உள்ளூர் டி20 தொடரில் அதிரடி சதம் விளாசிய சந்திமால்

2025

இலங்கை முதல்தர கிரிக்கெட் கழகங்களுக்கு இடையிலான மேஜர் டி-20 கிரிக்கெட் தொடரின் 6 போட்டிகள் இன்று காலை (19) நடைபெற்றன.

NCC எதிர் சரசென்ஸ் விளையாட்டுக் கழகம்

தினேஷ் சந்திமாலின் அதிரடி சதத்தின் மூலம் சரசென்ஸ் விளையாட்டுக் கழகத்திற்கு எதிரான போட்டியில் NCC கழகம் 47 ஓட்டங்களால் வெற்றி பெற்றது.

கொழும்பு கழகத்துக்காக ஐந்து விக்கெட்டுக்களை வீழ்த்திய வனிந்து ஹசரங்க

இலங்கை கிரிக்கெட் நிறுவனத்தின் ஏற்பாட்டில் இடம்பெற்றுவரும் முதல்தர கழகங்களுக்கு…

உள்ளூர் போட்டிகளில் திறமையை நிரூபிக்கக் கோரி இலங்கை அணியில் இருந்து நீக்கப்பட்ட அணித்தலைவரான சந்திமால் ஆரம்ப வீரராக வந்து 62 பந்துகளில் 6 சிக்ஸர்கள் மற்றும் 6 பௌண்டரிகளுடன் ஆட்டமிழக்காது 101 ஓட்டங்களை விளாசினார்.

Photos: NCC vs Saracens SC – Major T20 Tournament 2018/19

போட்டியின் சுருக்கம்

NCC 196/5 (20) – தினேஷ் சந்திமால் 101*, பத்தும் நிஸ்ஸங்க 35, சதுரங்க டி சில்வா 23, ரவீன் செயார் 2/28

சரசென்ஸ் விளையாட்டுக் கழகம் – 149/9 (20) – ரனித்த லியனாரச்சி 48, அண்டி சொலமன்ஸ் 35, சச்சின்த கொலம்பகே 3/08, டிலேஷ் குணரத்ன 2/28

முடிவு – ​ NCC 47 ஓட்டங்களால் வெற்றி


கோல்ட்ஸ் கிரிக்கெட் கழகம் எதிர் களுத்தறை நகர கழகம்

கட்டுநாயக்கவில் நடைபெற்ற போட்டியில் துடுப்பாட்டம் மற்றும் பந்துவீச்சில் சோபித்த கோல்ட்ஸ் அணி களுத்துறை நகர கழகத்தை 48 ஓட்டங்கள் வித்தியாசத்தில் வீழ்த்தியது. கோல்ட்ஸ் அணி சார்பில் ஆரம்ப துடுப்பாட்ட வீரர் சதீர சமரவிக்ரம 55 ஓட்டங்களை பெற்றார்.

களுத்துறை நகர கழகம் B குழுவுக்காக இதுவரை விளையாடிய நான்கு போட்டிகளிலும் தோல்வியையே சந்தித்துள்ளது.

போட்டியின் சுருக்கம்

கோல்ட்ஸ் கிரிக்கெட் கழகம் – 150/7 (20) – சதீர சமரவிக்ரம 55, டில்ருவன் பெரேரா 31, சச்சித ஜயதிலக்க 4/23, எரங்க ரத்னாயக்க 3/23

களுத்தறை நகர கழகம் – 102/6 (20) – நிபுன கமகே 22, பிரபாத் ஜயசூரிய 2/14, கவிஷ்க அஞ்சுல 2/15, நிசல தாரக்க 2/17

முடிவு – கோல்ட்ஸ் கிரிக்கெட் கழகம் 48 ஓட்டங்களால் வெற்றி


விமானப்படை விளையாட்டுக் கழகம் எதிர் இராணுவ கிரிக்கெட் கழகம்

இலங்கை விமானப்படை அணிக்கு எதிராக போட்டியை 8 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் இலகுவாக வென்ற இராணுவ அணி C குழுவில் தொடர்ச்சியாக 4ஆவது வெற்றியை பதிவு செய்து கொண்டது. விமானப்படை நிர்ணயித்த 154 ஓட்ட வெற்றி இலக்கை ஆரம்ப வரிசை வீரர்களின் அதிரடி ஆட்டம் மூலம் இராணுவ அணி 16 ஓவர்களிலேயே எட்டியது.

>>அகில தனன்ஜயவின் தடையை நீக்கியது ஐசிசி

போட்டியின் சுருக்கம்

விமானப்படை விளையாட்டுக் கழகம் – 153/5 (20) – ரொஸ்கோ தட்டில் 52*, ஆர்.எஸ். செம்புகுட்டிகே 26, யூ. பராக்ரிம 22, ஜானக்க சம்பத் 2/21

இராணுவ கிரிக்கெட் கழகம் – 154/2 (16.1) – அசேல குணரத்ன 54*, அஷான் ரன்திக்க 53, லக்ஷித்த மதுஷான் 22, ஹிமேஷ லியனகே 21*

முடிவு – இராணுவ கிரிக்கெட் கழகம் 8 விக்கெட்டுகளால் வெற்றி    

Photos: Air Force SC vs Army SC | Major T20 Tournament 2018/19


கடற்படை விளையாட்டுக் கழகம் எதிர் இலங்கை துறைமுக அதிகாரசபை

இலங்கை கடற்படை தனது அதிரடி பந்துவீச்சு மூலம் இலங்கை துறைமுக அதிகாரசபைக்கு எதிரான போட்டியில் 43 ஓட்டங்களால் இலகு வெற்றியை பெற்றுக்கொண்டது.

