எந்த இந்திய வீரரும் செய்யாத சாதனைகளைப் படைத்த ராகுல்

167
KL Rahul
Image Courtesy - IPL

இந்தியன் ப்ரீமியர் லீக் (ஐ.பி.எல்) கிரிக்கெட்டில் குறைந்த போட்டிகளில் 2,000 ஓட்டங்களைக் கடந்த இந்திய வீரர்கள் வரிசையில், சச்சின் டெண்டுல்கரின் சாதனையை முறியடித்து கே. எல்.ராகுல் முதலிடத்தை பிடித்துள்ளார். 

இந்திய கிரிக்கெட் அணியின் முன்னணி வீரர்களில் ஒருவராக திகழும் கே.எல்.ராகுல் ஐக்கிய அரபு இராச்சியத்தில் தற்போது நடைபெற்றுவரும் .பி.எல் கிரிக்கெட் தொடரில், கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணியின் தலைவராக உள்ளார்.

>> மற்றுமொரு போட்டியைத் தவறவிடும் அம்பத்தி ராயுடு

இந்த நிலையில், ரோயல் செலஞ்சர்ஸ் பெங்களூர் அணிக்கு எதிரான நேற்று (24) நடைபெற்ற 6ஆவது லீக் ஆட்டத்தில் அதிரடியாக சதம் அடித்து அசத்தியதுடன், .பி.எல் கிரிக்கெட்டில் சச்சின் டெண்டுல்கரின் சாதனை ஒன்றையும் அவர் முறியடித்தார். 

ஐ.பி.எல் கிரிக்கெட்டின் ஆறு சீசன்களில் மும்பை இந்தியன்ஸ் அணிக்காக விளையாடியுள்ள கிரிக்கெட் ஜாம்பவான் சச்சின் டெண்டுல்கர், 63 இன்னிங்ஸில் 2,000 ஓட்டங்களைக் கடந்து குறைந்த போட்டிகளில் 2,000 ஓட்டங்களைக் கடந்தவர் என்ற சாதனைக்கு சொந்தக்காரராக திகழ்ந்து வந்தார்

இதனிடையே, பெங்களூர் அணிக்கு எதிரான நேற்றைய போட்டியானது, கே,எல், ராகுலுக்கு 60 ஆவது .பி.எல் போட்டியாக அமைந்தது

இந்தப் போட்டியில் சதம் அடித்ததன் மூலம் அவர் 2,000 ஓட்டங்களைக் கடந்தார். அத்துடன், .பி.எல் கிரிக்கெட்டில் குறைந்த போட்டிகளில் 2,000 ஓட்டங்களைக் கடந்த இந்திய வீரர்களின் பட்டியலில் சச்சினை பின்னுக்குத் தள்ளி ராகுல் முதலிடத்துக்கு முன்னேறியுள்ளார்.

இதன்படி, .பி.எல் தொடரில் குறைந்த போட்டிகளில் 2,000 ஓட்டங்களைக் கடந்த வீரர்கள் பட்டியலில் கௌதம் கம்பீர் (68) மூன்றாவது இடத்திலும், சுரேஷ் ரெய்னா (69) நான்காவது இடத்திலும், வீரேந்திர சேவாக் (70) ஐந்தாவது இடத்திலும் உள்ளனர்

>> Video – டோனி, கோஹ்லி, டிவில்லியர்ஸின் முத்தான சாதனைகள் |Sports RoundUp – Epi 133

இதேநேரம், .பி.எல் தொடரில் அதி வேகமாக 2,000 ஓட்டங்களைக் கடந்த ஒட்டுமொத்த ஐ.பி.எல் வீரர்கள் பட்டியலில் கிறிஸ் கெயில், ஷோன் மார்ஷ் ஆகியோருக்குப் பிறகு ராகுல் மூன்றாம் இடத்தைப் பிடித்தார்.

அத்துடன், இந்தப் போட்டியில் ராகுல் 132 ஓட்டங்களைக் குவித்ததன் மூலம் .பி.எல் தொடரில் இன்னிங்ஸ் ஒன்றில் இந்திய வீரர் ஒருவர் எடுக்கும் அதிகபட்ச ஓட்டங்களைக் குவித்த வீரராகவும், .பி.எல் தலைவர்களில் அதிக ஓட்டங்கள் எடுத்த வீரராகவும்  சாதனை படைத்தார்

இதற்குமுன், டெல்லி அணிக்காக விளையாடிய ரிஷாப் பண்ட், சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணிக்கு எதிராக 128 ஓட்டங்களை எடுத்ததே அதிகபட்ச ஓட்டங்களாக இருந்தது.

அதுதவிர, ராகுல் இந்தத் தொடரில் ஒரு இன்னிங்ஸில் அதிக ஓட்டங்கள் எடுத்த வீரர்கள் பட்டியலில் 4ஆவது இடத்தைப் பிடித்தார். இந்தப் பட்டியலில் கிறிஸ் கெய்ல் (175), பிரண்டன் மெக்கலம் (158), ஏபி டி.வில்லியர்ஸ் (133) ஆகியோர் முதல் மூன்று இடங்களில் உள்ளனர்

>> மீண்டும் ஹைதராபாத் அணியுடன் இணையவுள்ள ஜேசன் ஹோல்டர்

எனவே, கடந்த இரண்டு பருவங்களில் ராகுலின் துடுப்பாட்ட சராசரி 50க்கும் மேல் உள்ளது. இந்த தொடர் திறமை வெளிப்படுத்தலின் காரணமாக இந்த பருவம் முதல் கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணியின் தலைவராகவும் அவர் நியமிக்கப்பட்டுள்ளார். 

இதனால் ஒரு தலைவராக அவர் தற்போது சச்சினின் சாதனையை முறியடித்தது ரசிகர்கள் மத்தியில் பாராட்டுக்களைப் பெற்று வருகின்றார்

அதுமாத்திரமின்றி, .பி.எல் தொடரில் இதுவரை நடைபெற்ற 6 லீக் போட்டிகளின் முடிவில் 153 ஓட்டங்களைக் குவித்துள்ள ராகுல், அதிக ஓட்டங்களைக் குவித்த வீரருக்கான செம்மஞ்சல் நிற தொப்பியையும் பெற்றுக்கொண்டுள்ளார்

>> மேலும் பல கிரிக்கெட் செய்திகளைப் படிக்க <<