சுகாதார ஊழியர்களுக்கு நன்றி கூறிய மெஸ்ஸி

74

கடந்த சனிக்கிழமை நிறைவடைந்த உலக சுகாதார பணியாளர்களின் வாரத்தை ஒட்டி பார்சிலோனா நட்சத்திர வீரர் லியோனல் மெஸ்ஸி அவர்களுக்கு தமது ஆதரவை வெளியிட்டுள்ளார். 

 உலகளாவிய கொரோனா வைரஸ் தொற்று அச்சுறுத்தலுக்கு மத்தியில் உலகெங்கும் உள்ள சுகாதார பணியாளர்களுக்கும் பார்சிலோனா அணித்தலைவர் மெஸ்ஸி பாராட்டுகளையும் தெரிவித்துள்ளார்.  

லியோனல் மெஸ்ஸியை பிடிக்காத 5 வீரர்கள்

லியோனல் மெஸ்ஸி கால்பந்து உலகில் தோன்றிய சிறந்த வீரர்களில் ஒருவர் என்பதில் எவருக்கும் ………

கொவிட்-19 தொற்று உலகெங்கும் தற்போது தீவிரம் அடைந்திருக்கும் நிலையில் இந்த வைரஸினால் 125,000க்கும் அதிகமானவர்கள் உயிரிழந்திருப்பதோடு சுமார் 2 மில்லியன் பேர் வரை நோய்த் தொற்றுக்கு உள்ளாகியுள்ளனர்

இந்நிலையில் கடந்த ஏப்ரல் 5 தொடக்கம் 11 ஆம் திகதி வரை அனுஷ்டிக்கப்பட்ட உலக சுகாதார பணியாளர்களின் வாரம் நிறைவடைந்ததை அடுத்து ஆர்ஜன்டீன முன்கள வீரர் மெஸ்ஸி அதற்காக தமது ஆதரவை வெளியிட்டுள்ளார்.

நேற்று உலக சுகாதார பணியாளர்களின் வாரம் நிறைவடைந்தது. unicef உடன் இணைந்து அவர்களின் பணிக்காக எனது பெரும் நன்றிகளைத் தெரிவித்துக்கொள்ள விரும்புகிறேன் என்று மெஸ்ஸி தனது இன்ஸ்டாகிராமில் கடந்த ஞாயிற்றுக்கிழமை குறிப்பிட்டிருந்தார்.

கொவிட்-19 இல் இருந்து எம்மை பாதுகாப்பதற்காக தமது குடும்பங்களை விட்டு விலகி இரவு, பகல் போராடும் அநாமதேய நாயகர்கள் அவர்கள்.     

அனைத்தையும் விஞ்சி கர்ப்பிணிப் பெண்களை பராமரிப்பது மற்றும் சிறுவர்கள் மற்றும் பெரியவர்களை பாதுகாப்பதற்காக அவர்கள் தொடர்ந்து அர்ப்பணிக்கின்றனர்என்று மெஸ்ஸி குறிப்பிட்டுள்ளார்

கொரோனா வைரஸ் தொற்றுக் காரணமாக ஸ்பெயினின் லா லிகா தொடர் காலவரையின்றி ஒத்திவைக்கப்பட்டுள்ளது. இதில் பட்டத்தை வெல்வதற்கு மெஸ்ஸியின் பார்சிலோனா மற்றும் ரியல் மெட்ரிட் இடையே கடும் போட்டி இடம்பெற்று வருகிறது. தொடர் இடைநிறுத்தப்படும்போது ரியல் மெட்ரிட்டை விடவும் 2 புள்ளி முன்னிலையுடன் 58 புள்ளிகளை பெற்று பார்சிலோனா முதலிடத்தில் இருந்தது.  

இந்த சுகாதார நெருக்கடி நிலையில் மெஸ்ஸி பார்சிலோனா அணி வீரர்களுக்கு வழிகாட்டியாக இருந்ததோடு தமது அணியினர் 70 வீத ஊதியக் குறைப்புக்கு வருவதற்கு முன்னின்று செயற்பட்டார்.

