லியோனல் மெஸ்ஸியை பிடிக்காத 5 வீரர்கள்

219
Messi

லியோனல் மெஸ்ஸி கால்பந்து உலகில் தோன்றிய சிறந்த வீரர்களில் ஒருவர் என்பதில் எவருக்கும் சந்தேகமில்லை. 

தற்போது ஸ்பெயினின் பிரபல கால்பந்து கழகமான பார்சிலோனா மற்றும் ஆர்ஜன்டீனா தேசிய அணியின் தலைவராக செயற்படும் லியோனல் மெஸ்ஸி, அன்று தொடக்கம் இன்று வரை தோன்றிய சிறந்த வீரர் என்று வீரர்கள், பயிற்சியாளர்கள், விமர்சகர்கள் மற்றும் ரசிகர்கள் பலரினதும் பாராட்டைப் பெற்றுள்ளார். எனினும், சிலர் அவர் சிறந்த வீரர்களில் மற்றொருவர் மாத்திரம் என்றும், சிலர் கூறுகின்றது போல் தொடர்ந்து சிறந்த வீரர் இல்லை என்றும் பல்வேறு கருத்துகளையும் மெஸ்ஸி தொடர்பில் வெளியிட்டு வருகின்றனர்.   

கொரோனாவுக்கு பிந்திய ஐரோப்பிய கால்பந்து

உலகெங்கும் கிட்டத்தட்ட அனைத்து விளையாட்டுகளும் தடைப்பட்டுள்ளன.

இவ்வாறு எத்தனையோ கருத்துகள் வெளியானபோதும் கடந்த 16 ஆண்டுகளாக சர்வதேச கால்பந்து அரங்கில் தொழில்முறை கால்பந்து வீரராக திறமையை வெளிப்படுத்தி வரும் அவர் படைத்திருக்கும் சாதனைகள் மற்றும் வென்றிருக்கும் விருதுகள் வேறு எவராலும் அடைய முடியாத அளவுக்கு உச்சத்தைத் தொட்டது. அவர் மைதானத்தில் வெளிப்படுத்துகின்ற திறமைகளுக்கு அப்பால் விளையாடும்போது வெளிப்படுத்துகின்ற நேர்மை மற்றும் நற்பண்பு காரணமாகவும் அதற்கு வெளியில் சாதாரண மனிதனாக வெளிப்படுத்துகின்ற எளிமை மற்றும் வறிய மக்களின் முன்னேற்றத்திற்காக மேற்கொள்ளும் பணிகள் காரணமாகவும் அனைவரது அன்பு மற்றும் கௌரவத்தை வென்றுள்ளார்.     

எனினும், இவை அனைத்துக்கும் அப்பால் பல்வேறு காரணங்களுக்காக மெஸ்ஸியை பிடிக்காத பல வீரர்களும் கால்பந்து உலகில் இருப்பது தெரிந்ததே. இவ்வாறு அவரை பிடிக்காத 5 வீரர்கள் மற்றும் அதற்கான காரணம் பற்றி பார்ப்போம்

மவுரோ இகார்டி

Icardiபல ஆண்டுகளாக இத்தாலியின் இன்டர் மிலான் அணியில் திறமையை வெளிப்படுத்தி தற்போது அந்தத் திறமையை பாரிஸ் செயின்ட் ஜெர்மைன் அணிக்காக வெளிப்படுத்தி வருகின்றார் மவுரோ இகார்டி. தற்போது கால்பந்து உலகில் பிரபலமான வீரராக தமது பெயரை உறுதி செய்திருக்கும் அவர் ஆர்ஜன்டீன தேசிய அணியில் ஆட வாய்ப்பை மிக அரிதாகவே பெறுகிறார். மெஸ்ஸி அவர் மீது காட்டும் வெறுப்பே இதற்குக் காரணம் என்று பலரும் கூறுகிறார்கள்.  

இதற்கு காரணமாக இருப்பது இகார்டி மற்றும் ஆர்ஜன்டீன தேசிய அணியின் முன்னாள் வீரரான மெக்சி லோபஸ் இடையே இருக்கின்ற தனிப்பட்ட மோதலாகும். இகார்டி மற்றும் லோபஸ் இருவரும் இத்தாலியின் சம்ப்டோரியா அணிக்காக விளையாடியபோது இருவருக்கும் இடையே நட்பு ஏற்பட்ட போதும் அப்போது லோபஸின் மனைவியுடன் இகார்டி தொடர்பு ஒன்றை ஏற்படுத்திக் கொண்டதை அடுத்து அவர் லோபஸிடம் இருந்து விலகி இகார்டியை திருமணம் புரிந்தார். இந்த முரண்பாடு காரணமாக இகார்டி கடும் விமர்சனத்திற்கு உள்ளானதோடு லோபசும் அவருடன் அதிகம் விரோதம் பாராட்ட ஆரம்பித்தார்.

