மும்பை இந்தியன்ஸ்: இலங்கை ரசிகர்களின் ஒரு தசாப்த காதல்

1472
GettyImages

அது 2007 கிரிக்கெட் உலகக் கிண்ணம் என்ற புயல் வீசி ஓய்ந்திருந்த காலம். உலகக் கிண்ணம் கைவசமாகாது போயிருந்தாலும் இலங்கை கிரிக்கெட்டின் மீது ரசிகர்கள் அனைவருமே மட்டில்லாத காதல் கொண்டிருந்த காலம். இலங்கை கிரிக்கெட்டின் பொற்காலம். அப்போதுதான் T20 கிரிக்கெட் மெல்ல மெல்ல உலக கிரிக்கெட்டுக்குள் நுழைகிறது.  

அற்புத சுழற்பந்தினால் சென்னை அணிக்கு முதல் வெற்றி

இந்தியாவில் இன்று (23) ஆரம்பமாகியுள்ள…

2007ல் .சி.சி. அறிமுகப்படுத்திய முதலாவது T20 உலகக் கிண்ண போட்டிகளின் முதல் சுற்றிலேயே கென்யாவுக்கு எதிராக இலங்கை அணி அடித்த 260-4 என்ற இமாலய இலக்கை கென்யாவால் மட்டுமல்ல, அதை சர்வதேச கிரிக்கெட்டில் அடுத்த 8 வருடங்களில் யாருமே எட்டவில்லை. இந்த போட்டியிலே சனத் ஜெயசூரிய 44 பந்துகளில் 88 ஓட்டங்களை பெற்று T 20 போட்டிகள் என்றால் இப்படித்தான் இருக்க வேண்டும் என்று இலக்கணம் கொடுத்திருந்தார். 2007 உலகக் கிண்ண போட்டிகளில் லசித் மாலிங்க எடுத்த 4 பந்துகளில் 4 விக்கெட்டுகள் என்ற சாதனை இன்னும் அத்தனை பந்துவீச்சாளர்களுக்கும் எட்டாக்கனிதான்.

இவ்வாறிருக்க இந்தியாவில் லலித் மோடி என்பவரால் இந்தியன் ப்ரீமியர் லீக் (IPL) என்ற புதிய தொடர் சர்வதேச வீரர்கள் அனைவரையும் இணைத்து ஆரம்பிக்கப்படுகிறது.

கிரிக்கெட் என்று சொன்னாலே அப்போதெல்லாம் சச்சின் தான். சச்சின் ஆடுவதை பார்க்கவென்று உலகமெங்கும் பலகோடி மக்கள் இருக்கிறார்கள். சச்சின் வெறும் வீரரல்ல, இந்திய ரசிகர்கள் அத்தனை பேருக்கும் தரிசனம் கொடுக்கும் கடவுள். .பி.எல் இல் சச்சினின் அணியில் யார் விளையாடப்போகிறார்கள் என்று பார்த்துக்கொண்டிருந்த இலங்கை ரசிகர்களுக்கு ஜாக்பாட் அடித்தது என்றே சொல்லலாம்.

சச்சின், ஹர்பஜன், பொல்லக், பிராவோ என்று நட்சத்திர பட்டியல் குவிந்திருந்த அணியில் ஜெயசூரிய, மாலிங்க மட்டுமன்றி டில்ஹார பெர்னாண்டோவும் இணைக்கப்பட்டிருந்தனர். “கண்ணா மூணு லட்டு தின்ன ஆசையா?” என்பது போல இருந்தது.

அப்போது ஆரம்பித்ததுதான் இந்த தீராக்கனா. இந்தத் தொடரில் சென்னை சூப்பர் கிங்ஸிற்கு எதிரான முதல் போட்டியில் ஆரம்பத் துடுப்பாட்ட வீரராக களமிறங்கிய ஜெயசூரிய 48 பந்துகளில் 114 ஓட்டங்களை விளாசினார். இதுவே மும்பை அணி சார்பில் பதிவான முதல் சதமும் ஆகும். .பி.எல். அதிகம் பிரபல்யமாகி இருக்காத அந்த நேரத்தில் சனத் ஜெயசூரியவின் அந்த அதிரடிச் சதம் இலங்கை ஊடகங்களின் விளையாட்டு பக்கங்களில் நிரம்பி வழிந்தன. அத்தோடு எங்கள் ரசிகர்களும் கொஞ்சம் கொஞ்சமாய் அந்த கந்தர்வ அணியின் கரம்பிடிக்க தொடங்கினார்கள்.

Photos: Sri Lanka Vs South Africa 2nd T20I in Super Sports Park

ThePapare.com | 22/03/2019 Editing and re-using images without permission of ThePapare.com….

