2021 IPL தொடரும் ஐக்கிய அரபு இராச்சியத்தில் ?

148
IPL2020
@BCCI

அடுத்த வருட முற்பகுதியில் நடைபெறவுள்ள இங்கிலாந்து மற்றும் இந்திய அணிகளுக்கிடையிலான டெஸ்ட் தொடர் மற்றும் அடுத்த வருடம் நடைபெறவுள்ள இந்தியன் ப்ரீமியர் லீக் (ஐ.பி.எல்) தொடர் என்பவற்றை ஐக்கிய அரபு இராச்சியத்தில் நடத்துவதற்கு பிசிசிஐ திட்டமிட்டு வருவதாக செய்திகள் வெளியாகியுள்ளன. 

ஐக்கிய அரபு இராச்சியத்தில் நடைபெறும் .பி.எல். கிரிக்கெட் போட்டி முடிந்ததும், இந்திய கிரிக்கெட் அணி டிசம்பர் மாதம் முதல் அவுஸ்திரேலியாவில் சுற்றுப்பயணம் செய்து 4 டெஸ்ட் மற்றும் 3 ஒருநாள் போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடுகிறது

>> “ஆட்டநாயகன் விருது நடுவருக்கு வழங்கப்பட்டிருக்க வேண்டும்“ – செவாக்

அடுத்து இங்கிலாந்து அணி அடுத்த ஆண்டு ஜனவரியில் இந்தியா வருகிறது. அந்த அணி இந்தியாவுடன் 5 டெஸ்ட், 3 ஒருநாள் மற்றும் மூன்று T20i  போட்டிகளில் விளையாட உள்ளது.  

இதைத்தொடர்ந்து அடுத்த ஆண்டுக்கான .பி.எல். கிரிக்கெட் போட்டி மார்ச் அல்லது ஏப்ரல் மாதம் தொடங்கும் என்று தெரிகிறது

இந்த நிலையில், இந்திய கிரிக்கெட் சபைக்கும், ஐக்கிய அரபு இராச்சிய கிரிக்கெட் சபைக்கும் இடையே எதிர்காலத்தில் கிரிக்கெட் போட்டிகளை நடத்துவது தொடர்பாக நேற்றுமுன்தினம் (19) ஒரு புரிந்துணர்வு ஒப்பந்தம் கையெழுத்தானது

இந்த தகவலை இந்திய கிரிக்கெட் சபையின் செயலாளர் ஜெய் ஷா தனது டுவிட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார். எனினும், அந்த ஒப்பந்தத்தில் என்ன விபரங்கள் இடம்பெற்றுள்ளது என்பது குறித்து வெளிப்படையாக எதுவும் தெரிவிக்கப்படவில்லை

ஆனால், இந்தியாவில் கொவிட் – 19 வைரஸின் தாக்கம் தொடர்ந்து நீடித்தால் அடுத்த ஆண்டு நடைபெற வேண்டிய இந்தியாஇங்கிலாந்து தொடர் மற்றும் அடுத்த ஆண்டுக்கான .பி.எல். போட்டித் தொடர் என்பவற்றை 2ஆவது வாய்ப்பாக ஐக்கிய அரபு இராச்சியத்தில் நடத்தலாம் என்பதன் அடிப்படையிலேயே இந்த ஒப்பந்தம் செய்யப்பட்டு இருப்பதாக இந்திய கிரிக்கெட் சபை வட்டாரங்கள் தகவல்கள் தெரிவிக்கின்றன

>> இங்கிலாந்து, ஆஸி வீரர்களுக்கு 36 மணி நேரம் சுய தனிமைப்படுத்தல்

இதனிடையே, அடுத்த ஆண்டு நடைபெறவுள்ள இந்திய மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கிடையிலான டெஸ்ட் தொடர் இந்தியாவில் தான் நடக்கும் என பிசிசிஐ அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார். இதுதொடர்பில் அவர் கருத்து தெரிவிக்கையில்,

”தற்போதைய சூழல் காரணமாக மத்திய அரசின் அனுமதியுடன் ஐ.பி.எல் தொடரானது ஐக்கிய அரபு இராச்சியத்தில் நடைபெற்று வருகிறது. அதேநேரம், அடுத்த ஆண்டு நடைபெறவுள்ள இங்கிலாந்து டெஸ்ட் தொடர் இந்தியாவில் நடக்கும் என நம்புகிறோம்.

BCCI vs UAE
பிசிசிஐ – ஐக்கிய அரபு இராச்சிய கிரிக்கெட் தரப்பு இடையிலான சந்திப்பின்போது

ஏனெனில் இந்தியாவில் தற்போது பல்வேறு தளர்வுகள் அறிவிக்கப்பட்டுள்ளன. எமது நாட்டுக்கு வருகின்ற அணியுடன் சேர்ந்து கொவிட் – 19 வைரஸ் தடுப்பு உயர்மட்ட பாதுகாப்பு வளையத்தை அமைப்பதற்கு நடவடிக்கை எடுப்போம். 

அந்த வகையில் கிரிக்கெட் போட்டிகளை இரசிகர்களுடன் மீண்டும் இந்தியாவில் காணலாம் என அவர் தெரிவித்தார்

இதனிடையே, பிசிசிஐ அதிகாரிகள் மற்றும் ஐக்கிய அரபு இராச்சிய கிரிக்கெட் சபை அதிகாரிகளுக்கும் இடையில் இடம்பெற்ற இந்த சந்திப்பில் பிசிசிஐ இன் தலைவர் சவுரவ் கங்குலி, செயலாளர் ஜெய் ஷா, பொருளாளர் அருண் துமால், ஐக்கிய அரபு இராச்சிய கிரிக்கெட் சபையின் பிரதித் தலைவர் காலித் அல் சரூனி ஆகியோர் கலந்துகொண்டனர்

>>மேலும் பல கிரிக்கெட் செய்திகளைப் படிக்க<<