ஜனவரி மாதத்தில் ஆரம்பிக்கவுள்ள SA T20 லீக்!

ICC Player of the Month Award

65

தென்னாபிரிக்காவில் முதன்முறையாக நடைபெறவுள்ள SA T20 லீக் கிரிக்கெட் தொடர் அடுத்த ஆண்டு ஜனவரி 10ஆம் திகதி ஆரம்பமாகவுள்ளமை உத்தியோகபூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.

SA T20 லீக் நிர்வாகம் முழுமையான போட்டி அட்டவணையை வெளியிடாத போதும், ஆரம்பிக்கும் தினம் மற்றும் இறுதிப் போட்டிக்கான தகவல்களை வெளியிட்டுள்ளது.

ஐசிசியின் சிறந்த வீரராக விராட் கோஹ்வி தெரிவு!

அதன்படி SA T20 லீக் தொடரின் முதல் போட்டி எம்.ஐ. கேப் டவுன் அணியின் சொந்த மைதானத்தில் ஜனவரி 10ஆம் திகதி நடைபெறவுள்ளது. எம்.ஐ கேப் டவுன் அணி தங்களுடைய முதல் போட்டியில் பார்ல் றோயல் அணியை எதிர்கொள்ளவுள்ளது.

சுமார் ஒரு மாத காலம் நடைபெறவுள்ள ஐந்து அணிகளுக்கு இடையிலான இந்த போட்டித்தொடரின் இறுதிப் போட்டி பெப்ரவரி 11ஆம் திகதி வொண்டரசில் நடைபெறவுள்ளது.

தொடரின் முதல் சுற்றில் ஒவ்வொரு அணிகளும் தலா 2 தடவைகள் எதிரணிகளை எதிர்கொள்ளும் என்பதுடன், ஐ.பி.எல். தொடரின் போட்டி அட்டவணைகளை ஒத்த வகையில் போட்டிகள் நடைபெறும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

SA T20 லீக் தொடர் திகதிகள் அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், இதே காலப்பகுதியில் ஐக்கிய அரபு இராச்சியத்தில் நடத்தப்படவுள்ள ILT20 தொடருக்கான போட்டி திகதிகள் இதுவரை அறிவிக்கப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

>> மேலும் பல கிரிக்கெட் செய்திகளைப் படிக்க <<