் மத்தியவரிசை துடுப்பாட்ட வீரர்களுக்கு நெருக்கடி கொடுக்க, தென்னாபிரிக்க அணி தொடர்ச்சியாக விக்கெட்டுகளை இழந்து தடுமாற்றத்துக்கு உள்ளாகியது. அணித் தலைவர் பெப் டு ப்ளெசிஸ் 38 ஓட்டங்களை பெற்று, சஹாலின் பந்துவீச்சில் ஆட்டமிழக்க, அணியில் எதிர்பார்க்கப்பட்ட ஏனைய துடுப்பாட்ட வீரர்களும் ஏமாற்றினர்.

ஒருகட்டத்தில் தென்னாபிரிக்க அணி 200 ஓட்டங்களை கடக்குமா? என்ற சந்தேகம் எழுந்த போது, க்ரிஸ் மொரிஸ், என்டைல் பெஹலுக்வாயோ மற்றும் ககிஸோ ரபாடா ஆகியோர் பின்வரிசையில் சிறப்பாக துடுப்பெடுத்தாடி அணியின் ஓட்ட எண்ணிக்கையை 227 ஆக உயர்த்த உதவினர். மொரிஸ் அதிகபட்சமாக 42 ஓட்டங்களை பெற, பெஹலுக்வாயோ 34 ஓட்டங்களையும், ரபாடா ஆட்டமிழக்காமல் 31 ஓட்டங்களையும் பெற்றுக்கொடுத்தனர். பந்துவீச்சில் யுஸ்வேந்திர சஹால் 4 விக்கெட்டுகளையும், பும்ரா மற்றும் புவனேஷ்வர்குமார் ஆகியோர் தலா 2 விக்கெட்டுகளையும் பகிர்ந்தனர்.

பின்னர், பெறக்கூடிய நிலையிலான வெற்றியிலக்கினை நோக்கி துடுப்பெடுத்தாடிய இந்திய அணி, சிக்கர் தவான் மற்றும் விராட் கோஹ்லி ஆகியோரின் விக்கெட்டுகள் வீழ்த்தப்பட்டிருந்தாலும், நிதானமாக ஆடி ஓட்டங்களை குவிக்கத் தொடங்கியது. குறிப்பாக இந்திய அணியின் துடுப்பாட்ட வரிசையில் அதிகம் பேசப்பட்ட நான்காவது வீரர் இடத்தில் களமிறங்கிய கே.எல்.ராஹுல், சிறப்பாக ஓட்டங்களை குவித்த ரோஹித் சர்மாவுடன் இணைப்பாட்டத்தை கட்டியெழுப்பினார்.

இவர்கள் இருவரும் மூன்றாவது விக்கெட்டுக்காக 85 ஓட்டங்களை பகிர்ந்திருந்த நிலையில், பந்துவீச்சு மாற்றமாக அழைக்கப்பட்ட ககிஸோ ரபாடா, ராஹுலின் விக்கெட்டினை கைப்பற்றினார். எனினும், தொடர்ந்து அரைச்சதத்தை கடந்து துடுப்பெடுத்தாடிய ரோஹித் சர்மா ஓட்டக்குவிப்பில் ஈடுபட, அவருடன் இணைந்த மகேந்திர சிங் டோனி நிதானமாக துடுப்பெடுத்தாடினார். இதில், ரோஹித் சர்மா தனது 23ஆவது ஒருநாள் சதத்தை பூர்த்திசெய்ததுடன், உலகக் கிண்ணத்தில் தன்னுடைய 2ஆவது சதத்தையும் பதிவுசெய்தார்.

>>Photos: Sri Lanka vs Afghanistan | ICC Cricket World Cup 2019 – Match 07<<

டோனி மற்றும் ரோஹித் சர்மா ஆகியோர் விக்கெட்டினை விட்டுக்கொடுக்காமல் வெற்றியிலக்கை நெருங்கிய போதும், துரதிஷ்டவசமாக இறுதிக்கட்டத்தில் டோனி 34 ஓட்டங்களுடன் ஆட்டமிழந்தார். எனினும், வெற்றியை கிட்டியிருந்த இந்திய அணி, ஹர்திக் பாண்டியாவின் அதிரடியுடன் இலகுவாக வெற்றியிலக்கை அடைந்தது. இதில், இறுதிவரை ஆட்டமிழக்காமல் துடுப்பெடுத்தாடிய  ரோஹித் சர்மா 122 ஓட்டங்களை குவித்திருந்தார்.

