இலகு வெற்றியை பெற்ற மன்னார் சித்திவிநாயகர் இந்துக் கல்லூரி

144

இலங்கை பாடசாலை அணிகளுக்கு இடையிலான 19 வயதுக்குட்பட்ட டிவிஷன் 3 கிரிக்கெட் தொடரில் செட்டிக்குளம் மகா வித்தியாலய அணிக்கு எதிரான போட்டியில் மன்னார் சித்திவிநாயகர் இந்துக் கல்லூரி அணி 10 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றிபெற்றது.

ஜப்பான் அணியை இலகுவாக வீழ்த்திய இலங்கை இளையோர் அணி

தென்னாபிரிக்காவில் நடைபெற்று வரும் 19 ………

செட்டிக்குளம் பொது விளையாட்டு மைதானத்தில் நடைபெற்ற இந்தப் போட்டியின் நாணய சுழற்சியில் வெற்றிபெற்று முதலில் துடுப்பெடுத்தாட தீர்மானித்த மன்னார் சித்திவிநாயகர் இந்துக் கல்லூரி அணி 49.4 ஓவர்கள் நிறைவில் சகல விக்கெட்டுகளையும் இழந்து 212 ஓட்டங்களை பெற்றுக்கொண்டது.

மன்னார் சித்திவிநாயகர் இந்துக் கல்லூரி அணி சார்பாக பகீர்த்தனன் 43 ஓட்டங்களை அதிகபட்சமாக பெற்றுக்கொடுக்க, தஜீவன் 30 ஓட்டங்களையும், அருண் 26 ஓட்டங்களையும் பெற்றுக்கொடுத்தனர். பந்துவீச்சில், செட்டிக்குளம் மகா வித்தியாலயம் அணி சார்பாக நிலக்ஷன் 4 விக்கெட்டுகளையும், அலைக்ஷன், 3 விக்கெட்டுகளையும், சுபாஷ் 2 விக்கெட்டுகளையும் வீழ்த்தினர்.

பின்னர், பதிலுக்கு துடுப்பெடுத்தாடிய செட்டிக்குளம் மகா வித்தியாலயம் அணி முதலாவது இன்னிங்ஸில் 82 ஓட்டங்களுக்கு சகல விக்கெட்டுகளையும் இழந்தது. செட்டிக்குளம் மகா வித்தியாலயம் சார்பாக அனுஜன் 24 ஓட்டங்களையும், பவித்ரன் 13 ஓட்டங்களையும் பெற்றுக்கொடுக்க, பந்துவீச்சில் லிவான்சன் 5 விக்கெட்டுகளையும், அனோஜன் 3 விக்கெட்டுகளையும் வீழ்த்தினர்.

இதன்படி, முதல் இன்னிங்ஸில் குறைந்த ஓட்டங்களை பெற்றுக்கொண்ட செட்டிக்குளம் மகா வித்தியாலயம் அணி பலோ ஓன் முறையில் மீண்டும் துடுப்பெடுத்தாடியது. இவ்வாறு, துடுப்பெடுத்தாடி 177 ஓட்டங்களுக்கு சகல விக்கெட்டுகளையும் இழந்த அவ்வணி எதிர் தரப்பினருக்கு 48 ஓட்டங்களை வெற்றியிலக்காக நிர்ணயித்தது.

செட்டிக்குளம் மகா வித்தியாலயம் அணி சார்பாக, சம்பத் 38 ஓட்டங்களையும், ஜன்சிகன் 27 ஓட்டங்களையும், சகிதன் 25 ஓட்டங்களையும் பெற்றுக்கொண்டனர். பந்துவீச்சில், அனோஜன் 3 விக்கெட்டுகளையும், லிவான்ஸன், கிதுர்ஷன், பிரியதர்ஷன் ஆகியோர் தலா 2 விக்கெட்டுகளையும் கைப்பற்றினர்.

பென் ஸ்டோக்கிற்கு அபராதம் விதித்த ஐ.சி.சி

இங்கிலாந்து கிரிக்கெட் அணியின் சகலதுறை வீரரான…………

இதேவேளை, நிர்ணயிக்கப்பட்ட 48 என்ற வெற்றியிலக்கினை நோக்கி துடுப்பெடுத்தாடிய மன்னார் சித்திவிநாயகர் இந்துக் கல்லூரி அணி, எந்தவித விக்கெட்டிழப்பும் இன்றி 8.1 ஓவர்கள் நிறைவில் வெற்றியிலக்கை அடைந்தது. துடுப்பாட்டத்தில் பகீர்தனன் 30 ஓட்டங்களையும், தஜீவன் 5 ஓட்டங்களையும் பெற்றுக்கொண்டனர்.

சுருக்கம்

மன்னார் சித்திவிநாயகர் இந்துக் கல்லூரி – 212/10 (49.4), பகீர்த்தனன் 43, தஜீவன்         30, அருண் 26, நிலக்ஷன் 4 விக்கெட்டுகள், அலைக்ஷன் 3 விக்கெட்டுகள், சுபாஷ் 2 விக்கெட்டுகள்

செட்டிக்குளம் மகா வித்தியாலயம் – 82/10 (23.3), அனுஜன்  24, பவித்ரன்  13, லிவான்ஸன் 5 விக்கெட்டுகள், அனோஜன் 3 விக்கெட்டுகள்

செட்டிக்குளம் மகா வித்தியாலயம் (2வது இன்னிங்ஸ் F/O) – 177/10 (35.2), சம்பத் 38, ஜன்சிகன் 27, சகிதன் 25,  அனோஜன் 3 விக்கெட்டுகள்

மன்னார் சித்திவிநாயகர் இந்துக் கல்லூரி –  51/0 (8.1), பகீர்தனன் 30*, தஜீவன் 5*

முடிவு – மன்னார் சித்திவிநாயகர் இந்துக் கல்லூரி 10 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி

>> மேலும் பல கால்பந்து செய்திகளைப் படிக்க <<