IPL தொடரில் முத்திரை பதிக்க காத்திருக்கும் இளம் வீரர்கள்

203

உலகின் மிகப் பெரிய கிரிக்கெட் திருவிழாவான இந்தியன் ப்ரீமியர் லீக் (ஐ.பி.எல்.) T20 தொடரின் 13ஆவது பருவம் ஐக்கிய அரபு இராச்சியத்தில்  ஆரம்பமாகி தற்போது மிகவும் விறுவிறுப்பாக இடம்பெற்று வருகின்றது.

.பி.எல் என்றாலே துடுப்பாட்ட வீரர்கள் பௌண்டரிகளையும் சிக்ஸர்களையும் பறக்கவிடுவதும், அதை களத்தடுப்பாளர்கள் லாவகமாக டைவ் அடித்து தடுப்பதும், இறுதிப் பந்து வரை போட்டியின் வெற்றிதோல்வி என நொடிக்கு நொடி த்ரில்லுக்கும், பரபரப்புக்கும் பஞ்சம் இல்லாத போராட்டமாகவே இருக்கும்

அதிலும் சர்வதேச கிரிக்கெட் களத்தில் அதிகம் அறிமுகமில்லாத வீரர்கள் பட்டாசாக வெடித்து சிதறி தங்களது திறனை நிரூபிப்பதும் .பி.எல் களத்தில் தான். அந்த ஆட்டத் திறனின் மூலம் சர்வதேச அளவில் விளையாடவும் அவர்களுக்கு ஒரு வாய்ப்பு அமைகிறது.

எந்த இந்திய வீரரும் செய்யாத சாதனைகளைப் படைத்த ராகுல்

அதிலும் குறிப்பாக, இந்திய அணியில் தற்போது விளையாடுகின்ற பெரும்பாலான வீரர்கள் .பி.எல் தொடரின் ஊடாக தமக்கான தனி முத்திரையைப் பதித்துக் கொண்டனர். 

இந்த நிலையில், இவ்வருடம் நடைபெறுகின்ற .பி.எல் தொடரிலும் அப்படி விளையாடி சாதிக்க உள்ள இளம் வீரர்கள் குறித்த பார்வையை இந்த கட்டுரை ஆராய்கின்றது.

யஷஸ்வி ஜெய்ஸ்வால்ராஜஸ்தான் ரோயல்ஸ் 

கடந்த 2019இல் இளம் வயதில் முதல் தர கிரிக்கெட் போட்டியில் இரட்டை சதம் அடித்ததன் மூலம் கிரிக்கெட் இரசிகர்களின் கவனத்தை தன் பக்கம் கொண்டு வந்தவர் யஷஸ்வி ஜெய்ஸ்வால், இம்முறை ஐ.பி.எல் தொடரில் ராஜஸ்தான் ரோயல்ஸ் இடம்பிடித்துள்ளார். 

மும்பையில் பானிப்பூரி விற்று, பிளாஸ்டிக் டென்ட் குடிசையில் தங்கி வாழ்க்கையை நடத்தி, இந்திய இளையோர் அணியில் இடம் பிடித்தவர்தான் இந்த இளம் வீரர் ஜெய்ஸ்வால்

19 வயதுக்கு உட்பட்டோருக்கான உலகக் கிண்ணப் போட்டி கடந்த பெப்பரவரி மாதம் தென்னாபிரிக்காவில் நடைபெற்றது. பாகிஸ்தானுக்கு எதிரான அரையிறுதிப் போட்டியில் இந்திய அணி 10 விக்கெட் வித்தியாசத்தில் வென்றது. இந்தப் போட்டியில் ஜெய்ஸ்வால் ஆட்டமிலக்காமல் 105 ஓட்டங்களைப் பெற்றார்.  