இலங்கை – இந்தியன் என்ற வேறுபாடு எதுவுமின்றி அனைவரும் காதல் கொண்ட வீரர் சச்சின் ரமேஷ் டெண்டுல்கர். 10ஆம் நம்பர் சட்டையும் MRF துடுப்பு மட்டையுடன் சுருட்டை முடியுடனும் மைதானத்தில் நுழையும் போதே ”சச்சின் சச்சின்” என்ற காதல் கானங்கள் ஒலிக்க தொடங்கிவிடும். சச்சின் என்ற ஆளுமை மும்பை அணியை வழிநடத்த மறுபுறம் ஜெயசூரிய, மாலிங்க போன்ற இலங்கை சிங்கங்கள் மும்பை அணியை தாங்கும் தூண்களாக மாறிவிட்டிருந்தனர்.

2010ம் ஆண்டு அபரிமிதமாக ஆடிய சச்சின் இறுதிப் போட்டிவரை மும்பையை அழைத்துச் சென்றும் இறுதிப் போட்டியில் சென்னையிடம் தோல்வியடைய வேண்டியதாயிற்று. ஆனாலும் சச்சின், தன்னை மிஞ்சிய ஒரு வீரன் உலகில் இல்லை என்பதை மீண்டும் நிரூபித்து செம்மஞ்சள் நிற (ஆரஞ்சு) தொப்பியை தனதாக்கிக் கொண்டார். தொடர்ந்து 2011ல் 28 விக்கெட்களை கைப்பற்றி ஊதாத் தொப்பியை தன்வசமாக்கினார் மாலிங்க. சச்சினுக்கு அடுத்தாக மும்பை அணியின் முக்கிய வீரர் மாலிங்க தான் என்பது ஒருவாறாக அனைவராலும் ஏற்றுக்கொள்ளப்பட்டது. அதற்கேற்ப மாலிங்கவும் அணியின் பந்துவீச்சு பாரத்தை தனது தோள்களில் சுமந்து கொண்டிருந்தார்.

2013ல் சச்சினின் ஓய்வுக்கு பிறகு ரோஹித் ஷர்மாவை தலைவராக நியமித்தது மும்பை அணி. முதலாவது போட்டியிலேயே றோயல் செலஞ்சர்ஸ் அணியிடம் 2 ஓட்டங்களால் தோல்வியடைந்த அவ்வணிக்கு ஆரம்பமே சரிவாகத்தான் இருந்தது. அந்த நாட்களில் இருந்தே சென்னை மற்றும் மும்பை அணிகளுக்கிடையிலான போட்டியென்றால் ஒரு இந்தியாபாகிஸ்தான் போட்டிக்கு நிகரான சூழல் இருக்கும். ஒரு புறம் தோனி, ரெய்னா, முரளி மறுபுறம் ரோஹித், ஹர்பஜன், மாலிங்க என்று இந்தியாவுக்கும் இலங்கைக்கும் உள்ளேயே ரசிகர்களை எதிரிகளாக்க கூடிய வல்லமை கொண்டவை இந்த அணிகள். ஏப்ரல் 6, 2013 சென்னைக்கு எதிரான போட்டியில் 9 ஓட்டங்களால் வெற்றி பெற்றிது மும்பை அணி. அதுவே மும்பைக்குள் இருந்த மாணிக்கம், பாட்ஷாவாகிய கதை.

தொடர்ந்து வெற்றிகள் குவியவே 16 போட்டிகளில் 11 வெற்றிகளுடன் 2வது அணியாக அடுத்த சுற்றுக்கு தகுதி பெறுகின்றது மும்பை. இறுதிப் போட்டிக்கான முதல் தகுதிகாண் சுற்றில் மீண்டும் சென்னையுடன் மோத அந்தப் போட்டியில் மும்பையை பழிதீர்த்தது சென்னை. அடுத்த இரண்டாவது தகுதிகாண் போட்டியில் வென்றால் மாத்திரமே இறுதிப் போட்டி என்ற நிலையில் களம்கண்ட மும்பை 4 விக்கெட்களால் வெற்றிபெற்று மீண்டும் சென்னை அணியுடன் இறுதிப் போட்டிக்கு தெரிவாகியிருந்தது.

இறுதிப் போட்டியில் 20 ஓவர்களுக்கு 148 ஓட்டங்களை மாத்திரமே பெற்று 9 விக்கெட்களை இழந்துவிட்டது. இரண்டாவது இறுதிப் போட்டியும் தோல்வியிலேயே முடிந்து விடுமோ என்ற எண்ணம் தலை தூக்க முன்னரே மாலிங்க, ஜோன்சன், ஹர்பஜன் ஆகியோரின் பந்துவீச்சில் தலா இரு விக்கெட்கள் வீழ்த்தப்பட ஏனைய வீரர்களும் கணிசமான பங்களிப்பு செய்ய 20 ஓவர்களில் 9 விக்கெட்களை இழந்து வெறும் 125 ஓட்டங்களுக்குள் சுருண்டது இருமுறை சம்பியன்களான சென்னை. கன்னி வெற்றியை சுவைத்த மும்பை அத்தோடு நின்றுவிடவில்லை.

