தன்னை இனரீதியாக சாடியவர்களை சாடும் ஜொப்ரா ஆர்ச்சர்

52

இங்கிலாந்து கிரிக்கெட் அணியின் வேகப் பந்துவீச்சாளரான ஜொப்ரா ஆர்ச்சர், சமூக வலைதளங்களில் தன்னை இனரீதியான கருத்துக்கள் மூலம் சிறுமைப்படுத்த முயன்றவர்களுக்கு கண்டனங்களை வெளியிட்டிருக்கின்றார்.

கொரோனா வைரஸ் எதிரொலி: டி20 உலகக் கிண்ணம் நடைபெறுமா?

கொரோனா வைரஸ் பாதிப்பினால் அவுஸ்திரேலியாவில் ……

தனது இன்ஸ்டக்ராம் (Instagram) சமூக வலைதள கணக்கு மூலம் தனக்கு வந்த இனரீதியான சிறுமைப்படுத்தல் செய்திகளை பகிரங்கமாக வெளியிட்ட ஆர்ச்சர், தன்னை இனரீதியான கருத்துக்கள் மூலம் சிறுமைப்படுத்த முயல்பவர்களுக்கு தண்டனை கொடுக்க நடவடிக்கை எடுக்குமாறும் கூறியிருக்கின்றார். 

இந்த விடயத்திற்கு (இனரீதியான சிறுமைப்படுத்தலிற்கு) எதிர்வினை ஒன்றை வழங்குவதற்கு நீண்ட யோசனை ஒன்றினைக் கொண்டிருந்தேன். அதன்படி பார்க்கும் போது, இப்படியான இடர்பாடுகளை யாரும் தமது அன்றாட வாழ்க்கையில் எதிர்கொள்ளமாட்டார்கள் என நான் நினைக்கின்றேன்.” எனக் கருத்து வெளியிட்ட ஆர்ச்சர் ”இப்படியான விடயங்களை ஒரு போதும் அனுமதிக்க கூடாது.” எனவும் தெரிவித்தார். 

அதோடு இன்னும் கருத்து வெளியிட்ட ஆர்ச்சர், இனரீதியாக சிறுமைப்படுத்தும் விடயங்களை மக்கள் மிகவும் சாதாரணமாக பேசுவது தனக்கு குழப்பம் தருவதாக இருக்கின்றது எனவும் குறிப்பிட்டார்.

கடந்த நவம்பர் நியூசிலாந்துக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்ட இங்கிலாந்து கிரிக்கெட் அணி மவுண்ட் மௌங்னாயில் இடம்பெற்ற டெஸ்ட் போட்டி ஒன்றில் நியூசிலாந்துடன் தோல்வியினைத் தழுவியிருந்தது.  

குறித்த டெஸ்ட் போட்டியில் பங்கேற்ற ஜொப்ரா ஆர்ச்சர், நியூசிலாந்தைச் சேர்ந்த பார்வையாளர் ஒருவர் மூலம் நிறரீதியான சிறுமைப்படுத்தல்களை எதிர்கொண்டிருந்தார். தொடர்ந்து, இந்த நிகழ்வு கிரிக்கெட் உலகில் பரபரப்பாக பேசப்பட்ட ஒரு விடயமாகவும் மாறியது.

இந்த நிகழ்வின் பின்னர், ஆர்ச்சரிற்கு எதிராக விஷம கருத்துக்களை வெளியிட்ட  நபர் இரண்டு ஆண்டுகளுக்கு கிரிக்கெட் போட்டிகளைப் பார்க்க தடை பெற்றதுடன், நியூஸிலாந்து பொலிஸாரின் வாய்மூல எச்சரிக்கையினையும் எதிர்கொண்டு சிக்கலுக்குள்ளாகியிருந்தது குறிப்பிடத்தக்கது. 

ஜொப்ரா ஆர்ச்சரிடம் மன்னிப்பு கோரவுள்ள நியூசிலாந்து கிரிக்கெட்

நியூசிலாந்து மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கு இடையிலான முதல் ………

தற்போது சமூக வலைதளங்களில் ஆர்ச்சரை சிறுமைப்படுத்துபவர்களும் இதே மாதிரியான தண்டனைகளை முகம்கொடுக்க வேண்டும் என கிரிக்கெட் இரசிர்கள் எதிர்பார்க்கின்றனர்.    

இதேநேரம் கடந்த வாரம், ஜொப்ரா ஆர்ச்சர் தனது ட்விட்டர் கணக்கு மூலமும் இனரீதியாக சிறுமைப்படுத்தும் நபர்களை கண்டிக்கும் வகையில் கருத்து வெளியிட்டிருந்ததும் குறிப்பிடத்தக்கது.   

>>மேலும் கிரிக்கெட் செய்திகளைப் படிக்க <<