இந்திய இளம் அணியில் இடம் பிடிக்க ஜெய்ஸ்வால் தனது வாழ்வில் கடந்து வந்த பாதைகள் எளிமையானவை அல்ல. வறுமையிலும், போதுமான விளையாட்டு வசதிகள் இல்லாத பின்னணியில் பானிப்பூரி விற்றுக் கொண்டும், பிளாஸ்டிக் டென்ட் குடிசையில் தங்கியும் கிரிக்கெட் பயிற்சி எடுத்து இந்த நிலைக்கு உயர்ந்துள்ளார்

Video – விராட் கோலி செய்த தவறு என்ன? | Cricket Galatta Epi 37

கடந்த 2015ஆம் ஆண்டு கில்ஸ் ஷீல்ட் கிரிக்கெட் போட்டியில் விளையாட ஜெய்ஸ்வாலுக்கு வாய்ப்பு கிடைத்தது. அந்தப் போட்டியில் 319 ஓட்டங்களை எடுத்தார்.  

அதன்பின், கடந்த வருடம் செப்டம்பர், ஒக்டோபர் மாதங்களில் நடைபெற்ற விஜய் ஹசாரே போட்டியில் (லிஸ்ட் ) ஜெய்ஸ்வால் 154 பந்துகளில் 203 ஓட்டங்களை எடுத்து அனைவரின் கவனத்தையும் ஈர்த்துக் கொண்டார்

மிக இளம் வயதில் லிஸ்ட் போட்டிகளில் இரட்டைச்சதம் அடித்த இந்திய வீரர் என்ற சாதனையை ஜெய்ஸ்வால் படைத்தார். மேலும், லிஸ்ட் கிரிக்கெட்டில் இரட்டைச் சதமடித்த ஏழாவது இந்திய வீரர் என்ற பெருமையையும் பெற்றுக் கொண்டார்

இதையடுத்து 19 வயதுக்கு உட்பட்டோருக்கான இந்திய அணியில் விளையாட அவருக்கு இடம் கிடைத்தது. இந்திய அணியில் விளையாடிய ஜெய்ஸ்வால் குறித்த தொடரில் சதம் உட்பட 400 ஓட்டங்களைக் குவித்து அனைவரது பாராட்டையும் பெற்றுக் கொண்டார். இதன்போது அவரது ஓட்ட சராசரி 133 ஆக இருந்தது. 

வறுமையான குடும்பத்தில் பிறந்து, பானிப்பூரி விற்பனை செய்து, மீதி நேரத்தில் கிரிக்கெட் பயிற்சி எடுத்து, இம்முறை ஐ.பி.எல் தொடரில் விளையாட வாய்ப்பு பெற்றுள்ள ஜெய்ஸ்வாலின் விடாமுயற்சியும், கடின உழைப்பும் பாராட்டுக்குரியது

தோல்வியையும் தழுவி, தண்டனைக்கும் உள்ளான கோஹ்லி

உள்ளூர் பயிற்சியாளர் ஒருவர் அவரை அடையாளம் கண்டு, அடைக்கலம் கொடுத்தார். அதன் பிறகு அவருடைய வாழ்க்கையில் நல்ல திருப்பம் ஏற்பட்டது. ஜோஸ் பட்லர், பென் ஸ்டோக்ஸ் போன்ற சர்வதேச வீரர்கள் உள்ளிட்ட நட்சத்திர வீரர்கள் நிறைந்த ராஜஸ்தான் ரோயல்ஸ் அணியில் தடம் படிப்பது ஜெய்ஸ்வாலுக்கு அவ்வளவு எளிதானதாக இருக்காது.

ஆனால் சூழ்நிலை கடுமையாக இருக்கும்போது, எப்படி தடம் பதிக்க வேண்டும் என்ற வித்தையை அறிந்திருக்கிறார் ஜெய்ஸ்வால்.

ரவி பிஸ்னோய்கிங்ஸ் லெவன் பஞ்சாப்  

வலதுகை லெக் ஸ்பின் பந்துவீச்சாளரான ரவி பிஸ்னோய் இவ்வருடம் நடைபெற்ற 19 வயதுக்குட்பட்ட உலகக் கிண்ணத் தொடரில் 17 விக்கெட்டுகளை வீழ்த்தியவர். அந்தத் தொடரில் அதிக விக்கெட்டுக்களை வீழ்த்திய பந்துவீச்சாளராகவும் அவர் இடம்பிடித்தார்.

