அஷ்வின் IPL தொடரில் நீடிப்பது சந்தேகம்

232
R Ashwin
Image Courtesy : Twitter

டெல்லி கெபிடல்ஸ் அணிக்கு முதல் முறையாக ஏலத்தில் வாங்கப்பட்ட தமிழக வீரரும், நட்சத்திர சுழல் பந்துவீச்சாளருமான ரவிச்சந்திரன் அஷ்வினுக்கு நேற்று (20) நடைபெற்ற கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணிக்கெதிரான போட்டியில் தோள்பட்டையில் பலத்த காயம் ஏற்பட்டுள்ளது. 

இதனால், அவர் இந்தியன் ப்ரீமியர் லீக் (.பி.எல்) தொடரின் அடுத்த போட்டியில் விளையாட முடியாத சுழல் ஏற்பட்டுள்ளது. அவரது உபாதை நிலைக்கு ஏற்ப அஷ்வின் எஞ்சிய போட்டிகளை விளையாடுவது சந்தேகத்திற்கிடமாகியுள்ளதாக ஐ.பி.எல் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

>> “ஆட்டநாயகன் விருது நடுவருக்கு வழங்கப்பட்டிருக்க வேண்டும்“ – செவாக்

.பி.எல் கிரிக்கெட் தொடரின் 2ஆவது லீக் ஆட்டத்தில் சுப்பர் ஓவரில் கிங்ஸ் லெவன் பஞ்சாபை டெல்லி அணி வீழ்த்தியது. ரபாடாவின் அற்புதமான பந்துவீச்சால் இந்த வெற்றி கிடைத்தது. 

இதில் முதலில் துடுப்பெடுத்தாடிய டெல்லி கெப்பிடல்ஸ் அணி 20 ஓவர்களில் 8 விக்கெட் இழப்புக்கு 157 ஓட்டங்களைக் குவித்தது. பதிலுக்கு துடுப்பெடுத்தாடிய பஞ்சாப் அணி, 20 ஓவர்களில் 8 விக்கெட் இழப்புக்கு 157 ஓட்டங்களை எடுக்க போட்டி சமநிலையானது. இதையடுத்து, நடைபெற்ற சுப்பர் ஓவரில் டெல்லி அணி ஒரு விக்கெட்டினால் வெற்றி பெற்றது

இந்தப் போட்டியில் பந்து வீசுவதற்காக களமிறங்கிய அஷ்வின் ஒரு ஓவர் மட்டுமே வீசினாலும் தனது அனுபத்தையும், அர்ப்பணிப்பான பங்களிப்பையும் வெளிப்படுத்தினார்

அஷ்வின் தான் வீசிய முதல் பந்திலேயே பஞ்சாப் அணி வீரர் கருண் நாயரின் விக்கெட்டை வீழ்த்தினார். அதன்பின் கட்டுக்கோப்பாகப் பந்துவீசிய அஷ்வின் 5ஆவது பந்தில் அதிரடி வீரர் நிகோலஸ் பூரனை போல்டாக்கி வெளியேறினார்.

>> Video – பங்களாதேஷ் – இலங்கை மற்றும் LPL தொடர்கள் நடைபெறுவதில் சந்தேகம்? | Cricket Kalam 46

இந்த நிலையில், கடைசிப் பந்தை தடுக்க முயன்று தாவியபோது அஷ்வினின் இடது தோள்பட்டையில் பலத்த காயம் ஏற்பட்டது. கையைத் தூக்க முடியாமல் அவதிப்பட்ட அஷ்வினை, தாங்கிப்பிடித்தவாரே அணியின் மருத்துவர் வீரர்கள் ஓய்வறைக்கு அழைத்துச் சென்றார்.  

ஆனால் சிறிது நேரத்தில் தொலைக்காட்சியில் காண்பிக்கப்பட்ட காட்சியில் அஷ்வினுக்கு தோள்பட்டையில் பெரிய காயம் ஏற்பட்டு கழுத்தில் கட்டுபோடப்பட்டு இருந்தது.  

இதுகுறித்து டெல்லி அணியின் பிசியோதெரபிஸ்ட் பாட்ரிக் பார்ஹார்ட் கூறுகையில், ”அஷ்வினின் இடது தோள்பட்டை இணைப்பு எலும்பு நகர்ந்துள்ளது. அதனால் அஷ்வினுக்கு தாங்க முடியாத வலி ஏற்பட்டது. தற்போது தோள்பட்டையில் கட்டுப்போடப்பட்டுள்ளது. காயத்தின் தன்மை குறித்து இப்போது ஏதும் கூற முடியாது” எனத் தெரிவித்தார்.

>> 2021 IPL தொடரும் ஐக்கிய அரபு இராச்சியத்தில் ?

எதுஎவ்வாறாயினும், அஷ்வினுக்கு தோள்பட்டை இணைப்பு எலும்பு நகர்ந்துள்ளதால், அவர் ஒரு மாதத்துக்கு கூடுதலாக சிகிச்சை எடுக்க வேண்டியிருக்கும். ஆதலால். .பி.எல் தொடரில் முழுமையாக விளையாட முடியாத சூழல் அஷ்வினுக்கு ஏற்பட்டுள்ளது. இதனால் .பி.எல் தொடரிலிருந்து அஷ்வின் விலகலாம் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது

இதனிடையே, அஷ்வினின் நிலைமை பற்றி டெல்லி அணி தலைவர் ஸ்ரேயஸ் ஐயர் கருத்து வெளியிடுகையில்

”அஷ்வின் ஓவரால் ஆட்டம் எங்கள் பக்கம் திரும்பியது. அடுத்த ஆட்டத்துக்குத் தயாராகிவிடுவேன் என அஷ்வின் கூறியுள்ளார். ஆனால் அதைப் பற்றி அணியின் பிசியோ தான் முடிவு செய்வார்” என தெரிவித்தார்

>> மேலும் பல கிரிக்கெட் செய்திகளைப் படிக்க <<