பாகிஸ்தான் T20 அணியிலிருந்து ஹபீஸ் நீக்கம்

129
AFP via Getty Images

சுற்றுலா தென்னாபிரிக்கா மற்றும் பாகிஸ்தான் அணிகள் இடையிலான T20 தொடருக்கான பாகிஸ்தான் கிரிக்கெட் அணிக் குழாம் ஞாயிற்றுக்கிழமை (31) அறிவிக்கப்பட்டிருக்கின்றது.

லொக்குஹெட்டிகே குற்றம் செய்துள்ளமையை கண்டறிந்த ஐசிசி

தற்போது பாகிஸ்தானுக்குச் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள தென்னாபிரிக்க கிரிக்கெட் அணி, அந்நாட்டில் ஐ.சி.சி. உலக டெஸ்ட் சம்பியன்ஷிப்பிற்காக இரண்டு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடிவருகின்றது. 

இந்த டெஸ்ட் தொடர் நிறைவடைந்த பின்னர், தென்னாபிரிக்க – பாகிஸ்தான் அணிகள் இடையில் மூன்று போட்டிகள் கொண்ட T20 தொடர் பெப்ரவரி மாதம் 11ஆம் திகதி ஆரம்பமாகவுள்ள நிலையில் இந்த தொடருக்கான பாகிஸ்தானின் T20 அணிக் குழாமே தற்போது அறிவிக்கப்பட்டிருக்கின்றது. 

அதன்படி, பாகிஸ்தான் T20 குழாத்தில் அனுபவ சகலதுறை வீரரான மொஹமட் ஹபீஸ் நீக்கப்பட்டுள்ளதோடு, சிரேஷ்ட வேகப் பந்துவீச்சாளரான வஹாப் ரியாஸ் இற்கும் வாய்ப்பு வழங்கப்படவில்லை. இதேநேரம்,  பாகிஸ்தானின் கடைசி T20 தொடரில் நியூசிலாந்துக்கு எதிராக திறமையினை வெளிப்படுத்திய சகலதுறை வீரர்களான சதாப் கான் மற்றும் இமாட் வஸீம் ஆகியோரும் தென்னாபிரிக்க அணிக்கு எதிரான T20 தொடரில் இணைக்கப்படவில்லை.

இவர்கள் தவிர, பாகிஸ்தானின் அதிரடி சகலதுறைவீரர் பக்கர் ஷமானிற்கும் இந்த T20 தொடரில் ஓய்வு வழங்கப்பட்டிருக்கின்றது.  

அதேநேரம், பாபர் அசாம் மூலம் வழிநடாத்தப்படவுள்ள பாகிஸ்தான் T20 குழாத்தில் நான்கு புதுமுக வீரர்களுக்கு வாய்ப்பு வழங்கப்படவுள்ளமை குறிப்பிடத்தக்க விடயமாகும். 

இந்த புதுமுகவீரர்களில் ஷபர் கோஹர் இடதுகை சுழல் பந்துவீச்சாளர் என்பதோடு, அமாட் பட் பந்துவீச்சு சகலதுறை வீரராகவும், தனிஷ் அஸிஸ் சகலதுறை வீரராகவும் ஷஹிர் மஹ்மூட் மணிக்கட்டு சுழல் பந்துவீச்சாளராகவும் காணப்படுவது குறிப்பிடத்தக்கது.

18ஆம் திகதி சென்னையில் IPL ஏலம்: உரிமையாளர்களுக்கு 2 PCR பரிசோதனை

இந்த T20 தொடருக்காக தெரிவு செய்யப்பட்டு தென்னாபிரிக்க அணிக்கு எதிரான டெஸ்ட் தொடரில் உள்ளடக்கப்படாத பாகிஸ்தான் வீரர்கள் பெப்ரவரி மாதம் 03ஆம் திகதி தொடக்கம் பாகிஸ்தான் அணியின் உயிர் பாதுகாப்பு வலயத்தில் இணைந்து T20 தொடருக்கான பயிற்சிகளில் ஈடுபடுவர் எனத் தெரிவிக்கப்பட்டிருக்கின்றது.  

பாகிஸ்தான் T20 குழாம்

பாபர் அசாம் (அணித்தலைவர்), ஆமெர் யமீன், அமாட் பட், அசிப் அலி, ஹைதர் அலி, பஹிம் அஷ்ரப், ஹைடர் அலி, ஹரிஸ் ரவுப், ஹசன் அலி, ஹொசைன் தலாட், இப்திக்கார் அஹ்மட், குஷ்டில் சாஹ், மொஹமட் ஹஸ்னைன், மொஹமட் நவாஸ், மொஹமட் ரிஸ்வான், சர்பராஸ் அஹ்மட், சஹீன் அப்ரிடி, உஸ்மான் காதிர், ஷபர் கோஹர், ஷஹீட் மஹ்மூட்

T20 தொடர் அட்டவணை

  • முதல்  T20 போட்டி – பெப்பரவரி 11 – லாஹூர்
  • இரண்டாவது T20 போட்டி – பெப்ரவரி 13 – லாஹூர்
  • மூன்றாவது  T20 போட்டி – பெப்ரவரி 14 – லாஹூர் 

>>மேலும் கிரிக்கெட் செய்திகளைப் படிக்க<<