கடந்த 2 வருடங்களாக கிங்ஸ் இலவன் பஞ்சாப் அணியில் இடம்பிடித்திருந்த அஷ்வின், இம்முறை டெல்லி அணிக்கு சென்றுள்ள நிலையில், பஞ்சாப் அணியின் ஆபத்தான சுழல் பந்துவீச்சாளராக ரவி பிஸ்னோய் இருப்பார் என நம்பப்படுகின்றது

அனில் கும்ப்ளேவின் பயிற்சியின் கீழ் டுபாய் ஆடுகளங்களில் பிஸ்னோய் நிச்சயம் சாதிப்பார் என்பது அனைவரது எதிர்பார்ப்பாகும்.

Video – டோனி, கோஹ்லி, டிவில்லியர்ஸின் முத்தான சாதனைகள் |Sports RoundUp – Epi 133

அதுமாத்திரமின்றி, உலகக் கிண்ணப் போட்டியில் வெளிப்படுத்திய அசத்தலான ஆட்டத்தை ரவி பிஸ்னோய் இந்தப் போட்டிகளில் தங்களுக்காக வெளிப்படுத்துவார் என்று கிங்ஸ் இலவன் பஞ்சாப் அணி நம்பிக்கை கொண்டுள்ளது.

அப்துல் ஸமாத்சன்ரைசர்ஸ் ஹைதராபாத் 

ஜம்மு காஷ்மீரைச் சேர்ந்த பதினெட்டு வயதான அப்துல் ஸமாத், துடுப்பாட்டம் மற்றும் லெக் ஸ்பின்னர் என பன்முக திறமை கொண்டவர். குறிப்பாக, பர்விஸ் ரசூலுக்குப் பிறகு .பி.எல் போட்டிகளில் விளையாடும் இரண்டாவது ஜம்மு காஷ்மீர் வீரரும் இவர் தான்.

சகலதுறை வீரராக இவர் முதல்தரப் போட்டிகளில் அதிரடியாக பந்துகளை அடித்து நொறுக்கி ஓட்டங்களைக் குவிக்கின்ற வல்லமை கொண்டவர். எட்டு முதல்தர போட்டிகளில் விளையாடியுள்ள அவரது துடுப்பாட்ட சராசரி 125 ஆகும். T20i போட்டிகளில் அவரது ஸ்ட்ரைக் ரேட் 136.36 ஆக உள்ளது

எனவே, இம்முறை .பி.எல் தொடரில் Orange Army என்றழைப்படுகின்ற சன்ரைசர்ஸ் அணியில் மத்திய வரிசையில் களமிறங்கி அப்துல் ஸமாத் பிராகாசிப்பார் என்பது அனைவரதும் எதிர்பார்ப்பாகும்.

பிரியம் கார்க் சன்ரைசர்ஸ் ஹைதராபாத்

இவ்வருடம் நடைபெற்ற 19 வயதுக்குஉட்டோருக்கான உலகக் கிண்ணப் போட்டியில் இந்திய அணியின் தலைவராக இருந்து இறுதிப் போட்டி வரை அணியை கொண்டு சென்றவர் பிரியம் கார்க். அவருடைய ஓட்ட குவிப்பானது சராசரி அளவில் இருந்தாலும், அவருடைய முழு திறமையையும் வெளிப்படுத்துவதாக அவை இல்லை

உறுதியான கட்டுப்பாட்டுடன் அணியை வழிநடத்தியவர். முக்கியமான, நுட்பமான முடிவுகளை எடுக்கும் சமயங்களில் தன் திறன்களை வெளிப்படுத்தியவர்.

அஷ்வின் IPL தொடரில் நீடிப்பது சந்தேகம்

மத்திய வரிசை துடுப்பாட்ட வீரராக 2018ஆம் ஆண்டில் உத்தரப்பிரதேச மாநில அணிக்காக விளையாடியதுதான் அவருடைய முதல்தரப் போட்டிகளுக்கான அறிமுகம். அப்போது அவர் இரட்டைச்சதம் அடித்து அனைவரது கவனத்தைப் பெற்றுக்கொடுத்தார்.