151 என்ற ஓட்ட வெற்றி இலக்கை துரத்திய துறைமுக அதிகார சபை அணிக்காக பிரிமோஷ் பெரேரா மாத்திரம் அரைச்சதம் ஒன்றைப் பெற ஏனைய வீரர்கள் குறைந்த ஓட்டத்துடன் ஆட்டமிழந்தனர்.

போட்டியின் சுருக்கம்

கடற்படை விளையாட்டுக் கழகம் – 150 (19.3) – சலித்த பெர்னாண்டோ 40, தரூஷன் இத்தமல்கொட 30, ரனேஷ் பெரேரா 3/24, பூர்ன டி சில்வா 2/22, சமிந்த பண்டார 2/31

இலங்கை துறைமுக அதிகாரசபை – 107 (18) – பிரிமோஷ் பெரேரா 56, துஷான் ஹேமன்த 3/09, தரூஷன் இத்தமல்கொட 2/16, சதிக் நிமல்ஷ 2/19

முடிவு – கடற்படை விளையாட்டுக் கழகம் 43 ஓட்டங்களால் வெற்றி


புளூம்பீல்ட் கிரிக்கெட் மற்றும் மெய்வல்லுனர் கழகம் எதிர் SSC

SSC அணிக்கு எதிராக தர்ஸ்டன் கல்லூரி மைதானத்தில் நடைபெற்ற போட்டியில் புளூம்பீல்ட் அணி 4 விக்கெட்டுகளால் வென்றது. மத்திய பின்வரிசையில் களமிறங்கிய மதூஷன் ரவிச்சந்திரகுமார் ஆட்டமிழக்காது பெற்ற 47 ஓட்டங்கள் புளூம்பீல்ட் அணியின் வெற்றிக்கு உதவியது. அவர் பந்துவீச்சிலும் 2 விக்கெட்டுகளை வீழ்த்தினார்.

போட்டியின் சுருக்கம்

SSC – 149/8 (20) – சதுன் வீரக்கொடி 41, நிபுன் தனஞ்சய 28, சச்சித்ர சேனநாயக்க 28, தசுன் சானக்க 23, அசெல் சிகெரா 2/20, மதூஷன் ரவிச்சந்திரகுமார் 2/20, சச்சின் ஜயவர்தன 2/20

புளூம்பீல்ட் கிரிக்கெட் மற்றும் மெய்வல்லுனர் கழகம் – 150/6 (17.1) – மதூஷன் ரவிச்சந்திரகுமார் 47*, சச்சின் ஜயவர்தன 34, ஜெப்ரி வெண்டர்சே 2/40

முடிவு – புளூம்பீல்ட் கழகம் 4 விக்கெட்டுகளால் வெற்றி

இலங்கை அணிக்காக விளையாட கிடைத்தமை அதிஷ்டம்: லசித் எம்புல்தெனிய

இலங்கை மற்றும் தென்னாபிரிக்க அணிகளுக்கிடையிலான முதலாவது டெஸ்ட்…

கண்டி சுங்க விளையாட்டுக் கழகம் எதிர் பதுரெலிய கிரிக்கெட் கழகம்

புத்திக்க சஞ்சீவ அதிரடியாக நான்கு விக்கெட்டுகளை வீழ்த்த கண்டி சுங்க அணிக்கு எதிரான போட்டியில் பதுரெலிய கிரிக்கெட் கழகம் 37 ஓட்டங்களால் வெற்றியீட்டியது. கொழும்பு கிரிக்கெட் கழக மைதானத்தில் நடைபெற்ற இந்தப் போட்டியில் தோற்றதன் மூலம் கண்டி சுங்க அணி தொடர்ந்து 4 போட்டிகளிலும் தோல்வியை சந்தித்துள்ளது.

Photos: Badureliya CC vs Kandy Customs SC – Major T20 Tournament 2018/19

போட்டியின் சுருக்கம்

பதுரெலிய கிரிக்கெட் கழகம் – 159/8 (20) – அலங்கார அசங்க சில்வா 43, பிரமுத் ஹெட்டிவத்த 33, சச்சித் பத்திரண 27, ஷிரான் ரத்னாயக்க 23, என். ரத்னாயக்க 4/25, சி. பெர்னாண்டோ 2/40

கண்டி சுங்க விளையாட்டுக் கழகம் – 122 (19.2) – தாரக்க வாதுகே 24, புத்திக்க சஞ்சீவ 4/22, சச்சித் பத்திரண 2/21, நுவன் துஷார 2/33

முடிவு – பதுரெலிய கிரிக்கெட் கழகம் 37 ஓட்டங்களால் வெற்றி

 >>மேலும் பல கிரிக்கெட் செய்திகளைப் படிக்க<<