2014 மே மாதம் 25ம் திகதி மும்பை ரசிகர்களால் மறக்க முடியாததொரு தினம். T20 கிரிக்கெட் வரலாற்றின் மிகச்சிறந்ததொரு போட்டியை சர்வதேச ரசிகர்களுக்கு பரிசாக வழங்கி இருந்தது மும்பை. லீக் சுற்றுக்களின் இறுதிப் போட்டியில் ராஜஸ்தானை எதிர்க்கிறது மும்பை. அந்த போட்டியில் ஒரு பாரிய வெற்றியை பெற்றால் மாத்திரமே அடுத்த சுற்று என்ற நிலையில் முதலில் துடுப்பெடுத்தாடிய ராஜஸ்தான் அணி 189 ஓட்டங்களை குவித்துவிட அம்பானி முதல் ஆட்டோக்காரர்கள் வரை தலையில் கை வைத்துவிட்டார்கள். T20 போட்டியொன்றில் 190 ஓட்டங்களை பெறுவதொன்றும் அத்தனை இலகுவல்ல. அதிலும் அந்த இமாலய இலக்கை 13.4 ஓவர்களில் பெற்றால் மட்டுமே அடுத்த சுற்று என்று அறிவிக்கப்பட்டது.

ஆனால் அந்த ஆச்சர்யம் நிகழ்ந்தது. கோரே அண்டர்சனின் அபார ஆட்டத்தால் 13.4 ஓவர்களில் 189 ஓட்டங்களை பெற்று இலக்கை சமன் செய்யும் மும்பை அணி. அந்த பந்தில் வெற்றி பெற வேண்டும் என்பது தானே அறிவிப்பு, சமனானால் என்னாவது என்று மைதானமே குழப்பமடைய அடுத்த பந்தில் ஒரு பௌண்டரி அடித்தால் வாய்ப்பு இருக்கிறது என்கிறார்கள் மத்தியஸ்தர்கள். ஒட்டுமொத்த அரங்கும் அமைதியாகின்றது. இதுவரை .பி.எல் போட்டிகளில் அதிகம் பிராகாசிக்காத இந்திய வீரர் ஆதித்தியா டாரே ஆடிக்கொண்டு இருக்கிறார். வாழ்வா சாவா எனும் போராட்டம். நேராக வந்த பந்தை சிக்ஸராக மாற்றி மும்பை அணியின் நாயகன் ஆனார் டாரே.

ஏற்கனவே 2011 சம்பியன்ஸ் லீக்கினை வெற்றிபெற்ற மும்பை அணி மீண்டும் 2013ல் வெற்றியடைந்து ஒரே வருடத்தில் .பி.எல் மற்றும் சம்பியன்ஸ் கிண்ணத்தை வென்ற அணியென்ற பெருமையையும் பெற்றது.

2019 ஐ.பி.எல் தொடரில் நிகழ்த்தப்படவுள்ள அரிய சில சாதனைகள்

ஐ.பி.எல் டி-20 தொடரின் 12 ஆவது…

தொடர்ந்து 2015ம் ஆண்டிலே மும்பை விளையாடிய முதல் 4 போட்டிகளிலும் தோல்வியடைந்து இந்த தொடரில் மும்பைக்கு இனி இடமில்லை என்ற நிலையில் இருந்து மும்பையின் பொறுமையும் நம்பிக்கையும் ரசிகர்கள் தந்த உற்சாகமும் மும்பையை மீண்டும் வெற்றியாளர்களாக்கியது.

அடுத்தது 2017. ஒவ்வொரு இலங்கை ரசிகனும் மும்பையை மேலும் ரசிக்க தொடங்கிய தருணம். அணியில் லசித் மாலிங்க முன்னணி பந்து வீச்சாளராக இருந்த அதே வேளையில் இலங்கையின் முன்னாள் தலைவர் மஹேல ஜெயவர்தனவை தலைமை பயிற்றுனராக நியமித்தது மும்பை நிர்வாகம்.

மும்பையின் வைரிகளான சென்னையும் 2 வருட கால தடைக்கு உட்பட்டு இருந்த காரணத்தால் தனிக்காட்டு ராஜாவாக ஆட்சி செய்தது மும்பை. மஹேலவின் வழிகாட்டலில் முதல் ஒருசில போட்டிகள் சறுக்கினாலும் மீண்டு வெற்றிநடை போட்டது. இந்த தொடரிலும் இறுதிப் போட்டிக்கு தகுதி பெற்றது மும்பை.