லோபஸ் மற்றும் மெஸ்ஸி இருவரும் நெருக்கமான நட்புக் கொண்டிருந்ததால் இந்த நிகழ்வை அடுத்து இகார்டியை மெஸ்ஸி வெறுக்க ஆரம்பித்துள்ளார். ஆர்ஜன்டீன தேசிய கால்பந்து அணியின் தலைவராக இருப்பது மற்றும் அணியில் மெஸ்ஸியின் முக்கியத்துவம் காரணமாக அவருக்கு அணிக்கான வீரர்களை தேர்வு செய்வதில் ஓரளவு செல்வாக்கு செலுத்த முடியும் என்பது எல்லோருக்கும் தெரிந்தது. அவர் வேண்டுமென்றே இகார்டியை அணியில் இருந்து நீக்கி வருவதாக தெரியவருகிறது.    

மெஸ்ஸியின் விமானம் பிரசல்ஸில் அவசர தரையிறக்கம்

ஸ்பெயினின் டெனரிப் தீவை நோக்கி பயணித்திக்கொண்டிருந்த லியோனல் மெஸ்ஸியின்

இன்றும் கூட அதிக திறமையை காட்டி வரும் இகார்டிக்கு தேசிய அணியில் தனக்கான இடம் கிடைக்கவில்லை என்பதோடு இதன் காரணமாக அவர் மெஸ்ஸியை அதிகம் விரும்புவதில்லை என்பதோடு அவர் மீது கோபமாக இருப்பதாகவும் சர்வதேச ஊடகங்கள் கூறுகின்றன.   

ரோய்ஸ்டன் ட்ரென்தே

Drentheமெஸ்ஸியை பிடிக்காத வீரர்களில் ட்ரென்தேவுக்கு முக்கிய இடம் உண்டு. அவர் 2007 தொடக்கம் 2012 ஆம் ஆண்டு வரையான காலத்தில் பார்சிலோனா அணியின் போட்டியாளரான ரியல் மெட்ரிட் அணியின் வீரராக செயற்பட்டபோதும் 2010-2011 பருவத்தில் அவர் ஸ்பெயினின் ஹெர்கியுலஸ் அணிக்காகவும் ஆடினார். அப்போது பார்சிலோனா அணியுடனான போட்டியில் மெஸ்ஸி அவரை நீக்ரோ என்று அழைத்ததாக அவர் பின்னர் குறிப்பிட்டிருந்தார்

நான் ஆடிய ஹெர்கியுலஸ் அணி பார்சிலோனா அணியுடன் ஆடிய போட்டியில் மெஸ்ஸி மற்றும் எனக்கு இடையே சிறு மோதல் ஒன்று ஏற்பட்டது. அப்போது அவர் பல தடவையும் என்னை நீக்ரோ என்று அழைத்தார்.என்று அந்த சம்பவம் பற்றி குறிப்பிட்டார்

”நீக்ரோ” என்னும் வார்த்தை கறுப்பினத்தவர்களை அழைப்பதற்கு பயன்படுத்துகின்ற ஒரு இழிவுபடுத்தும் சொல்லாக கருதப்படுவதோடு இவ்வாறு மெஸ்ஸி மூலம் ட்ரென்தேவுக்கு நிறவெறி கருத்தொன்று வெளியானதால் அவர் மெஸ்ஸி மீது அதிகம் விருப்பம் காட்டுவதில்லை

அல்வாரோ அர்பெலோவா

Arbeolaகால்பந்து உலகில் உச்ச பரபரப்புக் கொண்ட போட்டியாக பார்க்கப்படுவது பார்சிலோனா மற்றும் ரியல் மெட்ரிட் அணிகளுக்கு இடையிலான போட்டிகளாகும். அது உலகெங்கும் உள்ள கால்பந்து ரசிகர்கள் இடையே எல் கிளாசிக்கோ என்று அழைக்கப்படுகிறது. இந்த போட்டிகளின் விறுவிறுப்பு மைதானத்தில் மாத்திரமல்ல அதற்கு வெளியிலும் அதிகம் பார்க்க முடியும். அவ்வாறான ஒரு நிகழ்வு ஒன்று காரணமாக ரியல் மெட்ரிட் அணிக்காக ஆடிய முன்னாள் வீரர் ஒருவரான அல்வாரோ அர்பெலோவிடம் மெஸ்ஸி பற்றி நல்ல அபிப்பிராயம் இல்லை. அது பற்றி அவர் ஊடகத்தில் வெளிப்படையாகவே கூறி இருக்கிறார்.

