யாழ்ப்பாணம் மத்திய கல்லூரியின் மாணவ முதல்வர் சபையின் ஏற்பாட்டில் நடாத்தப்பட்ட யாழ் மாவட்ட பாடசாலை அணிகளிற்கிடையிலான கூடைப்பந்தாட்ட போட்டியின் இறுதிப் போட்டி நேற்றைய தினம் (30) யாழ்ப்பாணம் மத்திய கல்லூரி கூடைப்பந்தாட்ட திடலில் இடம்பெற்றது. 

பெண்கள் பிரிவில் இலகு வெற்றியுடன் கொக்குவில் இந்து கல்லூரி அணி சம்பியன் பட்டத்தினை தமதாக்கியது. விறுவிறுப்பாக இடம்பெற்ற ஆண்கள் பிரிவிற்கான போட்டியில் இந்துக் கல்லூரியின் பலத்த நெருக்கடியையும் தாண்டி ஏழாவது முறையாக விபுலானந்தன் நினைவுக் கிண்ணத்தினை கைப்பற்றியது யாழ் மத்திய கல்லூரி அணி

கீர்த்திகன் ஞாபகார்த்த கூடைப்பந்து சம்பியன்களான இந்து மகளிர், கொக்குவில் இந்து

கொக்குவில் இந்துக் கல்லூரி………..

ஆண்கள் பிரிவு 

ஒன்பது அணிகள் பங்குபற்றியிருந்த இந்த போட்டித்தொடரின் ஆண்கள் பிரிவின் முதலாவது அரையிறுதி போட்டியில் கொக்குவில் இந்துக் கல்லூரி அணியினை 42:39 என்ற மூன்று புள்ளிகள் வித்தியாசத்தில் வெற்றிபெற்று யாழ் மத்திய கல்லூரி அணி இறுதிப் போட்டிக்கு தகுதிபெற்றிருந்தது. மறுபக்கம்யாழ்ப்பாணம் இந்துக் கல்லூரி, இளவாலை புனித ஹென்றியரசர் கல்லூரிக்கெதிராக 46:18 என்ற புள்ளிக்கணக்கில் பெற்றுக் கொண்ட இலகு வெற்றியுடன் இறுதிப் போட்டியில் தடம்பதித்திருந்தனர்.  

எதிர்பார்ப்பிற்கு மத்தியில் ஆரம்பமாகியிருந்த இறுதிப் போட்டியில், ஆரம்பத்திலேயே அபார ஆட்டத்தினை வெளிப்படுத்திய இந்துக் கல்லூரி அணி சஞ்சயன், கீர்த்திகன் இணையினூடாக தொடர்ச்சியாக புள்ளிகளை சேகரித்தது. எனவே, 22:08 என்ற புள்ளிகள் கணக்கில் இந்துக் கல்லூரியின் முன்னிலையுடன் முதலாவது காற்பகுதி நிறைவு பெற்றது

இரண்டாவது காற்பகுதியில் மத்திய கல்லூரியினர் தாக்குல் ஆட்டத்தினை அதிகரித்தபோதும், 17:16 என இந்துக் கல்லூரிக்கு சாதகமாக நிறைவிற்கு வந்தது

முதலாவது அரைப்பகுதியின் நிறைவில் 15 புள்ளிகளால் பின்தங்கியிருந்த நிலையில் போட்டியினை ஆரம்பித்த மத்திய கல்லூரி அணிக்கு விதுசன், சங்கீர்த்தனன் இணை தாக்குதல் ஆட்டத்தினையும், கிருபாகரன் தடுப்பாட்டத்தினையும் வழிநடத்த மத்திய கல்லூரி மூன்றாவது காற்பகுதியினை 20:03 என்ற புள்ளிக்கணக்கில் அபாரமாகக் கைப்பற்றி மொத்த புள்ளிக்கணக்கிலும் முன்னிலை பெற்றது

Photos: Rev.Sam Rajasuriar Challenge Trophy 2019 – Day 02

ThePapare.com | Murugaiah Saravanan | 22/09/2019 Editing and re-using images without permission………….

