பார்சிலோனா, ஜுவன்டஸ் அதிரடி வெற்றி : அதிர்ச்சி தந்த ப்ரீமியர் லீக்

60

ஸ்பெயின் லா லிகா, இத்தாலி சிரீ A மற்றும் இங்கிலாந்தின் ப்ரீமியர் லீக் தொடர்களின் முக்கிய போட்டிகள் பல இலங்கை நேரப்படி இன்று (07) அதிகாலையும் நேற்று(06) இரவும்  நடைபெற்றன. அந்தப் போட்டிகளின் விபரம் வருமாறு,

பார்சிலோனா எதிர் செவில்லா

லுவிஸ் சுவாரெஸ் தலைக்கு மேலால் உதைத்த கண்கவர் கோல் ஒன்று உட்பட செவில்லா அணிக்கு எதிராக 4 கோல்களை பெற்று வெற்றியீட்டிய பார்சிலோனா அணி லா லிகா புள்ளிப்பட்டியலில் அதிரடியாக இரண்டாவது இடத்திற்கு முன்னேற்றம் கண்டது

ரியல் மெட்ரிட், லிவர்பூல் ஆதிக்கம்

இங்கிலாந்து ப்ரீமியர் லீக், ஸ்பெயின் லா லிகா ………

தனது சொந்த மைதானமான கேம்ப் நூவில் இடம்பெற்ற இந்தப் போட்டியில் முதல் பாதியின் 8 நிமிடங்களுக்குள் மூன்று கோல்களை பெற்றதன் மூலம் பார்சிலோனா போட்டியின் ஆதிக்கத்தை தன்வசம் வைத்துக்கொண்டது

சுவாரெஸ் 27 ஆவது நிமிடத்தில் பைசிகள் கிக் மூலம் அபார கோல் ஒன்றை பெற்று பார்சிலோனாவின் கோல் மழையை ஆரம்பித்ததோடு அர்டுரோ விடால் 32 ஆவது நிமிடத்திலும், ஒஸ்மானே டம்பேலே 35 ஆவது நிமிடத்திலும் கோல் பெற்றனர்.   

இந்நிலையில் நட்சத்திர வீரர் லியோனல் மெஸ்ஸி 78 ஆவது நிமிடத்தில் ப்ரீ கிக் மூலம் சிறப்பான கோல் ஒன்றை பெற்று பார்சிலோனா அணியை 4-0 என வெற்றிபெறச் செய்தார்

போட்டியின் கடைசி நேரத்தில் பார்சிலோனா அணி சார்பில் தனது முதல் போட்டியில் ஆடிய ரொனால்டோ அரோஜோ மற்றும் ஒஸ்மானே டம்பேலே சிவப்பு அட்டை பெற்று வெளியேற்றப்பட்டனர்

இந்நிலையில் பார்சிலோனா அணி லா லிகா புள்ளிப் பட்டியலில் முதலிடத்தில் இருக்கும் ரியல் மெட்ரிட்டை விடவும் 2 புள்ளிகள் மாத்திரமே பின்தங்கியுள்ளது

இன்டர் மிலான் எதிர் ஜுவன்டஸ்

பதில் வீரராக வந்த கொன்சலோ ஹிகுவைன் கடைசி நேரத்தில் பெற்ற கோல் மூலம் இன்டர் மிலானுக்கு எதிராக சிரீ A நடப்புச் சம்பியன் ஜுவன்டஸ் 2-1 என்ற கோல் வித்தியாசத்தில் வெற்றியீட்டியது

சான் சிரோவில் நடைபெற்ற இந்தப் போட்டியின் 4ஆவது நிமிடத்திலேயே போல் டிபாலாவின் கோல் மூலம் இன்டர் மிலான் முன்னிலை பெற்றபோதும் மட்டிஜ்ஸ் டி லைட்டின் கையில் பந்து பட்டதை அடுத்து கிடைத்த பெனால்டியை ஜுவன்டஸ் வீரர் லோடாரோ மார்டினஸ் கோலாக மாற்றினார். இதனால் போட்டியின் 18 ஆவது நிமிடத்தில் சமநிலை பெற்ற ஆட்டத்தில் இரு அணிகளும் வெற்றிகோல் பெற போராடின

போட்டி முடிவதற்கு 10 நிமிடங்கள் இருக்கும்போது சமிர் ஹன்டனோவின் வேகமாக பரிமாற்றி பந்தைக் கொண்டு ஹிகுவைன் கோல் புகுத்தி ஜுவன்டஸை வெற்றிபெறச் செய்தார்.   

இந்த வெற்றியுடன் புள்ளிப்பட்டியலில் முதலிடத்தில் இருந்த இன்டர் மிலானை பின்தள்ளி ஜுவன்டஸ் அந்த இடத்தை பிடித்தது.   

