ரொனால்டோக்களில் சிறந்தவர் யார்? : முன்னாள் வீரரின் கணிப்பு

137

பிரேசில் கால்பந்து அணியின் முன்னாள் நட்சத்திர வீரரான ரொனால்டோ நஸாரியோ (Ronaldo Nazario) மற்றும் போர்த்துக்கல் அணியின் நட்சத்திர வீரரான கிறிஸ்டியானோ ரொனால்டோ (Cristiano Ronaldo) ஆகிய இருவரில் சிறந்த வீரர் யார் என்பது குறித்து இத்தாலியின் முன்னாள் வீரரான கிறிஸ்டியன் வீரி (Christian Vieri ) கருத்து வெளியிட்டுள்ளார். 

இத்தாலியின் இன்டர் மிலான் கழகத்தின் முன்னாள் மத்தியகள வீரரான கிறிஸ்டியன் வீரி இது குறித்து பேசுகையில், கிறிஸ்டியானோ ரொனால்டோவை விட பிரேசிலின் முன்னாள் வீரரான ரொனால்டோ நஸாரியோ அதி பயங்கரமான முன்கள வீரர்” என தெரிவித்துள்ளார்.  

பார்சிலோனாவுக்கு விளையாட மறுப்பு தெரிவித்த ரொனால்டோ

மன்செஸ்டர் யுனைடட் கழகத்திடம் இருந்து கிறிஸ்டியானோ ரொனால்டோவை 2009ஆம் ஆண்டு …..

கோல் அடிப்பதில் இவ்விரண்டு வீரர்களும் திறமையானவர்களாக காணப்பட்டதுடன், இரண்டு பேரும் விளையாடிய காலத்தில் கால்பந்து உலகில் முன்னணி வீரர்களாக ஜொலித்தமை, ஜொலித்துக் கொண்டிருக்கின்றமை மறுக்க முடியாத உண்மையாகும்

ஓ பெனொமெனோ என்ற புனைப் பெயரால் அழைக்கப்பட்ட பிரேசிலின் ரொனால்டோ, 1990களின் நடுப்பகுதியில் இருந்து 21ஆம் நூற்றாண்டின் ஆரம்பம் வரை பிரேசிலின் தேசிய கால்பந்து அணிக்காகவும், PSV Eindhoven, பார்சிலோனா, இன்டர் மிலான் மற்றும் ரியல் மெட்ரிட்  ஆகிய கழகங்களுக்காகவும் விளையாடி 414 கோல்களைப் பதிவுசெய்து கால்பந்து உலகில் சிறந்த வீரர்களில் ஒருவராக வலம்வந்தார்.

அத்துடன், 1994 மற்றும் 2002 உலகக் கிண்ணத் தொடரில் சிறந்த வீரருக்கான விருதையும், பலொன் டி ஓர் விருதை இரண்டு தடவைகளும் வென்ற அவர், கழகமட்டப் போட்டிகளில் பல்வேறு சம்பியன் பட்டங்களையும் தனது அணிக்கு வென்று கொடுக்க முக்கிய காரணமாகவும் இருந்தார்.  

மறுபுறத்தில் கிறிஸ்டியானோ ரொனால்டோ மன்செஸ்டர் யுனைடட் மற்றும் ரியல் மெட்ரிட் கழகங்களுக்காக விளையாடியதுடன், தற்போது ஜுவண்டஸ் கழகத்துக்காக விளையாடி வருகின்றார்

நெய்மாருடன் இணைவது ஆபத்தினை ஏற்படுத்தலாம்

பிரான்ஸின் முன்னாள் கால்பந்து வீரரான இமானுவேல் பெடிட், தனது நாட்டின் இளம் கால்பந்து வீரரான கிலியான் எம்பாப்வேயிற்கு முன்னணி …

இதுவரை 725 கோல்களை அடித்துள்ள அவர், போர்த்துக்கல் அணிக்கு 2016 யூரோ கிண்ணத்தை வென்று கொடுப்பதில் முக்கிய பங்கு வகித்தார்.   

