அபார சதம் விளாசிய உபுல் தரங்க

19

இலங்கை கிரிக்கெட் சபை (SLC) இலங்கையின் உள்ளூர் கழகங்கள் இடையே ஒழுங்கு செய்து நடாத்தும் பிரதான ஒருநாள் கிரிக்கெட் தொடரின் அரையிறுதிப் போட்டிகள் இரண்டும் இன்று (09) நிறைவுக்கு வந்தன.

இன்றைய போட்டிகளின் முடிவுகளை நோக்கும் போது திசர பெரேரா தலைமையிலான இலங்கை இராணுவப்படை அணியினை றாகம கிரிக்கெட் கழகம் தோற்கடித்து இன்றைய நாளில் இறுதிப் போட்டிக்கு தெரிவாகிய முதல் அணியாக மாறியது.

அரையிறுதிக்கு தெரிவான திசர பெரேராவின் இராணுவப்படை அணி

மறுமுனையில் NCC அணியும் பதுரெலிய கி.க. கழகத்தினை தோற்கடித்து இந்த தொடரின் இறுதிப் போட்டிக்கு தெரிவாகியிருக்கின்றது.

இன்றைய நாளுக்கான துடுப்பாட்டத்தினை நோக்கும் போது NCC அணியினை வெற்றிப்பாதைக்கு அழைத்துச் சென்ற இலங்கை அணியின் முன்னாள் ஆரம்பத் துடுப்பாட்டவீரர் உபுல் தரங்க 126 ஓட்டங்களைப் பெற்று அபார சதம் ஒன்றினை விளாசியிருந்தார். இதேநேரம், திசர பெரேரா 45 ஓட்டங்களை எடுத்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

அதேவேளை இன்றைய நாளுக்கான பந்துவீச்சினை நோக்கும் போது றாகம கிரிக்கெட் கழகத்தினுடைய வலதுகை வேகப்பந்துவீச்சாளரான இஷான் ஜயரட்ன 5 விக்கெட்டுக்களை கைப்பற்றி இன்றைய நாளில் பெறப்பட்ட சிறந்த பந்துவீச்சுப் பிரதியினை பதிவு செய்ய, தேசிய அணியின் பந்துவீச்சாளரான லஹிரு குமாரவும் 4 விக்கெட்டுக்களைச் சாய்த்து அசத்தியிருந்தது குறிப்பிடத்தக்கது.

இலங்கைக்கு எதிரான முதற்கட்ட குழாத்தை அறிவித்த பங்களாதேஷ்

போட்டிகளின் சுருக்கம்

இராணுவப்படை வி.க. எதிர் றாகம கி.க.

NCC மைதானம், கொழும்பு

இராணுவப்படை வி.க. – 178 (46.3) ஹிமாஷ லியனகே 45, திசர பெரேரா 45, இஷான் ஜயரட்ன 5/31

றாகம கி.க. – 179/2 (39.2) சமின்த பெர்னாந்து 99, நிஷான் மதுஷ்க 34

முடிவு – இராணுவப்படை வி.க. 8 விக்கெட்டுக்களால் வெற்றி

NCC எதிர் பதுரெலிய கி.க.

CCC மைதானம், கொழும்பு

NCC – 292/7 (50) உபுல் தரங்க 136, காமில் மிஷார 46, அலங்கார அசன்க 3/60

பதுரெலிய கி.க. – 274 (49.3) திலகரட்ன சம்பத் 98, லஹிரு குமார 4/42, சத்துரங்க டி சில்வா 2/44

முடிவு – NCC அணி 18 ஓட்டங்களால் வெற்றி 

மேலும் கிரிக்கெட் செய்திகளுக்கு…