முதல் டெஸ்ட் போட்டியில் ஆடும் வாய்ப்பினை பெற்றுள்ள சகீப் அல் ஹசன்

62
 

இலங்கை அணிக்கு எதிராக நடைபெறவுள்ள முதல் டெஸ்ட் போட்டியில், பங்களாதேஷ் அணியின் முன்னணி சகலதுறை வீரர் சகீப் அல் ஹஸன் விளையாடுவதற்கு கருத்திற்கொள்ளப்பட்டிருப்பதாக தெரிவிக்கப்பட்டிருக்கின்றது.

இலங்கைக்கெதிரான முதல் டெஸ்டிலிருந்து வெளியேறும் சகீப்

மூன்று நாட்களின் முன்னர் சகீப் அல் ஹஸனுக்கு கொவிட்-19 தொற்று உறுதியாகிய நிலையில், அவரால் இலங்கைக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியில் விளையாட முடியாது என பங்களாதேஷ் கிரிக்கெட் சபை நிர்வாகம் சுட்டிக்காட்டியது.

எனினும் சகீப் அல் ஹசனுக்கு மீண்டும் மேற்கொள்ளப்பட்ட பரிசோதனைகளில் கொவிட்-19 வைரஸ் தொற்று இல்லாதது கண்டு பிடிக்கப்பட்டிருக்கும் நிலையில், அவர் முதல் டெஸ்ட் போட்டிக்கான வீரர்கள் தெரிவுக்கு கருத்திற்கொள்ளப்பட்டிருப்பதாக குறிப்பிடப்பட்டிருக்கின்றது.

அந்தவகையில் சகீப் அல் ஹசன், பூரண உடற்தகுதியினைக் காட்டும் போது பங்களாதேஷ் – இலங்கை அணிகள் இடையிலான டெஸ்ட் தொடரின் முதல் போட்டியில் விளையாடுவார் எனக் குறிப்பிடப்பட்டிருக்கின்றது.

மேற்கிந்திய சுற்றுப்பயணத்திலிருந்து விலகும் ரங்கன ஹேரத்

பங்களாதேஷ் மற்றும் இலங்கை அணிகளுக்கு இடையிலான டெஸ்ட் தொடரின் முதல் போட்டி எதிர்வரும் ஞாயிற்றுக்கிழமை (15) ஆரம்பமாகவுள்ளதோடு, இந்த டெஸ்ட் தொடர் சர்வதேச கிரிக்கெட் வாரியத்தின் உலக டெஸ்ட் சம்பியன்ஷிப்பிற்குள் அடங்குகின்றமையும் குறிப்பிடத்தக்கது.

>>மேலும் கிரிக்கெட் செய்திகளைப் படிக்க<<