இம்முறை .பி.எல் தொடரில் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணியில் இடம்பிடித்துள்ள பிரியம் கார்க், நம்பிக்கை நட்சத்திரமாக உருவெடுப்பார் என்பதற்கான வாய்ப்பு உள்ளது.

கார்த்திக் தியாகி ராஜஸ்தான் ரோயல்ஸ் 

நல்ல வேகத்துடன் பந்தை இருபுறமும் திரும்பிச் செல்லும்படி ஸ்விங் செய்யும் திறமையால் துடுப்பாட்ட வீரர்களுக்கு அதிர்ச்சி தருபவராக கார்த்திக் தியாகி இருக்கிறார்

இதுவரை அவர் 11 விக்கெட்டுகளை சாய்த்து 13.90 என்ற சராசரியை வைத்துள்ளார். அதன் மூலம் இந்த ஆண்டுக்கான .பி.எல். ஏலத்தில் ராஜஸ்தான் ரோயல்ஸ் அணியின் உயர்ந்த தேர்வுகளின் வரிசையில் இவர் இடம்பிடித்திருக்கிறார்.

இந்திய வேகப் பந்துவீச்சாளர் வருண் அரோன், இங்கிலாந்து வேகப் பந்துவீச்சாளர் ஜொப்ரா ஆர்ச்சர் ஆகியோரும் இவருடைய அணியில் உள்ளனர். ராஜஸ்தான் ரோயல்ஸ் அணியின் வேகப் பந்துவீச்சுக்கு பலம் கொடுக்க அணியில் இந்த மூவரும் இருப்பார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Video – 10,000 கோடி நஷ்டத்திலிருந்து தப்பித்த BCCI | Cricket Galatta Epi 35

அவருடைய துல்லியமான பந்துவீச்சு, வேகத்தை மாற்றிக் கொள்ளும் திறன் காரணமாக, ஐக்கிய அரபு இராச்சியத்தின் குறைந்த ஓட்டங்கள் கொடுக்கும் மைதானங்களில் இவர் மிகவும் பயனுள்ளவராக இருப்பார்.

தேவ்தத் படிக்கல்ரோயல் செலஞ்சர்ஸ் பெங்களூர்

கர்நாடகாவைச் சேர்ந்த 20 வயதுடைய இடதுகை துடுப்பாட்ட வீரரான தேவ்தத் படிக்கல், ஷிகர் தவானுக்குப் பிறகு இந்திய அணியின் ஆரம்ப துடுப்பாட்ட வீரராக இடம்பிடிப்பதற்கான சகல திறமைகளைக் கொண்ட வீரராகப் பார்க்கப்படுகின்றார்.

கடந்த வருடம் நடைபெற்ற சையத் முஷ்டாக் அலி கிண்ணம் மற்றும் விஜய் ஹசாரே கிண்ணம் ஆகிய போட்டித் தொடர்களில் அதிக ஓட்டங்களைக் குவித்த வீரர்களில் ஒருவராக இடம்பிடித்தவர். அத்துடன், ரஞ்சி கிண்ணத்தில் சிறந்த துடுப்பாட்டத்தை வெளிப்படுத்தியவர்

உள்ளூர் போட்டிகளில் கடந்த ஒரு வருடமாகத் தூள் கிளப்பி வரும் தேவ்தத் படிக்கல், தனது முதல் .பி.எல் போட்டியிலேயே முத்திரை பதித்து ரசிகர்களிடம் ஆர்வத்தைத் தூண்டிவிட்டார்

இம்முறை ஐ.பி.எல் தொடரில் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணியை 10 ஓட்டங்கள் வித்தியாசத்தில் ரோயல் செலஞ்சர்ஸ் பெங்களூர் அணி, தமது முதலாவது லீக் போட்டியில் வீழ்த்தியது.

