T10 லீக்கில் ஆடுகிறார் இலங்கையின் அசாதாரண சுழல் வீரர் கொத்திகொட

71

இலங்கை 19 வயதுக்கு உட்பட்ட தேசிய அணியின் முன்னாள் வீரர் கெவின் கொத்திகொட, அடுத்த மாதம் ஐக்கிய அரபு இராட்சியத்தில் ஆரம்பமாகவுள்ள அபூதாபி T-10 லீக் கிரிக்கெட் தொடரில் பங்ளா டைகர்ஸ் அணியுடன் ஒப்பந்தமாகியுள்ளார். 

T10 லீக் கிரிக்கெட் தொடரில் மூன்று இலங்கை வீரர்கள்

ஐக்கிய அரபு இராச்சியத்தில் மூன்றாவது…………….

தென்னாபிரிக்க முன்னாள் சுழற்பந்து வீச்சாளர் போல் அடம்ஸ் போன்று வழக்கத்திற்கு மாறான அசாதாரண பந்துவீச்சு பாணியைக் கொண்ட மர்ம சுழற்பந்துவீச்சாளரான 21 வயதுடைய கொத்திகொட இதுவரை சர்வதேச போட்டிகளில் அறிமுகமாகவில்லை. கடந்த பருவத்தில் காலி கிரிக்கெட் கழகத்திற்காக ஒருசில உள்ளூர் போட்டிகளில் அவர் ஆடியுள்ளார்.   

இலங்கை கிரிக்கெட் சபையின் 23 வயதுக்கு உட்பட்டோருக்கான இரண்டு நாள் போட்டியில் தற்போது அவர் BRC அணிக்காக ஆடுவதோடு 27 ஆவது சிங்கர்-MCA ப்ரீமியர் லீக்கில் மாஸ் யுனிசெல்லா அணிக்காக ஆடி வருகிறார்.   

அதிக பரபரப்புக் கொண்ட இந்தத் தொடரில் விளையாடுவதற்கு எனக்கு சந்தர்ப்பம் கிடைத்தது சிறப்பானது. இந்த வாய்ப்பு கிடைப்பதற்கு நான் அதிர்ஷ்டம் செய்துள்ளேன். அதனை எதிர்பார்த்துள்ளேன் என்று ThePapare.com இற்கு பிரத்தியேக பேட்டி அளித்த கொத்திகொட குறிப்பிட்டார்

கொத்திகொட 2017 இல் இலங்கை 19 வயதுக்கு உட்பட்ட அணிக்காக ஆடியதோடு காலி மஹிந்த கல்லூரிக்காக பாடசாலை மட்டப் போட்டிகளில் ஆடினார். தனது அசாதாரண பந்துவீச்சு பாணி காரணமாக உள்நாட்டு மற்றும் சர்வதெச அளவில் அவர் அதிகம் பேசப்பட்டார்.   

இதன்படி அவர் பங்ளா டைகர்ஸ் அணிக்காக ஏற்கனவே ஒப்பந்தம் செய்திருக்கும் இலங்கையர்களான திசர பெரேரா மற்றும் செஹான் ஜயசூரியவுடன் இணையவுள்ளார். கொத்திகொடவுடன் சேர்த்து 3ஆவது T10 லீக்கில் பல அணிகளுக்காகவும் மொத்தம் 11 இலங்கை வீரர்கள் ஆடுகின்றனர்

T10 லீக்கில் பங்கேற்கும் இலங்கை வீரர்கள்

  • பங்ளா டைகர்ஸ்திசர பெரேரா, செஹான் ஜயசூரிய, கெவின் கொத்திகொட
  • மரதா அரேபியன்ஸ்லசித் மாலிங்க, தசுன் ஷானக்க, வனிந்து ஹசரங்க
  • டீம் அபூதாபிநிரோசன் திக்வெல்ல
  • டெக்கான் கிளாடியேட்டர்ஸ்பானுக்க ராஜபக்ஷ
  • டெல்லி புல்ஸ்குசல் பெரேரா, துஷ்மன்த சமீர
  • நோதர்ன் வொர்ரியர்ஸ்நுவன் பிரதீப் 

>>மேலும் பல கிரிக்கெட் செய்திகளைப் படிக்க<<