Home Tamil வோர்னர், மெக்ஸ்வெல் அசத்த இலங்கையை இலகுவாக வீழ்த்திய ஆஸி.

வோர்னர், மெக்ஸ்வெல் அசத்த இலங்கையை இலகுவாக வீழ்த்திய ஆஸி.

128

சுற்றுலா இலங்கை மற்றும் அவுஸ்திரேலிய அணிகள் இடையிலான T20i தொடரின் முதல் போட்டியில், அவுஸ்திரேலிய கிரிக்கெட் அணி 134 ஓட்டங்களால் அபாரமாக வெற்றிபெற்றுள்ளது. இந்த வெற்றியுடன் 3 போட்டிகள் கொண்ட தொடரிலும் அவுஸ்திரேலிய அணி 1-0 என முன்னிலை பெற்றிருக்கின்றது. 

உலகின் முதல்நிலை T20 அணியான பாகிஸ்தானை அவர்களது சொந்த மண்ணில் வைத்து T20 தொடரில் 3-0 என வைட்வொஷ் செய்த இலங்கை கிரிக்கெட் அணி, தற்போது அவுஸ்திரேலியாவுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டு அந்நாட்டு அணியுடன் மூன்று போட்டிகள் கொண்ட T20i தொடரில் ஆடுகின்றது. 

அவுஸ்திரேலியாவில் இலங்கை அணியின் ஆதிக்கம் எவ்வாறு இருக்கும்?

இலங்கை மற்றும் அவுஸ்திரேலிய அணிகளுக்கு………….

இந்த சுற்றுப்பயணத்தின் முதல்கட்டமாக T20i தொடரின் முதல் போட்டி அடிலைட் நகரில் இன்று (27) ஆரம்பமாகியது. போட்டியின் நாணய சுழற்சியில் வென்ற இலங்கை T20 அணியின் தலைவரான லசித் மாலிங்க முதலில் துடுப்பாடும் சந்தர்ப்பத்தினை அவுஸ்திரேலிய வீரர்களுக்கு வழங்கினார். 

இப்போட்டிக்கான இலங்கை அணி, அணித்தலைவர் லசித் மாலிங்கவுடன் சேர்த்து பாகிஸ்தான் தொடரில் விளையாடாத குசல் மெண்டிஸ் மற்றும் குசல் ஜனித் பெரேரா ஆகியோரை இணைத்திருந்தது. எனினும், பாகிஸ்தான் T20 தொடரில் ஆடாத இலங்கை T20 அணியின் உபதலைவர் நிரோஷன் டிக்வெல்லவிற்கு வாய்ப்பு வழங்கப்படவில்லை. 

இலங்கை அணி 

குசல் மெண்டிஸ், தனுஷ்க குணத்திலக்க, பானுக்க ராஜபக்ஷ, குசல் ஜனித் பெரேரா, ஒசத பெர்னாந்து, தசுன் ஷானக்க, வனிந்து ஹஸரங்க, லக்ஷன் சந்தகன், நுவன் பிரதீப், கசுன் ராஜித, லசித் மாலிங்க (அணித்தலைவர்)

மறுமுனையில் ஆரோன் பின்ச் தலைமையிலான அவுஸ்திரேலிய கிரிக்கெட் அணி, மிக நீண்ட இடைவெளி ஒன்றின் பின்னர் நட்சத்திர துடுப்பாட்ட வீரர்களான டேவிட் வோனர் மற்றும் ஸ்டீவ் ஸ்மித் ஆகியோரை அணிக்கு மீண்டும் அழைத்திருந்தது. 

அவுஸ்திரேலிய கிரிக்கெட் அணி 

ஆரோன் பின்ச் (அணித்தலைவர்), டேவிட் வோனர், ஸ்டீவ் ஸ்மித், கிளென் மெக்ஸ்வெல், அஷ்டன் ஏகார், அலெக்ஸ் கேரி, பேட் கம்மின்ஸ், மிச்செல் ஸ்டார்க், கேன் ரிச்சர்ட்சன், அடம் ஷம்பா

தொடர்ந்து, நாணய சுழற்சிக்கு அமைவாக துடுப்பாட்டத்தை ஆரம்பித்த அவுஸ்திரேலிய அணிக்கு அதன் ஆரம்ப துடுப்பாட்ட வீரர்களான அணித்தலைவர் ஆரோன் பின்ச் மற்றும் டேவிட் வோனர் ஆகியோர் அட்டகாசமான தொடக்கத்தை வழங்கினர். இதில், ஆரோன் பின்ச் T20 சர்வதேச போட்டிகளில் பெற்றுக்கொண்ட 10ஆவது அரைச் சதத்தோடு வெறும் 36 பந்துகளில் 3 சிக்ஸர்கள் மற்றும் 8 பௌண்டரிகள் அடங்கலாக 64 ஓட்டங்களை பெற்றார்.  