மன்செஸ்டர் சிட்டி எதிர் வொல்வ்ஸ் 

வொல்வ்ஸிடம் 2-0 என்ற கோல் வித்தியாசத்தில் அதிர்ச்சித் தோல்வி அடைந்த நடப்புச் சம்பியன் மன்செஸ்டர் சிட்டி புள்ளிப்பட்டியலில் முதலிடத்தில் இருக்கும் லிவர்பூலை விடவும் 8 புள்ளிகளால் பின்தங்கி இரண்டாவது இடத்தில் நீடிக்கிறது

தனது சொந்த மைதானமான எட்டிஹாட் அரங்கில் நடைபெற்ற இந்தப் போட்டியில் கடைசி வரை கோலின்றி நீடித்தபோது வொல்வ்ஸ் வீரர் அடம் ட்ரோரே கடைசி 10 நிமிடத்தில் இரட்டை கோல்களை பெற்று சிட்டி அணிக்கு அதிர்ச்சி கொடுத்தார்.  

வொல்வ்ஸ் தனது சொந்த மைதானத்திற்கு வெளியில் 1979ஆம் ஆண்டுக்கு பின்னரே மன்செஸ்டர் சிட்டியை தோற்கடித்துள்ளமை குறிப்பிடத்தக்கது

ஆர்சனல் எதிர் போர்ன்மௌத்

எமிரேட் அரங்கில் நடைபெற்ற போர்ன்மௌத் அணிக்கு எதிரான போட்டியின் ஆரம்பத்திலேயே கோல் ஒன்றை புகுத்தி அதனை வெற்றி கோலாக மாற்றிய ஆர்சனல் புள்ளிப்பட்டியலில் மூன்றாவது இடத்திற்கு முன்னேற்றம் கண்டது.

9ஆவது நிமிடத்தில் நிகலஸ் பப்பேவின் கோனர் கிக்கை பயன்படுத்தி டேவிட் லுவிஸ் பந்தை வலைக்குள் செலுத்தினார். செல்சியில் இருந்து வந்த பின் லுவிஸ் பெற்ற முதல் கோல் இதுவாகும்.   

இரண்டாவது பாதியில் போர்ன்மௌத் கோல் முயற்சிகளில் ஈடுபட்டபோதும் எதிரணி கோல்காப்பாளரை தாண்டி அந்த அணியால் பதில் கோல் திருப்ப முடியவில்லை.   

நியூகாசில் யுனைடட் எதிர் மன்செஸ்டர் யுனைடட்

நியூகாசிலிடம் அதிர்ச்சித் தோல்வியை சந்தித்த மன்செஸ்டர் யுனைடட் இம்முறை ப்ரீமியர் லீக்கில் மேலும் பின்னடைவை சந்தித்துள்ளது

ப்ரீமியர் லீக் புள்ளிப்பட்டியலில் வெளியேற்றத்திற்கான பகுதியான 12 ஆவது இடத்தில் 9 புள்ளிகளுடன் மன்செஸ்டர் பின்னடைவை சந்தித்துள்ளது. அந்த அணி லீக் தொடரில் தொடர்ச்சியாக மூன்று போட்டிகளில் வெற்றி இன்றி காணப்படுகிறது

இலங்கை அணிக்கு எதிராக மலேசியா கோல் மழை

மலேசிய அணிக்கு எதிராக கோலாலம்பூர் நகரின் ……..

ப்ரீமியர் லீக்கில் தனது கன்னிப் போட்டியில் நியூகாசில் அணி சார்பில் களமிறங்கிய 19 வயதான மத்தியூ லோங்ஸ்டாப் 72 ஆவது நிமிடத்தில் அந்த அணிக்காக வெற்றி கோலை புகுத்தினார். 23 முயற்சிகளின் பின் மன்செஸ்டர் யுனைடட் அணியை நியூகாசில் வீழ்த்திய முதல் சந்தர்ப்பம் இதுவாகும்.

சௌதம்டன் எதிர் செல்சி

சௌதம்டன் அணிக்கு எதிரான ப்ரீமியர் லீக் போட்டியில் 4-1 என இலகு வெற்றியை பெற்ற செல்சி அணி புள்ளிப்பட்டியலில் ஐந்தாவது இடத்திற்கு முன்னேற்றம் கண்டது

போட்டி ஆரம்பித்து 17 ஆவது நிமிடத்தில் கலும் அன்டர்சன் ஒடொய் பரமாற்றிய பந்தை டொம்மி அப்ரஹாம் வலைக்குள் செலுத்தியதன் மூலம் முன்னிலை பெற்ற செல்சி 24ஆவது நிமிடத்தில் மற்றொரு கோலை பெற்றது. மேசன் மௌண்ட் அந்த கோலை பெற்றார்

டன்னி இங்ஸ் 30 ஆவது நிமிடத்தில் பெற்ற கோல் மூலம் சௌதம்டன் சற்று நம்பிக்கையை ஏற்படுத்தியபோதும் பத்து நிமிடங்கள் கழித்து ந்கோலோ கண்டே பெற்ற கோலால் செல்சி முதல் பாதியில் 3-1 என முன்னிலை பெற்றது

இந்நிலையில் போட்டியின் முழு நேரம் முடிவதற்கு ஒரு நிமிடம் இருக்கும்போது செல்சி சார்பில் மிச்சி பட்சுவி நான்காவது கோலை பெற்றார்.  

>>மேலும் பல கால்பந்து செய்திகளைப் படிக்க <<