“நாம் உங்களை வெறுக்கிறோம்” ரொனால்டோவிடம் கூறிய டிபாலா

போர்த்துக்கல் நட்சத்திர வீரர் கிறிஸ்டியானோ ரொனால்டோவிடம் ஆர்ஜன்டீன மக்கள்

மெஸ்ஸி திறமையான வீரர். ஆனால் நான் ஒருபோதும் அவரின் ஆட்டத்தை நேசித்ததில்லை. எதிர்காலத்திலும் அப்படி இருக்கும் என்று நான் நினைக்கவில்லை. அவர் விரைவில் ஓய்வு பெறுவார் என்று நான் நினைக்கிறேன். அந்த தருணம் வரும் வரை நாட்களை எண்ணிக்கொண்டு இருக்கிறேன்என்றார்.   

பல ஆண்டுகளாக அல்வாரோ  ஆடிய எல் கிளாசிக்கோ போட்டிகளில் மெஸ்ஸி மேற்கொண்ட பல தவறிழைப்புகள் மெஸ்ஸி மீதான அல்வாரோவின் விருப்பமின்மையை காட்டுகிறது

செர்ஜியோ ராமோஸ்

Ramosமுன்னர் கூறியது போன்றே பார்சிலோனா மற்றும் ரியல்  மெட்ரிட் இடையிலான கடும் போட்டி காரணமாக இரு அணிகளினதும் வீரர்கள் ஒருவருக்கு ஒருவர் கோபம் மற்றும் விருப்பமின்மையை வெளிப்படுத்துவதை பார்க்க முடிகிறது. இதில் மெஸ்ஸியை விரும்பாத வீரர் ஒருவராக எதிரணித் தலைவர் செர்ஜியோ ராமோஸை பார்க்க முடியும். அவர் அது தொடர்பில் வெளிப்படையாகவே ஒப்புக்கொண்டிருக்கிறார். எல் கிளாசிக்கோ போட்டிகளை பார்க்கின்றவர்களுக்கு அவர் ஆடும் பாணி அதனை வெளிப்படுத்துவதாக இருக்கும் என்பது தெரியும்.     

ராமோஸினால் மெஸ்ஸி மீது மேற்கொள்ளப்படுகின்ற கடுமையான Tackle முறைகள், இருவருக்கும் இடையே ஏற்படுகின்ற சூடுபறக்கும் வார்த்தைப் பிரயோகங்கள் மற்றும் இருவருக்கும் இடையே அடிக்கடி ஏற்படுகின்ற மோதல்களை எல் கிளாசிக்கோ போட்டிகளில் அடிக்கடி பார்க்க முடிகிறது. இதனால் ராமோஸ் சில சந்தர்ப்பங்களில் சிவப்பு அட்டையும் பெற்றிருக்கிறார்.

உருகுவே குடும்பங்களுக்கு உணவளிக்கும் சுவாரெஸ்

பார்சிலோனா முன்கள வீரரான லுவிஸ் சுவாரெஸ் தனது சொந்த

இந்தப் போட்டிகளில் இருவருக்கும் இடையே எப்போதும் ஏச்சுப் பேச்சுகள் இடம்பெறுவதோடு 2017 இல் நடைபெற்ற ஸ்பானிஷ் சுப்பர் கிண்ண இறுதிப் போட்டியில் ராமோஸ் மெஸ்ஸி மீது பந்தை வழங்குவது போன்று வழங்கி பின்னர் பந்தை தடுத்து ராமோஸ் மெஸ்ஸியை கேலி செய்ததன் பின் மெஸ்ஸி அவரை வணங்கும் சம்பவம் அதற்கு சிறந்த உதாரணமாகும்.   

இவ்வாறு ராமோஸ் மற்றும் மெஸ்ஸி இடையிலான கோபத்திற்கான ஒரு காரணத்தை குறிப்பிட்டு அடையாளம் காண முடியாத போதும் இந்த கோபம் இரு அணிகளுக்கும் இடையிலான பரபரப்பான போட்டிக்கு உந்துதலாக உள்ளது.  

பேலே

Pele1283 கோல்களுடன் அன்று தொடக்கம் இன்று வரை கால்பந்து வீரர் ஒருவர் தமது கால்பந்து வாழ்வில் பதிவு செய்த அதிக கோல் எண்ணிக்கைக்கான உலக சாதனைக்கு சொந்தம் கொண்டாடுகின்ற, மூன்று பிஃபா உலகக் கிண்ணங்களை வெற்றி கொண்ட ஒரே வீரரான பேலே கால்பந்து வரலாற்றில் தோன்றிய மிகச் சிறந்த வீரராவார். அப்படி இல்லை என்றால் அவர் ஒரு ஜாம்பவான் என்பதில் எந்தக் கருத்து வேறுபாடும் இல்லை எனக் கூறலாம். எவ்வாறாயினும் அவருக்கு மெஸ்ஸி தொடர்பில் நல்ல அபிப்பிராயம் இல்லை என்பது பலருக்கும் தெரிந்த ஒன்று.

