வரலாற்றில் இன்று : ஜூலை மாதம் 01

344

2000ஆம் ஆண்டு – டொமினிக் கோர்க்கின் பங்களிப்பு

மேற்கிந்திய தீவுகள் அணிக்கு எதிரான இரண்டாவது டெஸ்ட் போட்டியில் இங்கிலாந்து அணிக்கு 191 என்ற வெற்றி இலக்கு நிர்ணயம் செய்யப்பட்டது. அவ்விலக்கை அடையும் நோக்கில் துடுப்பெடுத்தாடிய இங்கிலாந்து அணி ஒரு நிலையில் 8 விக்கட் இழப்பிற்கு 160 ஓட்டங்களைப் பெற்று இக்கட்டான நிலையில் இருந்தது. ஆனால் டொமினிக் கோர்க்கின் நிதானமான துடுப்பாட்டத்தால் இங்கிலாந்து அணி 2 விக்கட்டுகளால் வெற்றிபெற்றது. அவர் அந்த இனிங்ஸில் ஆட்டம் இழக்காமல் 33 ஓட்டங்களைப் பெற்றார். ஏற்கனவே அவர் பந்துவீச்சில் முதல் இனிங்ஸில் 4 விக்கட்டுகளையும் இரண்டாவது இனிங்ஸில் 3 விக்கட்டுகளையும் கைப்பற்றி இருந்தார்.  

வரலாற்றில் நேற்றைய நாள் : ஜூன் மாதம் 30

ஜூலை மாதம் 01ஆம் திகதியில் பிறந்த கிரிக்கட் வீரர்கள்

1849 ஜோன் செல்பி (இங்கிலாந்து)
1925 பிராங்க் லௌசான் (இங்கிலாந்து)
1938 செஸ்டர் வொட்சன் (மேற்கிந்திய தீவுகள்)
1963 சாஜித் அலி (பாகிஸ்தான்)
1969 கிரஹாம் லாயிட் (இங்கிலாந்து)

மேலும் விளையாட்டு செய்திகளுக்கு இங்கே கிளிக் செய்யவும்