ஜிம்பாப்வே அணியிலிருந்து வெளியேறும் லான்ஸ் குலூஸ்னர்!

Zimbabwe Cricket

118

ஜிம்பாப்வே அணியின் துடுப்பாட்ட பயிற்றுவிப்பாளர் பதவியிலிருந்து தென்னாபிரிக்காவின் முன்னாள் சகலதுறை வீரர் லான்ஸ் குலூஸ்னர் விலகியுள்ளார்.

லான்ஸ் குலூஸ்னர் சர்வதேசத்தின் ஏனைய நாடுகளில் பயிற்றுவிப்பு பணிகளை எதிர்பார்ப்பதன் காரணமாக தன்னுடைய பயிற்றுவிப்பு பதவியிலிருந்து விலகியுள்ளதாக ஜிம்பாப்வே கிரிக்கெட் சபை அறிவித்துள்ளது.

இலங்கை மகளிர் கிரிக்கெட் அணிக்கு ஆசியக் கிண்ணத்தில் மூன்றாவது தொடர் வெற்றி

T20 உலகக்கிண்ணம் ஆரம்பிக்கவிருக்கும் நிலையில், லான்ஸ் குலூஸ்னர் விலகியுள்ளமை ஜிம்பாப்வே அணிக்கு மிகப்பெரிய பின்னடைவாக அமையும் என எதிர்பார்க்கப்படுகின்றது.

லான்ஸ் குலூஸ்னரின் பயிற்சியின் கீழ் ஜிம்பாப்வே அணி சிறந்த பிரகாசிப்புகளை வெளிப்படுத்தியிருந்ததடன், அவுஸ்திரேலிய அணிக்கு எதிராக அவர்களுடைய சொந்த மண்ணில் ஒருநாள் போட்டியொன்றில் முதன்முறையாக வெற்றிபெற்றிருந்தது. அத்துடன், T20 உலகக்கிண்ணத்துக்கான முதல் சுற்றுப்போட்டிக்கும் இம்முறை தகுதிபெற்றுள்ளது.

லான்ஸ் குலூஸ்னர் ஏற்கனவே ஜிம்பாப்வே அணியின் துடுப்பாட்ட பயிற்றுவிப்பாளராக 2016ம் ஆண்டு முதல் 2018ம் ஆண்டுவரை செயற்பட்டிருந்தார். அதன் பின்னர் ஆப்கானிஸ்தான் அணியின் தலைமை பயிற்றுவிப்பாளராக 2021ம் ஆண்டு T20 உலகக்கிண்ணம் வரை செயற்பட்டார். கடந்த மார்ச் மாதம் ஜிம்பாப்வே அணியின் துடுப்பாட்ட பயிற்றுவிப்பாளராக இவர் பணியேற்றிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

>>மேலும் பல கிரிக்கெட் செய்திகளைப் படிக்க<<