அவர் மெஸ்ஸி தொடர்பில் இரட்டை நிலைப்பாட்டையே பின்பற்றி வருகிறார். பல சந்தர்ப்பங்களிலும் அவர் மெஸ்ஸியை கால்பந்து உலகில் தற்போது இருக்கும் சிறந்த வீரர் என்று பாராட்டி உள்ளார். என்றபோதும் பின்னர் அந்த நிலைப்பாடு மாற ஆரம்பித்ததோடு கடந்த காலங்களில் பல சந்தர்ப்பங்களிலும் மெஸ்ஸி தொடர்பில் வெளியிட்ட சர்ச்சைக்குரிய கருத்துகளை பார்க்கும் போது பேலேவிற்கு மெஸ்ஸி தொடர்பில் இருக்கின்ற விருப்பமின்மை வெளிப்படையாக தெரிகின்றது.    

தற்போது எல்லோருமே மெஸ்ஸி பற்றி பேசுகிறார்கள். அவர் நட்சத்திர வீரர் தான். ஆனால் மெஸ்ஸி கால்பந்து உலகின் சிறந்த வீரராவதற்கு அவர் முதலில் நெய்மாரை விடவும் சிறந்த வீரராக இருக்க வேண்டும். ”

கழிப்பறை சுத்தம் செய்யும் நட்சத்திர வீரர்: சாடியோ மானேயின் மறுபக்கம்

கால்பந்து மைதானத்தில் சாடியோ மானேவின் திறமை எல்லோருக்கும்

”பந்தை தலையால் முட்டி ஆடக்கூடிய, வலது கால் போன்று இடது காலாலும் ஒரே மாதிரி பந்தை உதைக்க முடியுமான என்னைப் போன்ற வீரர் ஒருவருடன் ஒரு காலால் மாத்திரம் சிறந்த முறையில் உதைக்க முடியுமான, பந்துக்கு சிறந்த முறையில் தலையால் ஆட முடியாத, ஒரே ஒரு திறமையை மாத்திரம் கொண்ட வீரர் ஒருவரை ஒப்பிடுவது எவ்வாறு? உண்மையில் அது போன்று எவ்வாறு ஒப்பிட முடியும்? என்னுடன் மற்றொரு வீரரை ஒப்பிடுவதென்றால் அவர் இரு கால்களாலும் அதேபோன்று தலையாலும் பந்தை கையாண்டு கோல் பெறுகின்ற வீரர் ஒருவராக இருக்க வேண்டும்.”

”மரடோனா என்பவர் மெஸ்ஸியை விட மிக திறமையான அவரை விட உயரத்தில் இருந்த வீரர் ஒருவர். அதேபோன்று மெஸ்ஸிக்கு மேலால் க்ரூப் மற்றும் பெக்கன்பேர்க் போன்ற வீரர்கள் உள்ளனர். மெஸ்ஸிக்கு இருப்பது ஒரே ஒரு திறமை தான். அது அவரது இடது கால் மாத்திரமாகும்என பேலே கூறுகின்றார்.

இவ்வாறு மெஸ்ஸியை தாழ்வுபடுத்தி பேலே பல கருத்துகளையும் கடந்த காலங்களில் வெளியிட்டுள்ளார். மற்றொரு சந்தர்ப்பத்தில் பேலேவிடம் ஊடகவியலாளர் ஒருவர், மெஸ்ஸி கால்பந்து உலகில் தோன்றிய சிறந்த வீரர் என்று கூறலாமா என்று கேட்டபோது, “மெஸ்ஸி என்னைப் போன்று 1282 கோல்களை பெற்று, மூன்று உலகக் கிண்ணங்களை வென்ற பின்னர் நாம் அது பற்றி பேசுவோம்என்றார். எவ்வாறாயினும் இந்த கருத்தின் மூலம் பேலே கால்பந்து ரசிகர்களின் கடும் விமர்சனத்திற்கு உள்ளானார்.  

இவ்வாறாக பேலே மெஸ்ஸி பற்றி விருப்பமின்மையை வெளிப்படுத்துவதற்கு என்ன காரணம் என்று தெரியாதபோதும் கால்பந்து வீரர்கள், பயிற்சியாளர்கள், ரசிகர்கள் மற்றும் விமர்சகர்களிடம் சிறந்த கால்பந்து வீரர் பற்றி கேட்டால் அவர்கள் பேலேவுக்கு பதில் மெஸ்ஸியின் பெயரை கூறவே முன்வருகிறார்கள்.

மேலும் கால்பந்து செய்திகளைப் படிக்க