சர்வதேச கிரிக்கெட்டுக்கு விடைகொடுக்கும் தினத்தை அறிவித்த மாலிங்க

1266

இங்கிலாந்தில் இவ்வருடம் நடைபெறவுள்ள உலகக் கிண்ண கிரிக்கெட் போட்டிகளின் பிறகு ஒருநாள் அரங்கிலிருந்தும், 2020ஆம் ஆண்டு அவுஸ்திரேலியாவில் நடைபெறவுள்ள டி-20 உலகக் கிண்ணத் தொடருக்குப் பின்னர் டி-20 அரங்கிலிருந்து தான் ஓய்வு பெற உள்ளதாக இலங்கை அணியின் நட்சத்திர வேகப்பந்து வீச்சாளரும், ஒருநாள் மற்றும் டி-20 அணிகளின் தலைவருமான லசித் மாலிங்க தெரிவித்துள்ளார்.

தென்னாபிரிக்க அணியுடன் நேற்றுமுன்தினம் (22) நடைபெற்ற இரண்டாவது டி-20 போட்டியில் இலங்கை அணி 16 ஓட்டங்கள் வித்தியாசத்தில் தோல்வியடைந்தது. இந்த போட்டியைத் தொடர்ந்து இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு உரையாற்றும்போதே மாலிங்க தனது ஓய்வு குறித்த முடிவை வெளியிட்டார்.

உலகக் கிண்ணத்தில் விளையாடும் நோக்கில் ஐ.பி.எல் போட்டிகளை தவிர்க்கும் மாலிங்க

நட்சத்திர வேகப்பந்து வீச்சாளரான லசித்…

அங்கு தொடர்ந்து கருத்து வெளியிட்ட மாலிங்க, இந்த வருடம் இங்கிலாந்தில் நடைபெறவுள்ள உலகக் கிண்ண போட்டிகளுடன் ஒருநாள் போட்டிகளில் இருந்து ஓய்வு பெறவுள்ளேன். மேலும், 2020 ஆம் ஆண்டு அவுஸ்ரேலியாவில் நடைபெறவுள்ள டி-20 உலகக் கிண்ணப் போட்டிகள் வரை தொடர்ந்து டி-20 போட்டிகளில் விளையாடுவதற்கு எதிர்பார்த்துள்ளேன்” என தெரிவித்தார்.

தென்னாபிரிக்க அணியுடனான 2ஆவது டி-20 போட்டியில் தனது 97ஆவது டி-20 விக்கெட்டைக் கைப்பற்றிய மாலிங்க உலக டி-20 அரங்கில் அதிக விக்கெட்டுகளை வீழ்த்திய பாகிஸ்தானின் சஹீட் அப்ரிடியை முந்துவதற்கு (98 விக்கெட்) இன்னும் 2 விக்கெட்டுகள் மாத்திரமே தேவைப்படுகின்றன.

இலங்கை கிரிக்கெட் அணியின் அனுபவமிக்க வேகப்பந்து வீச்சாளரான 35 வயதாகும் லசித் மாலிங்க, இலங்கை அணிக்கு பாரிய சேவையாற்றிய முக்கிய வீரராவார்.  

முத்தையா முரளிதரன் மற்றும் சமிந்த வாஸுக்குப் பிறகு பந்துவீச்சாளராக இலங்கை அணிக்கு அதிகளவு வெற்றியைப் பெற்றுக்கொடுத்த வீரராகவும் அவர் விளங்குகிறார். அதிலும் குறிப்பாக, 2014ஆம் ஆண்டு நடைபெற்ற டி20 உலகக் கிண்ணத்தை இலங்கைக்கு முதற்தடவையாக பெற்றுக்கொடுத்த இலங்கை அணியின் தலைவராகவும் அவர் பணியாற்றினார்.

அதுமாத்திரமன்றி, டி-20 போட்டிகளில் உலக கிரிக்கெட் ரசிகர்கள் மத்தியில் அதிக வரவேற்பைப் பெற்றுக்கொண்ட ஒரேயொரு இலங்கை வீரரும் லசித் மாலிங்கதான்.

Video – ThePapare விளையாட்டுக் கண்ணோட்டம் பாகம் – 69

டெஸ்ட் தொடரை வென்று வரலாறு…

தொடர் உபாதைகள் மற்றும் வயது முதிர்ச்சி காரணமாக மாலிங்க அண்மைக்காலமாக இலங்கை அணியிலிருந்து தொடர்ந்து புறக்கணிக்கப்பட்டு வந்தார். இந்த நிலையில், இவ்வருடம் இங்கிலாந்தில் நடைபெறவுள்ள உலகக் கிண்ணப் போட்டிகளுடன் தான் ஓய்வுபெறப் போவதாக கடந்த சில மாதங்களுக்கு முன் தெரிவித்தும் இருந்தார்.

இதுஇவ்வாறிருக்க, கடந்த 2016ஆம் ஆண்டு முற்பகுதியல் காலில் ஏற்பட்ட உபாதை காரணமாக மாலிங்க கிரிக்கெட் போட்டிகளிலிருந்து சிறிது காலம் ஓய்வு பெற்றார். எனினும், கடந்த 2017ஆம் ஆண்டு முற்பகுதியில் அவுஸ்திரேலியாவில் நடைபெற்ற டி-20 போட்டிகளில் மீண்டும் களமிறங்கியதுடன், அதே வருடம் நடைபெற்ற .பி.எல் போட்டிகளிலும் பங்கேற்றிருந்தார்.

