போர்த்துக்கல் வீரர்களை நன்கொடை செய்ய தூண்டிய ரொனால்டோ

242

போர்த்துக்கல் அணி ஐரோப்பிய கால்பந்து சம்பியன்ஷிப் தொடருக்கு தகுதி பெற்றதற்காக அணியினருக்கு கிடைத்த ஊக்குவிப்பு கொடுப்பனவில் 50 வீதத்தை அணியினர் கொரோனா வைரஸுக்கு எதிரான நன்கொடையாக வழங்க கிறிஸ்டியானோ ரொனால்டோவே ஆலோசனை கொடுத்ததாக பெர்னார்டோ சில்வா குறிப்பிட்டுள்ளார். 

இந்தத் தொடருக்கு தகுதி பெறுவதற்கு போர்த்துக்கல் வீரர்கள் காட்டிய திறமைக்காகவே அணியினருக்கு இந்தக் கொடுப்பனவு வழங்கப்பட்டது. ஐரோப்பியக் கிண்ணம் இந்த பருவத்தில் நடைபெறவிருந்தமை குறிப்பிடத்தக்கது.  

மெஸ்ஸி, ரொனால்டோவில் சிறந்த வீரரை தேர்வு செய்த ககா

பிரேசில் முன்னாள் நட்சத்திர வீரர்……

எனினும் கொரோனா வைரஸ் தொற்றுக் காரணமாக இந்தத் தொடர் அடுத்த ஆண்டுக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது

இந்நிலையில் Bleacher Report   இணையதளத்திற்கு பேட்டி அளித்த சில்வாவிடம், WhatsApp இல் ரொனால்டோ எவ்வாறு உரையாடுகிறார் என்று கேட்கப்பட்டது. சில்வாவை தமது WhatsApp உரையாடல்களில் இருந்து சில நேரங்களில் அகற்றி விடுவதாக சக வீரரான கைல் வோக்கர் அண்மையில் குறிப்பிட்டிருந்தார். இதனை ஒட்டியே இந்தக் கேள்வி கேட்கப்பட்டது

ரொனால்டோ சமூகதளத்தில் அதிகம் அமைதி காப்பதாகவே சில்வா குறிப்பிட்டார். ஒரிரு நாட்களுக்கு முன் அவரே எமது உக்குவிப்புக் கொடுப்பனவை நன்கொடை செய்வதற்கு ஆலோசனை வழங்கினார்.  

எனவே நாம் ஐரோப்பியக் கிண்ணத்திற்கு தகுதிபெற்றுள்ளோம். அது 2021 இல் நடைபெறவுள்ளதுஎமது கொடுப்பனவில் ஒரு பகுதியை வழங்குவதற்கு அவர் எமக்கு ஆலோசனை வழங்கினார். எமது தேசிய அணி, எமது வீரர்கள் நாம் தகுதி பெற்றதற்காக கிடைத்த கொடுப்பனவில் 50 வீதத்தை நன்கொடை செய்வார்கள் என்று நான் நினைக்கிறேன்

ஆம், அவர் எமக்கு செய்திகளை அனுப்புவதில் சுறுசுறுப்பாக செயற்படுகிறார். கைல் போன்று ஆட்களை வெளியேற்றுவதில்லைஎன்று சில்வா கூறினார்.

போர்த்துக்கல் தேசிய அணி வீரர்கள் வழங்கும் இந்த நன்கொடை, கொவிட்-19 நெருக்கடியால் தத்தளிக்கும் தொழில்முறையற்ற கழகங்களுக்கு உதவும் போர்த்துக்கல் கால்பந்து சம்மேளனத்தின் நிதிக்கு செல்லவுள்ளது.   

ஹாலண்டை திட்டமிட்டு கேலி செய்த நெய்மார்

கடந்த மாதம் நடைபெற்ற ஐரோப்பிய…..

போர்த்துக்கல் கால்பந்து சம்மேளனம் பின்னர் வெளியிட்ட அறிவிப்பில் இதனை உறுதி செய்திருந்தது. எமக்குக் கிடைத்த 2020 ஐரோப்பிய கிண்ண தகுதிக்கான பரிசுத் தொகையை பயன்படுத்தி தொழில்முறை மற்றும் தொழில்முறையற்ற கால்பந்துக்கு இடையிலான நட்புறவை ஏற்படுத்த நாம் தீர்மானித்துள்ளோம் என்று அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது

தொழில்முறையற்ற போட்டிக் கழகங்களின் வீரர்களை இலக்கு வைத்து போர்த்துக்கல் கால்பந்து சம்மேளனத்தினால் ஏற்கனவே உருவாக்கப்பட்ட நிதிக்கு இந்தத் தொகை இணைக்கப்படவுள்ளது. எமது கால்பந்தின் முன்னேற்றத்திற்கு தாராளத்துடன் எமக்கு உதவிய அனைவரையும் எமது பயணத்தையும் நாம் மறந்துவிடவில்லை என்பதனாலேயே இந்த தீர்மானத்தை எடுத்தோம்என்றும் அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.  

கொவிட்-19 தொற்றுக்கு எதிராக ரொனால்டோ ஏற்கனவே பல உதவிகளையும் செய்துள்ளார். போர்த்துக்கலில் இருக்கும் வடக்கு லிஸ்போன் பல்கலைக்கழக மருத்துவமனையில் இரு அவசர சிகிச்சை பிரிவுகளை அமைக்க மற்றும் போர்டோஸ் சான்டோஸ் அன்டோனியோ மருத்துவமனையில் அவசர சிகிச்சை பிரிவை அமைக்கவும் உதவி புரித்தார்.

அவர் ஆடும் இத்தாலியின் ஜுவன்டஸ் கழகத்தில் நான்கு மாத ஊதியத்தை விட்டுக் கொடுக்கவும் இணங்கியமை இங்கு குறிபிடத்தக்கது. 

>>மேலும் பல கால்பந்து செய்திகளைப் படிக்க<<