கால்பந்தை தேர்ந்தெடுத்த இங்கிலாந்தின் சச்சின் டென்டுல்கர்

116
England Cricketer Flintoff on Phil Neville
England Cricketer Flintoff on Phil Neville

இங்கிலாந்து முன்னாள் கால்பந்து வீரர் பில் நெவல் கால்பந்தை தேர்வு செய்ததால் இங்கிலாந்து சிறந்த கிரிக்கெட் வீரர் ஒருவரை இழந்து விட்டதாக அந்நாட்டு முன்னாள் சகலதுறை வீரர் அன்ட்ரூ பிளின்டொப் தெரிவித்துள்ளார்.

தற்போது இங்கிலாந்து பெண்கள் கால்பந்து அணியின் பயிற்சியாளராக செயற்படும் பில் ஆரம்பத்தில் பிளின்டொப் உடன் லங்கஷெர் கழகத்தின் வயது மட்ட அணியில் ஆடியவராவார். அத்துடன் அந்தக் கழகத்தின் இரண்டாம் நிலை பதினொருவர் அணியிலும் அவர் இடம்பிடித்தார்.    

பார்சிலோனா பனிப் போர்: மெஸ்ஸியின் எதிர்காலம் என்ன?

ஸ்பெயினின் பிரபல பார்சிலோனா கழகத்திற்குள் நாளுக்கு நாள் அதிகரித்து வரும் குழப்பங்களுக்கு மத்தியில் அதன் அணித்…

எனினும், மன்செஸ்டர் யுனைடட் அணியில் வாய்ப்புக் கிடைத்ததை அடுத்து பில் கால்பந்தில் அவதானம் செலுத்தினார். 1990ஆம் ஆண்டு தொடக்கம் மன்செஸ்டர் யுனைடட் இளையோர் அணியில் இடம்பெற்ற அவர் 1994இல் தனது 17 ஆவது வயதில் இளம் வீரராக அதன் பிரதான அணியில் இடம்பிடித்ததன் மூலம் தொழில்முறை கால்பந்து வீரராக மாறினார்

அது தொடக்கம் மன்செஸ்டர் யுனைடட் அணியுடன் 11 ஆண்டுகளும், இங்கிலாந்தின் எவர்டன் கழகத்துடன் 8 ஆண்டுகளும் விளையாடிய அவர் இங்கிலாந்து தேசிய அணியில் மத்தியகள வீரராக ஒன்பது ஆண்டுகள் தனது திறமையை வெளிப்படுத்தியுள்ளார். இதன்மூலம் இங்கிலாந்தின் முன்னணி கால்பந்து வீரராகவும் அவர் தமது இடத்தை தக்கவைத்துக் கொண்டார்

எனினும், சிறுவயதில் கிரிக்கெட் விளையாடி, நெவில் கிரிக்கெட்டை தொடர்ந்திருந்தால் மிகச் சிறந்த வீரராக உருவெடுத்திருக்கலாம் என்கிறார் பிளின்டொப்.

நான் லங்கஷெர் கழகத்தின் கனிஷ்ட அணியில் பில் உடன் ஒன்றாக விளையாடினேன். அவர் என்னை விடவும் ஒரு வயது மூத்தவர். உண்மையில் அவர் அந்தக் காலத்தில் திறமை மிக்க வீரர். அவர் தொடர்ந்து விளையாடி இருந்தால் அவர் இங்கிலாந்தின் சச்சின் டென்டுல்கர் அல்லது ரிக்கி பொண்டிங் ஆக வந்திருக்க முடியும். அவர் அத்தனை திறமை கொண்டவர்.  

அவர் விளையாட வந்த நாட்களில் ஆரம்ப வீரராக எப்போதும் 100 ஓட்டங்களை எடுப்பார். அதற்குப் பின்னர் பந்து வீசி எதிரணியின் அனைத்து விக்கெட்டுகளையும் வீழ்த்துவார். அவர் சிறந்து வேகப்பந்து வீச்சாளராக இருந்தார் என்று பிளின்டொப் குறிப்பிட்டார்

இந்நிலையில் லங்கஷெர் அணிக்காக அவருக்கு ஆட வாய்ப்பு இருந்தபோதும் மன்செஸ்டர் யுனைடட் கால்பந்து கழகத்தில் ஆட அவர் தீர்மானித்துள்ளார்

அவரை லங்கஷெர் அணியில் இருந்து ஒப்பந்தத்திற்கு அழைத்தார்கள். ஆண்டுக்கு 2,500 பௌண்ட் சம்பளம் கொண்டதாக அந்த ஒப்பந்தம் இருந்ததாக எனக்கு ஞாபகம். அப்படி இல்லை என்றால் மன்செஸ்டர் யுனைடட் உடன் இணைந்து கால்பந்து விளையாட வேண்டி இருந்தது. எப்படி இருந்தபோதும் அவர் யுனைடட் அணியில் இணைந்தது எனது அதிர்ஷ்டம். இல்லாவிட்டால் நான் டார்பிஷெர் அல்லது வேறு கிரிக்கெட் கழகத்திற்காகவே ஆட வேண்டி இருந்திருக்கும் என்கிறார் பிளின்டொப்

எவ்வாறாயினும் கிரிக்கெட் அல்லது கால்பந்து இரண்டில் ஒன்றை தேர்வு செய்ய வேண்டி ஏற்பட்டது பற்றி பில் நெவில் பல தடவைகள் கருத்துக் கூறியுள்ளார். அது தனது வாழ்நாளில் எடுத்த கடினமான முடிவு என்று அவர் அது பற்றி குறிப்பிட்டுள்ளார்.