Photos: Sri Lanka Vs Australia – 1st T20I

ThePapare.com | 27/10/2019 Editing and re-using images without permission of ThePapare.com will be considered…………

பின்ச்சின் விக்கெட்டினை அடுத்து புதிய துடுப்பாட்ட வீரராக வந்த கிளென் மெக்ஸ்வெல்லுடன் இணைந்து டேவிட் வோனர், அவுஸ்திரேலிய அணியின் ஓட்டங்களை மிகவும் வேகமாக உயர்த்தினார். 

இரண்டு வீரர்களும், அவுஸ்திரேலிய அணியின் இரண்டாம் விக்கெட்டுக்காக 107 ஓட்டங்களை இணைப்பாட்டமாக பகிர்ந்தனர். இந்த இணைப்பாட்டத்திற்குள் கிளென் மெக்ஸ்வெல் தான் T20 சர்வதேச போட்டிகளில் பெற்றுக்கொண்ட 7ஆவது அரைச் சதத்தினையும் பூர்த்தி செய்தார். 

இதனை அடுத்து, டேவிட் வோனர் T20 சர்வதேச போட்டிகளில் பெற்ற கன்னி சதத்துடன் அவுஸ்திரேலிய அணி 2 விக்கெட்டுக்களை மாத்திரம் இழந்து 20 ஓவர்களுக்கு 233 ஓட்டங்களை குவித்துக் கொண்டது. 

அவுஸ்திரேலிய அணியின் துடுப்பாட்டம் சார்பில் டேவிட் வோனர் வெறும் 56 பந்துகளில் 4 சிக்ஸர்கள் மற்றும் 10 பௌண்டரிகள் அடங்கலாக 100 ஓட்டங்கள் பெற்று ஆட்டமிழக்காமல் இருந்தார். அதேநேரம், கிளென் மெக்ஸ்வெல் 28 பந்துகளில் 62 ஓட்டங்கள் பெற்றிருந்தார். 

இலங்கை அணியின் பந்துவீச்சு சார்பாக தசுன் ஷானக்க மற்றும் லக்ஷான் சந்தகன் ஆகியோர் தலா ஒரு விக்கெட் வீதம் சாய்த்திருந்தனர். 

பின்னர் போட்டியின் வெற்றி இலக்காக நிர்ணயம் செய்யப்பட்ட 234 ஓட்டங்களை நோக்கி பதிலுக்கு இலங்கை அணி, தமது துடுப்பாட்டத்தை ஆரம்பம் செய்தது. 

இலங்கை அணியின் ஆரம்ப துடுப்பாட்ட வீரர்களில் ஒருவராக வந்த குசல் மெண்டிஸ் ஓட்டம் எதனையும் பெறாமல் ஆட்டமிழந்தார். இதனால் இலங்கை அணி மோசமான ஆரம்பத்தை பெற்றுக்கொண்டது. இதன் பின்னர் அடுத்தடுத்து வந்த வீரர்களும் இலங்கை அணிக்காக துடுப்பாட்டத்தில் ஜொலிக்க தவறினர். 

Video – ஆஸி. தொடருக்கான இலங்கை T20I குழாமின் தெரிவு சரியானதா? Cricket Kalam 34

அவுஸ்திரேலியாவுக்கு சுற்றுப் பயணம்……………

தொடர்ந்து இலங்கை அணி 20 ஓவர்களுக்கு 9 விக்கெட்டுக்களை இழந்து வெறும் 99 ஓட்டங்களை மாத்திரம் பெற்று போட்டியில் படுதோல்வி அடைந்தது. மேலும், இந்த 99 ஓட்டங்கள் இலங்கை அணி T20 போட்டிகளில் பெற்ற ஐந்தாவது குறைந்த ஓட்டங்களாகவும் அமைந்தது. 

இலங்கை அணியின் துடுப்பாட்டம் சார்பில் தசுன் ஷானக்க 17 ஓட்டங்களுடன் தனது தரப்பில் வீரர் ஒருவர் பெற்ற அதிகூடிய ஓட்டங்களை பதிவு செய்ய, ஏனைய அனைவரும் மோசமான ஆட்டத்தினை வெளிப்படுத்தியிருந்தனர். 

