பங்களாதேஷ் ஒருநாள் அணிக்கு புதிய தலைவர்!

India tour of Bangladesh 2022

364

இந்திய அணிக்கு எதிராக நடைபெறவுள்ள மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரின் பங்களாதேஷ் அணியின் தலைவராக லிடன் டாஸ் நியமிக்கப்பட்டுள்ளார்.

சுற்றுலா இந்தியா மற்றும் பங்களாதேஷ் அணிகளுக்கு இடையிலான ஐசிசி ஒருநாள் சுபர் லீக்கிற்கான மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடர் ஞாயற்றுக்கிழமை (4) ஆரம்பமாகவுள்ளது.

>> LPL போட்டி மத்தியஸ்தர்கள் குழாத்தில் பிரதீப் ஜயப்பிரகாஷ்!

பங்களாதேஷ் ஒருநாள் அணியின் தலைவராக தமிம் இக்பால் செயற்பட்டுவந்த நிலையில், அவர் உபாதை காரணமாக இந்த தொடரில் விளையாடமாட்டார் என அறிவிக்கப்பட்டுள்ளது.

இதன்காரணமாக அணியின் புதிய தலைவராக லிடன் டாஸ் நியமிக்கப்பட்டுள்ளார். லிடன் டாஸ் முதன்முறையாக பங்களாதேஷ் அணியை ஒருநாள் போட்டிகளில் வழிநடத்தவுள்ளார்.

இதற்கு முன்னர் கடந்த ஆண்டு நடைபெற்ற நியூசிலாந்து அணிக்கு எதிரான T20I போட்டியில் மொஹ்மதுல்லாஹ் உபாதை காரணமாக வெளியேறியதால் லிடன் டாஸ் தலைவராக செயற்பட்டிருந்தார்.

>> “தசுன் ஷானகதான் எனக்கு வாய்ப்பை பெற்றுத்தந்தார்” – சரித் அசலங்க!

லிடன் டாஸ் பங்களாதேஷ் அணிக்காக ஒருநாள் போட்டிகளில் இந்த ஆண்டு அதிகூடிய ஓட்டங்களை பெற்றுள்ளார். 10 இன்னிங்ஸ்களில் விளையாடிய இவர் 62.50 என்ற சராசரியில் 500 ஓட்டங்களை பெற்றுள்ளார்.

அதேநேரம் பங்களாதேஷ் டெஸ்ட் அணியின் தலைவராக சகிப் அல் ஹஸன் செயற்பட்டுவரும் நிலையில், உப தலைவராக லிடன் டாஸ் தற்போது செயற்பட்டுவருகின்றமை குறிப்பிடத்தக்கது.

>> கிரிக்கெட் செய்திகளைப் படிக்க <<