அத்துடன், UEFA சம்பியன்ஸ் லீக் தொடரில் சம்பியன் கிண்ணத்தை ஐந்து தடவைகள் வென்றதுடன், பலொன் டி ஓர் விருதை ஐந்து தடவைகளும் வென்றமை மற்றுமொரு சிறப்பம்சமாகும்

எதுஎவ்வாறாயினும், இன்டர் மிலான் கழகத்துக்காக பிரேசிலைச் சேர்ந்த ரொனால்டோவுடன் முன்கள வீரர்களில் ஒருவராக பல வருடங்கள் விளையாடிய கிறிஸ்டியன் வீரி, கிறிஸ்டியனோ ரொனால்டோவை விட இவர் அதி பயங்கரமான வீரர் என தெரிவித்துள்ளார்.

இதுதொடர்பில் அவர் கருத்து தெரிவிக்கையில், ரொன்னி என்னுடைய சிறந்த நல்ல நண்பர்.அவருடன் முன்கள வீரராக விளையாடக் கிடைத்தமை எனது வாழ்க்கையில் மிகப் பெரிய அதிஷ்டமாகும். அவர் ஒரு பரிபூரணமான வீரர் ஆவார்.

போர்த்துக்கல் வீரர்களை நன்கொடை செய்ய தூண்டிய ரொனால்டோ

போர்த்துக்கல் அணி ஐரோப்பிய கால்பந்து சம்பியன்ஷிப்….

வேகம், விவேகம், பலம் உள்ளிட்ட அனைத்து விடயங்களும் அவரிடம் உண்டு. உண்மையில் அவர் விளையாடுகின்ற போது ஒரு நடனக் கலைஞராக தோற்றமளிப்பார்.  

அவர் விளையாடுகின்ற விதம் தான் எங்களுக்கு பந்துடன் நடனமாடுவது போல தோன்றும். அதனால் கிறிஸ்டியானோ ரொனால்டோவைவிட அவர் தான் சிறந்த வீரர்” என தெரிவித்தார்.  

இந்த நிலையில், கிறிஸ்டியானோ ரொனால்டோ குறித்து பேசிய அவர், ”கிறிஸ்டியானோ ரொனால்டோ இராணுவ இயந்திரத்தைப் போன்றவர்

அவர் தற்போது வரை வெளிப்படுத்திய திறமைகளுக்கும், இனிவரும் காலங்களில் வெளியிடப் போகும் திறமைக்கும் உரிய கௌரவம் அளிக்கப்பட வேண்டும்

மீண்டும் அம்பலமாகும் பிஃபா உலகக் கிண்ண ஊழல் விவகாரம்

2018 மற்றும் 2022 பிஃபா உலகக் கிண்ண கால்பந்து போட்டிகளை முறையே ரஷ்யா மற்றும்..

இத்தாலி இரசிகர்கள் சொல்வதைப் போல அவருக்கு 40 வயது வரை விளையாட முடியும். அவர் உடல்ரீதியில் மிகவும் பலம்மிக்கவர்” என்றார்

இதனிடையே ஐரோப்பாவின் முன்னணி கழகங்களுக்காக (Juventus, Atletico Madrid, Lazio, Inter Milan,  A. C. Milan ) விளையாடிய அனுபவத்தைக் கொண்டுள்ள கிறிஸ்டியன் வீரி, தனது வாழ்க்கையின் சிறந்த பயிற்சியாளர் யார் என்பது குறித்து கருத்து வெளியிட்டார்

ஜுவெண்டஸ் கழகத்தின் Marcelo Lippi சிறந்த பயிற்சியாளர் ஆவார். அவர் உண்மையில் எனது இரண்டாவது தந்தையைப் போல.

அத்துடன், Turin இல் இளம் அணிகளுக்காக எனக்கு பயிற்சியளித்த Rosario Rampanti மற்றும் Emiliano Mondonico சிறந்த பயிற்சியாளர்கள் ஆவர். அதேநேரம், Emiliano Mondonico ஞாபகப்படுத்த வேண்டும். அவர் இளம் வீரர்கள் மீது நம்பிக்கை வைத்த திறமையான ஒருவர் என குறிப்பிட்டார்.

 >> மேலும் பல கால்பந்து செய்திகளைப் படிக்க<<