மன்செஸ்டர் யுனைடட் அணிக்காக ஆடிய பிரபல வீரரான பில்லின் சகோதரர் கரி நெவில்லும் சிறு வயதில் சிறந்த கிரிக்கெட் வீரராக இருந்ததோடு 1992 ஆம் ஆண்டு போல்டன் கிரிக்கெட் லீக் தொடரில் சம்மர் கிண்ண போட்டியில் கிரீன்மௌன்ட் அணிக்காக திறமையை வெளிப்படுத்தியுள்ளார். அந்தப் போட்டி ஒன்றில் அவுஸ்திரேலிய முன்னாள் வீரர் மத்தியு ஹெய்டன் 140 ஓட்டங்களை பெற்றபோது அவருடன் இணைந்து கரி 110 ஓட்டங்களை பெற்றிருந்தார். இதன்மூலம் அவர் கிரீன்மௌன்ட் அணியை இறுதிப் போட்டி வரை அழைத்துச் சென்றார்.    

எனினும் பில் அளவுக்கு கரி சிறந்த கால்பந்து வீரர் இல்லை என்று பிளின்டொப் குறிப்பிடுகிறார்.

கரியிடம் கேட்டால் தானே உலகில் இருந்த சிறந்த கிரிக்கெட் வீரர் என்று கூறுவார் என்று நகைச்சுவையாக குறிப்பிட்டார் பிளின்டொப். அவருக்கு போல்டன் போன்ற கழகங்களில் சிறந்த வீரராக வாய்ப்பு இருந்தது. ஆனால் பில் தான் சிறந்த வீரர். அவர் பழகுவதற்கு நல்லவராக இருந்தார் என்றார்

கார்டிப் மருத்துவமனைக்கு மனைவியுடன் சேர்ந்து நிதி வழங்கிய க்ரேத் பேல்

கொரோனாவினால் பாதிக்கப்பட்டவர்களுக்கு உதவும் வகையில் ரியல் மெட்ரிட் அணிக்காக…

எவ்வாறாயினும் பில் மற்றும் கரி இருவரும் கிரிக்கெட்டை கைவிட்டு மன்செஸ்டர் யுனைடட் அணியுடன் கால்பந்தில் ஈடுபட தீர்மானித்ததோடு அதன்மூலம் அவர்கள் இருவருக்கும் ஒரே அணியில் விளையாட வாய்ப்புக் கிடைத்தது

கரி தனது தொழில்முறை கால்பந்தை மன்செஸ்டர் யுனைடட் அணியில் செலவிட்ட அதேவேளை பில் அந்தக் கழகத்துடன் ஆடிய பதினொரு ஆண்டுகளில் 1998-99 ஐரோப்பிய சம்பியன்ஸ் லீக் கிண்ணம், 6 தடவைகள் ப்ரீமியர் லீக் பட்டம் மற்றும் மேலும் பல உள்நாட்டு சம்பியன் பட்டங்களையும் வென்றுள்ளார்.

2013 ஆம் ஆண்டு கால்பந்தில் இருந்துய்வு பெற்ற பில் அதன் பின் பயிற்சியாளராக செயற்பட்டதோடு அதன்போது பல அணிகளுக்கு பயிற்சியாளராக இருந்துள்ளார். 2018 ஆம் ஆண்டு இங்கிலாந்து பெண்கள் அணியின் பயிற்சியாளர் பொறுப்பை ஏற்றார்

2019 ஆம் ஆண்டு அவரின் பயிற்சியின் கீழ் இங்கிலாந்து பெண்கள் அணி SheBelieves கிண்ணத்தை முதல் முறை வென்றதோடு தொடர்ந்து அந்த ஆண்டில் நடைபெற்ற பெண்கள் கால்பந்து உலகக் கிண்ணத்தில் இங்கிலாந்து அணி அரையிறுதி வரை முன்னேற்றம் கண்டது

எவ்வாறாயினும் உலகக் கிண்ண காலிறுதிப் போட்டிக்குப் பின்னர் நடைபெற்ற 11 போட்டிகளில் 7 இல் இங்கிலாந்து பெண்கள் அணி தோல்வி அடைந்த நிலையில் பில் எதிர்வரும் மாதங்களில் தனது பயிற்சியாளர் பொறுப்பில் இருந்து விலகிக்கொள்ள வாய்ப்பு இருப்பதாகக் கூறப்படுகிறது.   

>>மேலும் பல விளையாட்டு செய்திகளைப் படிக்க<<