மஹேல – சங்காவினால் PCR இயந்திரம் அன்பளிப்பு

158
Mahela Jayawardena's Instagram Account

நாட்டில் தற்போது வேகமாக பரவி வருகின்ற கொரோனா வைரஸினால் பாதிக்கப்படுகின்ற சிறு குழந்தைகள் மற்றும் சிறுவர்களுக்கு சிகிச்சை அளித்து வருகின்ற கொழும்பு சீமாட்டி ரிஜ்வே சிறுவர் வைத்தியசாலைக்கு PCR இயந்திரமொன்றை இலங்கை கிரிக்கெட் அணியின் முன்னாள் தலைவர்களும், நட்சத்தி வீரர்களுமான மஹேல ஜயவர்தன மற்றும் குமார் சங்கக்கார ஆகிய இருவரும் அன்பளிப்புச் செய்துள்ளனர்.

இந்த PCR இயந்திரத்தின் மூலம் கொரோனா வைரஸினால் பாதிக்கப்படுகின்ற குழந்தைகள் மற்றும் சிறுவர்களுக்கு நேர்த்தியான முறையில் சிகிச்சை அளிப்பதற்கான வசதிகள் காணப்படுகின்றது

Video – ABU DHABI T10 லீக்கில் குமார் சங்ககக்காரவுக்கு ஆலோசகர் பதவி..!

எனவே, இலங்கையில் பல்வேறு சமூகசேவைப் பணிகளில் தொடர்ந்து ஈடுபட்டு வருகின்ற மஹேல ஜயவர்தன மற்றும் குமார் சங்கக்கார ஆகிய இருவரும் நாட்டின் முன்னணி வியாபார நிறுவனங்களில் ஒன்றான ஹேமாஸ் நிறுவனத்துடன் இணைந்து இந்த PCR  இயந்திரத்தை சீமாட்டி ரிஜ்வே சிறுவர் வைத்தியசாலையின் நிர்வாகத்திடம் அண்மையில் கையளித்துள்ளனர்

இதன்படி, குறித்த இயந்திரத்தை கையளிக்கும் போது எடுக்கப்பட்ட புகைப்படமொன்றை மஹேல ஜயவர்தன தனது இன்ஸ்டகிராம் வலைத்தளத்தில் வெளியிட்டுள்ளார்

 

View this post on Instagram

 

A post shared by Mahela Jayawardena (@mahela27)

அத்துடன், குறித்த இயந்திரத்தை கையளிக்கின்ற நிகழ்வின் போது ஹேமாஸ் நிறுவனத்தின் பிரதம நிறைவேற்று அதிகாரி கஸ்தூரி செல்லராஜா வில்சனும் பங்கேற்றிருந்தமை குறிப்பிடத்தக்கது

>>மேலும் பல கிரிக்கெட் செய்திகளைப் படிக்க<<