
டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் குறைந்த வயதில் 7 ஆயிரம் ஓட்டங்களைக் கடந்த 3 ஆவது வீரர் என்ற பெருமையை இங்கிலாந்து அணித் தலைவர் ஜோ ரூட் படைத்துள்ளார்.
இங்கிலாந்து – அவுஸ்திரேலியா அணிகள் மோதும் 5 ஆவது மற்றும் கடைசி ஆஷஸ் டெஸ்ட் போட்டி லண்டன் ஓவல் மைதானத்தில் நேற்று முன்தினம் (12) ஆரம்பமாகியது. போட்டியில் முதலில் துடுப்பெடுத்தாடிய இங்கிலாந்து அணி முதல் இன்னிங்சுக்காக சகல விக்கெட்டுக்களையும் இழந்து 294 ஓட்டங்களை எடுத்தது.
இங்கிலாந்து அணி சார்பில் ஜோஸ் பட்லர் 70 ஓட்டங்களையும், ஜோ ரூட் 57 ஓட்டங்களையும், அதிகபட்சமாக எடுத்தனர்.
பந்துவீச்சில் மிட்செல் மார்ஷ் 5 விக்கெட்டுக்களையும், பெட் கம்மின்ஸ் 3 விக்கெட்டுக்களையும் எடுத்தனர்.
டெஸ்ட் கிரிக்கெட்டில் புதிய சாதனை படைத்த ஸ்டீவ் ஸ்மித்
அவுஸ்திரேலிய அணியின் முன்னணி துடுப்பாட்ட வீரர் ஸ்டீவ் ஸ்மித், டெஸ்ட் போட்டிகளில் அணியொன்றுக்கு எதிராக 50…
இதில் இங்கிலாந்து அணித் தலைவர் 35 ஓட்டங்களை எடுத்தபோது டெஸ்ட் அரங்கில் 7 ஆயிரம் ஓட்டங்கள் மைல்கல்லை தொட்டார். அவர் 85 டெஸ்ட் போட்டிகளில் 157 இன்னிங்ஸில் விளையாடி 7022 ஓட்டங்களை எடுத்தார். இதில் 16 சதங்களும், 44 அரைச் சதமும் அடங்கும். அதிகபட்சமாக 254 ஓட்டங்களைக் குவித்துள்ளார்.
அத்துடன், டெஸ்ட் அரங்கில் 7 ஆயிரம் ஓட்டங்களைக் குவித்த 12 ஆவது இங்கிலாந்து துடுப்பாட்ட வீரர் என்ற பெருமையை ஜோ ரூட் பெற்றுக்கொண்டார்.
மேலும், குறைந்த இன்னிங்ஸில் 7 ஆயிரம் ஒட்டங்களை எடுத்த 4 ஆவது இங்கிலாந்து வீரராகவும் இடம்பிடித்தார். இதில் ஹேமந்த் 131 இன்னிங்ஸிலும், கெவின் பீட்டர்சன் 150 இன்னிங்ஸிலும், அலெஸ்டயர் குக் 151 இன்னிங்ஸிலும் 7 ஆயிரம் ஓட்டங்களை எடுத்துள்ளனர்.
இதேநேரம், குறைந்த வயதில் 7 ஆயிரம் ஓட்டங்களை எடுத்த 3 ஆவது சர்வதேச வீரராகவும் ஜோ ரூட் இடம்பிடித்தார். அவர் 28 வயது 256 நாட்களில் இந்த மைல்கல்லை எட்டினார். இதில் அலெஸ்டயர் குக் 27 வயது 346 நாட்களிலும், சச்சின் தெண்டுல்கர் 28 வயது 193 நாட்களிலும் 7 ஆயிரம் ஓட்டங்கள் மைல்கல்லை தொட்டனர்.
பின்னர் துடுப்பெடுத்தாடிய அவுஸ்திரேலியா அணி, முதல் இன்னிங்சுக்காக சகல விக்கெட்டுக்களையும் இழந்து 225 ஓட்டங்களை எடுத்தது.
>>மேலும் பல கிரிக்கெட் செய்திகளைப் படிக்க<<