இதேவேளை இந்திய அணி தங்களுடைய முதல் போட்டியிலேயே வெற்றியினை பெற்றுள்ளதுடன், தென்னாபிரிக்க அணி தொடர்ச்சியாக தங்களுடைய மூன்றாவது போட்டியிலும் தோல்வியடைந்துள்ளது. உலகக் கிண்ணத் தொடருக்கு முன்னர் எதிர்பார்க்கப்படும் அணியாக இருந்த தென்னாபிரிக்க அணிக்கு இந்த தோல்விகள் அதிகமான ஏமாற்றத்தை ஏற்படுத்தியுள்ளது.

தொடர் தோல்விகளுக்கு முகங்கொடுத்து வரும் தென்னாபிரிக்க அணி, தங்களுடைய நான்காவது உலகக் கிண்ணப் போட்டியில் மேற்கிந்திய தீவுகள் அணியை எதிர்வரும் 10ஆம் திகதி எதிர்கொள்ளவுள்ளதுடன், இந்திய அணி எதிர்வரும் 9ஆம் திகதி அவுஸ்திரேலிய அணியை எதிர்கொள்ளவுள்ளது.

ஸ்கோர் விபரம்

Result


South Africa
227/9 (50)

India
230/4 (47.3)

Batsmen R B 4s 6s SR
Hashim Amla c Rohit Sharma b Jasprit Bumrah 6 9 1 0 66.67
Quinton de Kock c Virat Kohli b Jasprit Bumrah 10 17 1 0 58.82
Faf du Plessis b Yuzvendra Chahal 38 54 4 0 70.37
Rassie van der Dussen b Yuzvendra Chahal 22 37 1 0 59.46
David Miller c & b Yuzvendra Chahal 31 40 1 0 77.50
JP Duminy lbw b Kuldeep Yadav 3 11 0 0 27.27
Andile Phehlukwayo st MS Dhoni b Yuzvendra Chahal 34 61 2 1 55.74
Chris Morris c Virat Kohli b Bhuvneshwar Kumar 42 34 1 2 123.53
Kagiso Rabada not out 31 35 2 0 88.57
Imran Tahir c Kedar Jadhav b Bhuvneshwar Kumar 0 2 0 0 0.00


Extras 10 (b 1 , lb 3 , nb 0, w 6, pen 0)
Total 227/9 (50 Overs, RR: 4.54)
Fall of Wickets 1-11 (3.2) Hashim Amla, 2-24 (5.5) Quinton de Kock, 3-78 (19.1) Rassie van der Dussen, 4-80 (19.6) Faf du Plessis, 5-89 (22.6) JP Duminy, 6-135 (35.3) David Miller, 7-158 (39.3) Andile Phehlukwayo, 8-224 (49.2) Chris Morris, 9-227 (49.6) Imran Tahir,

Bowling O M R W Econ
Bhuvneshwar Kumar 10 0 44 2 4.40
Jasprit Bumrah 10 1 35 2 3.50
Hardik Pandya 6 0 31 0 5.17
Kuldeep Yadav 10 0 46 1 4.60
Yuzvendra Chahal 10 0 51 4 5.10
Kedar Jadhav 4 0 16 0 4.00


Batsmen R B 4s 6s SR
Shikhar Dhawan c Quinton de Kock b Kagiso Rabada 8 12 1 0 66.67
Rohit Sharma not out 122 144 13 2 84.72
Virat Kohli c Quinton de Kock b Andile Phehlukwayo 18 34 1 0 52.94
Lokesh Rahul c Faf du Plessis b Kagiso Rabada 26 42 2 0 61.90
MS Dhoni c & b Chris Morris 34 46 2 0 73.91
Hardik Pandya not out 15 7 3 0 214.29


Extras 7 (b 0 , lb 3 , nb 0, w 4, pen 0)
Total 230/4 (47.3 Overs, RR: 4.84)
Fall of Wickets 1-13 (5.1) Shikhar Dhawan, 2-54 (15.3) Virat Kohli, 3-139 (31.3) Lokesh Rahul, 4-213 (46.1) MS Dhoni,

Bowling O M R W Econ
Imran Tahir 10 0 58 0 5.80
Kagiso Rabada 10 1 39 2 3.90
Chris Morris 10 3 36 1 3.60
Andile Phehlukwayo 8.3 0 40 1 4.82
Tabraiz Shamsi 9 0 54 0 6.00



முடிவு – இந்திய அணி 6 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி

>>மேலும் பல கிரிக்கெட் செய்திகளைப் படிக்க<<