ஆனால், சுமார் ஒன்றரை வருடங்களாக ஒருநாள் போட்டிகளில் விளையாடாமல் இருந்த அவர், கடந்த 2017ஆம் ஆண்டு ஜூன் மாதம் இங்கிலாந்தில் நடைபெற்ற சம்பியன்ஸ் கிண்ண கிரிக்கெட் போட்டிகளில் இலங்கை அணிக்காக விளையாடியிருந்தார்.

இந்தப் போட்டித் தொடரின் அரையிறுதிப் போட்டியில் இலங்கையை பாகிஸ்தான் அணி 3 விக்கெட்டுகளால் வெற்றிபெற்றது. எனினும், லசித் மாலிங்க தனது பந்துவீச்சில் பாகிஸ்தான் அணி வீரர்களுக்கு கடும் அழுத்தம் கொடுத்தார்.

மும்பை இந்தியன்ஸ்: இலங்கை ரசிகர்களின் ஒரு தசாப்த காதல்

அது 2007 கிரிக்கெட் உலகக் கிண்ணம்…

எனினும், அவர் இலங்கை அணிக்காக இறுதியாக கடந்த 2017ஆம் ஆண்டு இடம்பெற்ற இந்திய அணியின் இலங்கை சுற்றுப்பயணத்தின் ஒற்றை டி-20 போட்டியில் விளையாடியிருந்தார்.  

இதுஇவ்வாறிருக்க, கடந்த இரு வருடங்களாக உள்ளூர் கழக மட்டப் போட்டிகளில் பிரகாசித்திருந்த மாலிங்க, வழமையான போர்முக்கு திரும்பியிருந்ததுடன், இவ்வருட முற்பகுதியில் நடைபெற்ற நியூசிலாந்து அணிக்கு எதிராக அண்மையில் நிறைவுக்கு வந்த ஒருநாள் மற்றும் டி-20 தொடர்களுக்கான இலங்கை அணியின் தலைவராக நியமிக்கப்பட்டார்.

எனினும், குறித்த தொடரில் மாலிங்க பந்துவீச்சில் சிறப்பாக செயல்பட்டு அணியை திறம்பட வழிநடத்தியிருந்த போதிலும், துடுப்பாட்ட வீரர்களின் பொறுப்பற்ற ஆட்டத்தால் இலங்கை அணி, ஒருநாள் மற்றும் டி-20 தொடர்களை இழந்தது. அதேபோல, தற்போது தென்னாபிரிக்காவுடன் நடைபெற்று வருகின்ற ஒருநாள் மற்றும் டி-20 தொடர்களையும் இலங்கை அணி பறிகொடுத்தது.

எனவே, 2019ஆம் ஆண்டானது லசித் மாலிங்கவுக்கு அடுத்தடுத்து ஏமாற்றங்களைக் கொடுத்திருந்தாலும், எதிர்வரும் மே மாதம் ஆரம்பமாகவுள்ள உலகக் கிண்ணத்துக்கான இலங்கை அணியில் மீண்டும் இடம்பெற்று இலங்கை அணியை அவர் வழிநடத்துவாரா என்பது சந்தேகம் தான்.

இசுரு உதானவின் அதிரடி வீண்; டி20 தொடரை இழந்தது இலங்கை

தென்னாபிரிக்க அணிக்கு எதிரான…

எனினும், எதிர்வரும் ஏப்ரல் மாதம் 4ஆம் திகதி ஆரம்பமாகவுள்ள மாகாணங்களுக்கிடையிலான ஒருநாள் போட்டியில் காலி அணிக்கு தலைவராக நியமிக்கப்பட்டுள்ள மாலிங்க, தனது அனுபவத்தையும், திறமையையும் வெளிக்காட்டி தான் ஓய்வுபெறவுள்ள இறுதி ஒருநாள் தொடரான இம்முறை உலகக் கிண்ணப் போட்டியில் இடம்பெற வேண்டும் என்பதுதான் அனைவரது எதிர்பார்ப்பாகும்.

2004ஆம் ஆண்டு டெஸ்ட் அறிமுகத்தைப் பெற்றுக்கொண்ட மாலிங்க, இலங்கைக்காக 30 டெஸ்ட் போட்டிகளில் விளையாடி 101 விக்கெட்டுகளைக் கைப்பற்றியுள்ளார். எனினும், 2010ஆம் ஆண்டு நடைபெற்ற இந்திய அணிக்கெதிரான டெஸ்ட் தொடருடன் டெஸ்ட் அரங்கிற்கு விடைகொடுத்தார்.

அதேபோல, 2004ஆம் ஆண்டு ஒருநாள் அறிமுகத்தையும் பெற்றுக்கொண்ட அவர், இதுவரை 218 ஒருநாள் போட்டிகளில் பங்குபற்றி 322 விக்கெட்டுகளையும், 72 டி-20 போட்டிகளில் விளையாடி 97 விக்கெட்டுகளையும் கைப்பற்றியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

>>மேலும் பல கிரிக்கெட் செய்திகளைப் படிக்க<<