இரண்டாவது டெஸ்ட் போட்டிக்கான மே.தீவுகள் குழாம் அறிவிப்பு

121
© ICC
 

இந்திய அணிக்கு எதிராக நடைபெறவுள்ள இரண்டாவது டெஸ்ட் போட்டிக்கான மேற்கிந்திய தீவுகள் குழாத்தில், வேகப் பந்துவீச்சாளர் கிமோ போல் இணைக்கப்பட்டுள்ளார்.

பாக். அணியின் பயிற்சியாளர் பதவிக்கு மிஸ்பா உல் ஹக் விண்ணப்பம்

பாகிஸ்தான் கிரிக்கெட் அணியின் முன்னாள் ……

மேற்கிந்திய தீவுகள் மற்றும் இந்திய அணிகளுக்கு இடையிலான முதல் டெஸ்ட் போட்டியில் இந்திய அணி வெற்றிபெற்று, தொடரில் 1-0 என முன்னிலை வகிப்பதுடன், இரண்டாவது டெஸ்ட் போட்டி எதிர்வரும் 30ம் திகதி கிங்ஸ்டனில் நடைபெறவுள்ளது.

இந்த இரண்டாவது டெஸ்ட் போட்டிக்கான 13 பேர்கொண்ட குழாத்தை மேற்கிந்திய தீவுகள் கிரிக்கெட் சபை இன்று அறிவித்துள்ளது. இந்த குழாத்தில் உபாதை காரணமாக நீக்கப்பட்டிருந்த கிமோ போல் மீண்டும் அணியில் இணைக்கப்பட்டுள்ளார்.

கிமோ போல் கணுக்கால் உபாதை காரணமாக முதல் டெஸ்ட் போட்டிக்கான குழாத்திலிந்து நீக்கப்பட்டிருந்த நிலையில், அவருக்கு பதிலாக மிகல் கம்மின்ஸ் முதல் டெஸ்ட் போட்டியில் இணைக்கப்பட்டிருந்தார். எனினும், மிகல் கம்மின்ஸ் 20 ஓவர்கள் பந்துவீசியும் ஒரு விக்கெட்டினையும் வீழ்த்தியிருக்கவில்லை. இதன் காரணமாக அவர் குழாத்திலிருந்து நீக்கப்பட்டுள்ளார்.

இதேவேளை இரண்டாவது டெஸ்ட் போட்டிக்கான குழாத்திலிருந்து, கணுக்கால் உபாதைக்கு முகங்கொடுத்துள்ள ஷேன் டவ்ரிச் நீக்கப்பட்டுள்ளார் என மேற்கிந்திய தீவுகள் கிரிக்கெட் சபை உறுதிசெய்துள்ளது. அவருக்கு பதிலாக மேலதிக விக்கெட் காப்பாளராக ஜெமர் ஹெமில்டன் குழாத்தில் இணைக்கப்பட்டிருக்கிறார்.

எனினும், விக்கெட் காப்பாளராக துடுப்பாட்ட வீரர் ஷேய் ஹோப் செயற்படுவார் என கிரிக்கெட் சபை சுட்டிக்காட்டியுள்ளது. அதேநேரம், சிறந்த முதற்தர பதிவுகளை வைத்திருக்கும் ரகீம் கொர்ன்வேல் தொடர்ந்தும் குழாத்தில் தக்கவைக்கப்பட்டுள்ளார் என்பதுடன், இரண்டாவது டெஸ்ட் போட்டியில் அவர் விளையாடுவதற்கான வாய்ப்புகள் இருப்பதாக தெரிவிக்கப்படுகிறது.

பாகிஸ்தான் வீரருக்கு பதிலாக ஒப்பந்தம் செய்யப்பட்ட முரளி விஜய்

இந்திய அணியின் டெஸ்ட் ஆரம்ப துடுப்பாட்ட …….

இரண்டாவது டெஸ்ட் போட்டிக்கான மேற்கிந்திய தீவுகள் குழாம்

ஜேசன் ஹோல்டர் (தலைவர்), கிரைக் பிராத்வைட், டெரன் பிராவோ, சமார் புரூக்ஸ், ஜோன் கெம்பெல், ரொஸ்டன் சேஸ், ரகீம் கொர்ன்வேல், செனோன் கேப்ரியல், ஜெமர் ஹெமில்டன், ஷிம்ரோன் ஹெட்மையர், ஷேய் ஹோப், கீமோ போல், கெமார் ரோச்

>> மேலும் பல கிரிக்கெட் செய்திகளைப் படிக்க <<