குறித்த போட்டியில் முதலில் துடுப்பெடுத்தாடிய பெங்களூர் அணி 20 ஓவர்களில் 5 விக்கெட் இழப்புக்கு 163 ஓட்டங்களை எடுத்தது. இந்தப் போட்டியில் ஆர்.சி.பி அணியில் இடம்பெற்ற தேவ்தத் படிக்கல், 8 பௌண்டரிகளுடன் 56 ஓட்டங்களை விளாசி ஆட்டமிழந்தார். இதனால் அவ்வணிக்கு வலுவான தொடக்கம் கிடைத்தது

Video – எதிர்பாராத திருப்பத்தை ஏற்படுத்திய RCB | Cricket Galatta Epi 36

இதில் தனது முதலாவது முதல்தரப் போட்டியில் அரைச்சதம், முதலாவது லிஸ்ட் போட்டியில் அரைச்சதம், முதலாவது டி20 போட்டியில் அரைச்சதம் மற்றும் முதலாவது .பி.எல் போட்டியில் அரைச்சதம் அடித்தவராக பல சாதனைகளைப் படைத்த வீரராகவும் தேவ்தத் வரவாற்றில் இடம்பிடித்துள்ளார்

எனவே, இவருடைய அபரிமிதமான திறமையினால் இம்முறை .பி.எல் தொடரில் ரோயல் செலஞ்சர்ஸ் அணி சம்பியன் பட்டத்தை வெல்வதற்கு காரணமாக இருப்பார் என கிரிக்கெட் ஆர்வலர்கள் கருத்து வெளியிட்டுள்ளனர்

ருதுராஜ் கெய்க்வாட்சென்னை சுப்பர் கிங்ஸ்

ருதுராஜ் கெய்க்வாட் புனேவைச் சேர்ந்தவர். இவருக்கு 23 வயது தான் ஆகிறது. கடந்த வருடம் சென்னை அணி இவரை 20 இலட்சம் ரூபாய்க்கு ஏலத்தில் எடுத்தது

மகாராஷ்டிரா அணிக்காக இவர் சையத் முஷ்டாக் அலி தொடரில் விளையாடி பிரகாசித்திருந்தார். அதேபோல், 2017இல் விஜய் ஹசாரே போட்டியிலும் சிறப்பாக விளையாடினார்

2018இல் இவர் இந்திய அணியில் சேர்க்கப்பட்டார். பின்னர் 2019இல் இந்திய அணிக்காக விளையாடினார். இந்த போட்டிகளில் இவரின் சிறப்பான ஆட்டம் காரணமாக, சென்னை அணியில் தற்போது இணைந்துள்ளார்

2021 IPL தொடரும் ஐக்கிய அரபு இராச்சியத்தில் ?

ரெய்னா சென்னை அணியில் இருந்து விலகிய போது, ருதுராஜ் கெய்க்வாட் அந்த இடத்தில் இறங்குவார் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் இவர் கொவிட் – 19 வைரஸ் காரணமாக பாதிக்கப்பட்டார். இதையடுத்து கொரோனாவில் இருந்து மீண்டவர், ராஜஸ்தான் ரோயல்ஸ் அணிக்கு எதிராக விளையாடினார்

சென்னை அணியில் அம்பத்தி ராயுடு, சுரேஷ் ரெய்னா இல்லாத நிலையில் ருதுராஜ் கெய்காவாட் அவர்களது இடத்தில் விளையாடி திறமையினை வெளிப்படுத்துவார் என எதிர்பார்க்கப்படுகின்றது.

ஆகாஷ் கிங் (ராஜஸ்தான் ரோயல்ஸ்), ஷான் பொரில் (கிங்ஸ் லெவன் பஞ்சாப்), விராத் சிங் (சன்ரைசர்ஸ்), சாய் கிஷோர் (சென்னை சுப்பர் கிங்ஸ்), சித்தார்த் மனிமாரன் (கொல்கத்தா நைட் ரைடர்ஸ்), செபாஸ் அஹமட் (ரோயல் செலஞ்சர்ஸ் பெங்களூர்) போன்ற வீரர்களும் இம்முறை .பி.எல் தொடரில் எதிரணி வீரர்களை திக்குமுக்காடச் செய்கின்ற இளம் வீரர்களாக தமக்கான முத்திரையை பதிப்பார்கள் எனவும் எதிர்பார்க்கப்படுகின்றது.  

மேலும் பல கிரிக்கெட் செய்திகளைப் படிக்க…