தொடர்ந்து 44:42 என மத்திய கல்லூரி புள்ளிப்பட்டியலில் முன்னிலை பெற்றிருக்கையில் ஆரம்பமாகிய இறுதி காற்பகுதியில் இரு அணிகளும் ஒன்றுக்கொன்று சளைத்தவர்கள் அல்ல என சிறந்த ஆட்டத்தினை வெளிப்படுத்தினர். ஒரு கட்டத்தில்  52:52 என புள்ளிகள் சமநிலையில் இருந்தபோதும் போட்டி நேர நிறைவில் 57:54 என்ற புள்ளிக்கணக்கில் மத்திய கல்லூரி வெற்றி பெற்றது.

தொடரில் மூன்றாவது இடத்தினை கொக்குவில் இந்துக் கல்லூரி அணி பெற்றுக்கொண்டது.  

விருதுகள் 

  • சிறந்த தாக்குதல்(offensive) வீரர்  – விதுசன்  (யாழ். மத்திய கல்லூரி)
  • சிறந்த தடுப்பாட்ட (defensive) வீரர்  – கிருபாகரன்  (யாழ். மத்திய கல்லூரி)
  • போட்டியின் சிறப்பாட்டக்காரர்விதுசன்  (யாழ். மத்திய கல்லூரி)
  • தொடரின் சிறப்பாட்டக்காரர்கீர்த்தனன்  (யாழ். இந்துக் கல்லூரி)

பெண்கள் பிரிவு 

ஐந்து அணிகள் பங்குபற்றிய மகளிர் பிரிவின் அரையிறுதி போட்டிக்கு கொக்குவில் இந்துக் கல்லூரி, வேம்படி மகளிர் உயர்தர பாடசாலை, யாழ்ப்பாணம் இந்து மகளிர் கல்லூரி மற்றும் வேலணை மத்திய கல்லூரி அணிகள் தகுதிபெற்றனர்.

கொக்குவில் இந்து, யாழ். இந்து மகளிர் கல்லூரி அணிகள் முறையே வேலணை மத்திய கல்லூரி மற்றும் வேம்படி மகளிர் கல்லூரி அணிகளை வெற்றி கொண்டு இறுதிப் போட்டிக்கு தகுதிபெற்றிருந்தன

பல்கலைக்கழக வலைப்பந்து கிண்ணம் யாழ். மங்கையர் வசம்

அண்மையில் நிறைவுற்ற 13ஆவது……………

போட்டியின் ஆரம்பத்திலேயே ஆதிக்கம் செலுத்திய கொக்குவில் இந்து அணி முதலாவது காற்பகுதியில் வெறுமனே 09 புள்ளிகளை விட்டுக்கொடுத்து 24 புள்ளிகளை சேகரித்தனர்இரண்டாவது காற்பகுதியிலும் தமிழரசிதர்சிகா இனண புள்ளிக்கணக்கினை அதிகரிக்க 45:27 என முதலாவது அரைப்பகுதி கொக்குவில் இந்துவிற்கு சாதகமாக நிறைவிற்கு வந்தது

மூன்றாவது காற்பகுதியினையும் 14:12 என தமக்கு சாதகமாக நிறைவிற்கு கொண்டுவந்தனர் கொக்குவில் வீராங்கனைகள். இறுதி காற்பகுதி 08:16 என இந்து மகளிர் கல்லூரிக்கு சாதகமாக நிறைவு பெற்றபோதும் போட்டியினை 14 புள்ளிகள் (67:53)  வித்தியாசத்தில் இலகு  வெற்றிபெற்ற கொக்குவில் இந்துக் கல்லூரி அணியினர் வெற்றிக்கிண்ணத்தினை தமதாக்கினர்.  

விருதுகள் 

  • சிறந்த தாக்குதல் (offensive) வீராங்கனைதமிழரசி (கொக்குவில் இந்துக் கல்லூரி)
  • சிறந்த தடுப்பாட்ட (defensive) வீராங்கனைசானுஜா (கொக்குவில் இந்துக் கல்லூரி)
  • போட்டியின் சிறப்பாட்டக்காரர்பாணு  (கொக்குவில் இந்துக் கல்லூரி)
  • தொடரின் சிறப்பாட்டக்காரர் தமிழரசி  (கொக்குவில் இந்துக் கல்லூரி

>>மேலும் பல விளையாட்டு செய்திகளைப் படிக்க<<