மெஸ்ஸியின் இந்த செயற்பாடு கொரோனா வைரஸ் நெருக்கடிச் சூழலில் ஏனைய கழகங்களும் நடவடிக்கை எடுப்பதற்கு முன்மாதிரியாக இருந்ததாக பிரபல விளையாட்டு உளவியலாளரான டொம் பாட்ஸ் குறிப்பிட்டுள்ளார்.

ப்ரீமியர் லீக் வீரர்கள் பலருக்கும் இயற்கையாகவே மாறுபட்ட சிந்தனையே இருக்கிறது என்பதைப் பற்றியே இந்த நாட்களில் நான் அதிகம் பேசி வந்தேன். பல வீரர்களும்எமது கால்பந்து கழகத்தில் செல்வம் கொழிக்கிறது அதனால் அவர்களுக்கு அனைத்து ஊழியர்களுக்கும் வழக்கம்போல் சம்பளம் வழங்க முடியும். ஆனால் வேறு நாடுகளில் கால்பந்து கழகங்களுக்கு அவ்வாறு செய்ய முடியாதுஎன்று கூறுகிறார்கள். என்றாலும் சம்பள வெட்டுக்கு இணங்கி வேறு ஊழியர்களுக்கு முழுமையான சம்பளத்தை பெற்றுக்கொள்வதற்கு சந்தர்ப்பம் வழங்குவது நன்று என்று நினைக்கின்ற சில பேர் இருக்கிறார்கள்.     

போர்த்துக்கல் வீரர்களை நன்கொடை செய்ய தூண்டிய ரொனால்டோ

போர்த்துக்கல் அணி ஐரோப்பிய கால்பந்து சம்பியன்ஷிப் தொடருக்கு தகுதி பெற்றதற்காக அணியினருக்கு கிடைத்த ஊக்குவிப்பு கொடுப்பனவில் 50 வீதத்தை அணியினர் கொரோனா வைரஸுக்கு எதிரான நன்கொடையாக ….

நல்ல உதாரணம் தான் லியோனல் மெஸ்ஸி. அவர் தான் இதனை ஆரம்பித்து பார்சிலோனா கழகத்தின் ஏனைய ஊழியர்களுக்கு அவர்களின் முழு சம்பளத்தை பெற்றுக்கொள்ள முடியுமான வகையில் முதலில் 70 வீத சம்பள வெட்டுக்கு இணங்கினார். அது முழு உலகுக்கும் சிறந்த உதாரணம் என்று நான் நினைக்கிறேன். உச்சத்தில் இருக்கும் வீரர் ஒருவர் இந்த அளவு தொகையை குறைப்பதற்கு இணங்கியது முக்கியமாகும்

மெஸ்ஸி மற்றும் பெப் குவார்டியோலா முதற்கொண்டு முழு அணியும் பார்சிலோனா நகரில் ஒரு சந்தர்ப்பத்தில் சந்திக்கக் கிடைத்ததை ஒட்டி நான் மிக மகிழ்ச்சி அடைகிறேன். அதனால் அவர்கள் இவ்வாறான ஒரு நேரத்தில் இந்தப் பணியில் முன்னுரிமை வழங்கி செயற்படுவது எனக்கு ஆச்சரியம் தரும் விடயம் ஒன்றல்ல.   

தமது கழகத்தின் நன்மைக்காக உலகிற்கே முன்மாதிரியை வழங்கி தம் மூலமே ஏதாவது ஒன்றை செய்வதற்கு வீரர் ஒருவர் இருப்பதாயின், இவ்வாறான நேரத்தில் இவ்வாறு சம்பளத்தைக் குறைத்துக் கொண்டு கழகத்திற்கு ஆதரவு வழங்க அந்த வீரருக்கு முடியுமாயின் அதன் பலன் தேவையானவர்களுக்கே கிடைக்கும் என்பதே தொழிமுறை சார்ந்து எனது கருத்தாகும்என்று அவர் குறிப்பிட்டார்.

>>மேலும் பல கால்பந்து செய்திகளைப் படிக்க <<