ரியல் மெட்ரிட், லிவர்பூல் ஆதிக்கம்

67

இங்கிலாந்து ப்ரீமியர் லீக், ஸ்பெயின் லா லிகா தொடர்களின் முக்கிய சில போட்டிகள் சனிக்கிழமை (05) நடைபெற்றன. அந்தப் போட்டிகளின் விபரம் வருமாறு,

ரியல் மெட்ரிட் எதிர் க்ரனடா

ஈடன் ஹசார்ட் ரியல் மெட்ரிட்டுக்காக தனது முதல் கோலை புகுத்திய நிலையில் க்ரனடா (Granada) அணிக்கு எதிராக 4-2 என்ற கோல்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்ற ரியல் மெட்ரிட் லா லிகா புள்ளிப்பட்டியலில் முதலிடத்தில் ஆதிக்கம் செலுத்துகிறது. 

பார்சிலோனா தீர்க்கமான வெற்றி: லிவர்பூல் த்ரில் வெற்றி

சம்பியன்ஸ் லீக் தொடரின் முக்கிய இரண்டு ஆரம்ப சுற்றுப்…….

கடந்த ஜூன் மாதம் செல்சியில் இருந்து ரியல் மெட்ரிட்டுக்கு ஒப்பந்தமான ஹசார்ட் எதிரணி கோல்காப்பாளர் ருயி சில்வாவை முறியடித்து முதல் பாதியின் மேலதிக நேரத்தில் கோல் புகுத்தினார்.

இதில் போட்டியின் இரண்டாவது நிமிடத்திலேயே கரிம் பென்சமாவின் கோல் மூலம் ரியல் மெட்ரிட் முதல் பாதியில் 2-0 என முன்னிலை பெற்றது.  

61 ஆவது நிமிடத்தில் லூகா மொட்ரிக் ரியல் மெட்ரிட்டுக்காக மூன்றாவது கோலை புகுத்திய நிலையில் டார்வின் மச்சிஸ் மற்றும் டொமிங்கோஸ் டுவர்டே க்ரனடா அணி சார்பில் கோல் புகுத்தினர். 

போட்டியின் மேலதிக நேரத்தில் ஜேம்ஸ் ரொட்ரிகஸ் பெற்ற கோல் மூலம் ரியல் மெட்ரிட் வெற்றியை உறுதி செய்து கொண்டது. 


லிவர்பூல் எதிர் லெய்செஸ்டர் சிட்டி

மேலதிக நேரத்தில் ஜேம்ஸ் மில்னர் பெனால்டி மூலம் பெற்ற கோலின் உதவியோடு லெய்செஸ்டர் சிட்டிக்கு எதிராக லிவர்பூல் த்ரில் வெற்றி ஒன்றை பெற்றது. இதன் மூலம் ப்ரீமியர் லீக்கில் லிவர்பூல் தோல்வியுறாத அணியாக முதலிடத்தில் நீடிக்கிறது. 

தனது சொந்த மைதானமான அன்பீல்டில் நடைபெற்ற இந்தப் போட்டியின் 40 ஆவது நிமிடத்தில் சாடியோ மானே ப்ரீமியர் லீக்கில் தனது 50 ஆவது கோலை பதிவு செய்ய லிவர்பூல் முன்னிலை பெற்றது. இந்நிலையில் போட்டி முடிவதற்கு 10 நிமிடங்கள் இருக்கும்போது ஜேம்ஸ் மடிசன் பதில் கோல் திருப்பியதால் பரபரப்பு ஏற்பட்டது. 

எனினும் போட்டி முடியும் தருவாயில் பெனால்டி பெட்டிக்குள் மானேவுக்கு எதிராக மார்க் அல்பிரைட்டன் தவறு ஒன்றை இழைக்க லிவர்பூல் அணிக்கு பெனல்டி கிடைத்தது. அதனைக் கொண்டு ஜேம்ஸ் மில்னர் கோல் பெற்றார்.


டொட்டன்ஹாம் ஹொட்ஸ்புர் எதிர் பிரைட்டன் 

சம்பியன்ஸ் லீக் தொடரில் பயேர்ன் முனிச்சிடம் அதிர்ச்சித் தோல்வி அடைந்த நிலையில் டொட்டன்ஹாம் இந்த வாரத்தில் பிரைட்டன் அணியிடமும் 3-0 என்ற கோல்கள் வித்தியாசத்தில் தோல்வியை சந்தித்துள்ளது. 

இலங்கை அணிக்கு எதிராக மலேசியா கோல் மழை

மலேசிய அணிக்கு எதிராக கோலாலம்பூர் நகரின் தேசிய…..

போட்டி ஆரம்பித்து 3 ஆவது நிமிடத்திலேயே நீல் மௌபே (Neal Maupay) தலையால் முட்டி பெற்ற கோல் மூலம் பிரைட்டன் முன்னிலை பெற்றது. தனது முதல் ப்ரீமியர் லீக்கில் விளையாடிய 19 வயதான ஆரோன் கொனோலி 32 மற்றும் 65 ஆவது நிமிடங்களில் இரட்டை கோல் புகுத்தி டொட்டன்ஹாம் அணிக்கு அதிர்ச்சி கொடுத்தார்.

நான்கு தினங்களுக்கு முன்னர் டொட்டன்ஹாம், பயேர்ன் முனிச்சிடம் 7-2 என்ற கோல்கள் வித்தியாசத்தில் தோல்வியை சந்தித்தமை குறிப்பிடத்தக்கது. 

>>மேலும் பல கால்பந்து செய்திகளைப் படிக்க<<