அவுஸ்திரேலிய கிரிக்கெட் அணியின் பந்துவீச்சு சார்பில் அடம் ஷம்பா 3 விக்கெட்டுக்களை கைப்பற்றியும் பேட் கம்மின்ஸ் மற்றும் மிச்செல் ஸ்டார்க் ஆகியோர் தலா 2 விக்கெட்டுக்கள் வீதம் கைப்பற்றியும் தமது தரப்பு வெற்றியினை உறுதி செய்தனர். 

போட்டியின் ஆட்டநாயகனாக அவுஸ்திரேலிய கிரிக்கெட் அணியின் டேவிட் வோனர் தெரிவாகினார். 

இப்போட்டியின் தோல்வியோடு அவுஸ்திரேலிய மண்ணில் மோசமான ஆரம்பத்தை பெற்றிருக்கும் இலங்கை கிரிக்கெட் அணி, மூன்று போட்டிகள் கொண்ட T20i தொடரை தக்கவைக்க கட்டாய வெற்றி ஒன்றினை எதிர்பார்த்த வண்ணம் தொடரின் இரண்டாவது போட்டியில் அவுஸ்திரேலிய அணியினை அடுத்த புதன்கிழமை (30) காப்பா நகரில் வைத்து எதிர்கொள்கின்றது.  

ஸ்கோர் விபரம்

Result


Sri Lanka
99/9 (20)

Australia
233/2 (20)

Batsmen R B 4s 6s SR
Aaron Finch c Kusal Mendis b Lakshan Sandakan 64 36 8 3 177.78
David Warner not out 100 56 10 4 178.57
Glenn Maxwell c Kusal Perera b Dasun Shanaka 62 28 7 3 221.43
Ashton Turner not out 1 1 0 0 100.00


Extras 6 (b 0 , lb 0 , nb 1, w 5, pen 0)
Total 233/2 (20 Overs, RR: 11.65)
Fall of Wickets 1-122 (10.5) Aaron Finch, 2-229 (19.3) Glenn Maxwell,

Bowling O M R W Econ
Lasith Malinga 4 0 37 0 9.25
Kasun Rajitha 4 0 75 0 18.75
Nuwan Pradeep 4 0 28 0 7.00
Lakshan Sandakan 4 0 41 1 10.25
Wanindu Hasaranga 3 0 42 0 14.00
Dasun Shanaka 1 0 10 1 10.00


Batsmen R B 4s 6s SR
Danushka Gunathilaka c David Warner b Pat Cummins 11 13 2 0 84.62
Kusal Mendis c Ashton Turner b Mitchell Starc 0 3 0 0 0.00
Bhanuka Rajapakse b Pat Cummins 2 6 0 0 33.33
Kusal Perera b Mitchell Starc 16 16 1 0 100.00
Oshada Fernando b Ashton Agar 13 21 1 0 61.90
Dasun Shanaka c Kane Richardson b Adam Zampa 17 18 1 1 94.44
Wanindu Hasaranga run out (Glenn Maxwell) 5 10 0 0 50.00
Lakshan Sandakan c Ashton Agar b Adam Zampa 6 7 1 0 85.71
Lasith Malinga not out 13 19 1 0 68.42
Kasun Rajitha st  Alex Carey b Adam Zampa 0 2 0 0 0.00
Nuwan Pradeep not out 8 6 1 0 133.33


Extras 8 (b 0 , lb 6 , nb 1, w 1, pen 0)
Total 99/9 (20 Overs, RR: 4.95)
Fall of Wickets 1-0 (0.5) Kusal Mendis, 2-13 (3.3) Danushka Gunathilaka, 3-13 (3.4) Bhanuka Rajapakse, 4-46 (9.2) Oshada Fernando, 5-50 (10.3) Kusal Perera, 6-71 (13.6) Wanindu Hasaranga, 7-71 (14.2) Dasun Shanaka, 8-82 (16.3) Lakshan Sandakan, 9-83 (16.6) Kasun Rajitha,

Bowling O M R W Econ
Mitchell Starc 4 0 18 2 4.50
Kane Richardson 4 0 21 0 5.25
Pat Cummins 4 0 27 2 6.75
Adam Zampa 4 0 14 3 3.50
Ashton Agar 4 0 13 1 3.25



முடிவு – அவுஸ்திரேலிய அணி 134 ஓட்டங்களால் வெற்றி 

>>மேலும் கிரிக்கெட் செய்திகளை படிக்க<<