2017 .பி.எல் இறுதிப் போட்டி பார்த்த இருதய நோயாளர்களின் உயிரோடு நிச்சயம் விளையாடி இருக்கும் இந்த ஆட்டம். ரைசிங் பூனே சூப்பர் ஜெயிண்ட் அணிக்கெதிரான இந்தப் போட்டியில் முதலில் துடுப்பெடுத்தாடிய மும்பை அணி வீரர்கள் அனைவரும் கைவிரித்து விடவே குருநால் பாண்டியாவின் போராட்டத்தால் 20 ஓவர்களில் 129 ஓட்டங்களை பெற்றுக்கொண்டது.

ஒரு T20 போட்டிக்கு 129 என்பது மிகக்குறைந்த இலக்கு. அதிலும் ஸ்டீவ் ஸ்மித், தோனி, ரஹானே, திருப்பதி என்று தொடர் முழுவதும் கலக்கி கொண்டிருந்தவர்களை கட்டுப்படுத்துவது அசாத்தியம். ஆனால் அந்த நிலையிலும் எந்த சலனமும் இன்றி பந்துவீசிய கரண் ஷர்மா மற்றும் லசித் மாலிங்க ஆகியோர் விக்கெட் வீழ்த்த தவறினாலும் ஓட்டங்களை சிக்கனமாகவே வழங்கினர்.

இறுதி ஓவரில் 10 ஓட்டங்கள் தேவைப்பட அந்த ஓவரிற்காக மிச்சல் ஜோன்சனை அழைத்தார் ரோஹித். ஸ்மித் ஆட்டமிழக்காமல் அரைச்சதம் கடந்து

2019 ஐ.பி.எல் தொடரில் நிகழ்த்தப்படவுள்ள அரிய சில சாதனைகள்

ஐ.பி.எல் டி-20 தொடரின் 12 ஆவது

ஆடிக்கொண்டு இருக்கிறார். முதல் பந்திலேயே பௌண்டரி அடிக்க 5 பந்துகளில் 6 ஓட்டங்கள் என்ற நிலை. மும்பை ரசிகர்கள் நகத்தில் ஆரம்பித்து அரைவாசி விரல் வரை கடித்துக்கொண்டு இருக்க அடுத்தடுத்த இரண்டு பந்துகளில் 2 விக்கெட்டுகள். இறுதிப்பந்தில் 4 ஓட்டங்கள் தேவைப்பட 2 ஓட்டங்களை முடித்து மூன்றாவது ஓட்டத்திற்கு முயற்சி செய்ய அந்த விக்கெட்டும் பறிபோகும். இப்படியான ஒரு த்ரில்லர் போட்டியில் வெறும் ஒரு ஓட்டத்தால் வென்று மூன்றாவது முறை சம்பியன் ஆகியது மும்பை.

மஹேலவின் வழிகாட்டலில் மும்பை பெற்ற இந்த வெற்றி பல சாதனைகளுக்கு சொந்தக்காரராக்கியது. ஜெயசூரியவிற்கும் மலிங்காவிற்கும் ரசிகர்களுக்குமாக மும்பை மீது காதல் கொண்ட இலங்கை ரசிகர்கள் இன்னமும் அந்த நிலையில் இருந்து விலகவில்லை. இதுவரை ஒரே அணிக்காக மட்டும் விளையாடிய வீரர்கள் மூவர். ஒருவர் விராத் கோலி. மற்றைய இருவரும் மும்பையை சேர்ந்த மாலிங்கவும் பொல்லார்டும். மும்பைக்கு என்று தன்னையே அர்ப்பணித்த மாலிங்க 2018ல் எந்த அணிக்கும் ஏலத்தில் செல்லவில்லை என்றாலும் மும்பையின் பந்து வீச்சு ஆலோசகராக கடமையாற்றினார்.

2019ம் ஆண்டிற்கான ஏலத்தில் 2 கோடி ரூபாய்க்கு மீண்டும் மும்பை மாலிங்காவை வாங்கியுள்ள நிலையில் முதல் முறையாக யுவராஜ் சிங் மும்பை அணிக்காக ஆடவுள்ளார். சமீபத்தில் ஸ்டார் ஸ்போர்ட்ஸ் பேட்டி ஒன்றில் ஆகாஷ் அம்பானி தர்க்கங்கள் இருந்தாலும் மாலிங்க தான் எங்களுடைய சிறந்த வெளிநாட்டு வீரர் என்று கூறியிருப்பது மாலிங்கவின் விசுவாசத்திற்கு கிடைத்த மெர்சல் வெற்றி.

2013, 2015, 2017 வரிசையில் அடுத்தது 2019!

கிரிக்கட் மேரி ஜான்!

>>மேலும் பல கிரிக்கெட் செய்திகளைப் படிக்க<<