கோஹ்லியின் அதிரடி துடுப்பாட்டத்தால் வெற்றி இலக்கை இலகுவாக கடந்த இந்தியா

85
BCCI

மேற்கிந்திய தீவுகள் அணிக்கு எதிரான முதலாவது டி20 சர்வதேச போட்டியில் அணித்தலைவர் விராட் கோஹ்லின் சிறப்பான ஆட்டத்தினால் 8 பந்துகள் மீதமுள்ள நிலையில் இந்திய அணி 6 விக்கெட்டுக்களினால் வெற்றி பெற்று தொடரில் முன்னிலை பெற்றுள்ளது. 

இந்தியாவுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள மேற்கிந்திய தீவுகள் கிரிக்கெட் அணி அங்கு ஆப்கானிஸ்தான் கிரிக்கெட் அணியுடன் மூவகையான தொடர்களிலும் விளையாடியதன் பின்னர் தற்போது இந்திய கிரிக்கெட் அணியுடன் மட்டுப்படுத்தப்பட்ட ஓவர்கள் கொண்ட இரு தொடர்களில் விளையாடுகிறது. 

லங்கன் ப்ரீமியர் லீக் (LPL) அடுத்த ஓகஸ்டில்

அடுத்த ஆண்டின் (2020) ஓகஸ்ட் மாதம் லங்கன் ப்ரீமியர் லீக் (LPL) T20 கிரிக்கெட் தொடர் நடைபெறும்…

சுற்றுப்பயணத்தின் முதல் தொடரான 3 போட்டிகள் கொண்ட டி20 சர்வதேச தொடரின் முதல் போட்டி இன்று (06) ஹைதராபாத் ராஜிவ் காந்தி சர்வதேச கிரிக்கெட் மைதானத்தில் நடைபெற்றது. போட்டியில் நாணய சுழற்சியில் வெற்றி பெற்ற இந்திய அணித்தலைவர் விராட் கோஹ்லி முதலில் களத்தடுப்பை தெரிவு செய்தார்.

அதன் பிரகாரம் மேற்கிந்திய தீவுகள் அணி முதலில் துடுப்பெடுத்தாட பணிக்கப்பட்டது. ஆரம்ப துடுப்பாட்ட வீரர்களாக லெண்டில் சிம்மன்ஸ் மற்றும் எவின் லுவிஸ் ஆகியோர் களமிறங்கினர். இரண்டாவது ஓவரிலேயே மேற்கிந்திய தீவுகள் அணியின் முதல் விக்கெட் வீழ்த்தப்பட்டது. லெண்டில் சிம்மன்ஸ் 2 ஓட்டங்களுடன் ஆட்டமிழந்தார். 

மூன்றாவது விக்கெட்டுக்காக லுவிஸூடன் ஜோடி சேர்ந்த இளம் வீரர் பிரண்டென் கிங் நிதானமான துடுப்பாட்டத்தை வெளிப்படுத்த மறுமுனையில் எவின் லுவிஸ் அதிரடி துடுப்பாட்டத்தை வெளிப்படுத்தினார். 17 பந்துகளில் 4 சிக்ஸர்கள், 3 பௌண்டரிகளுடன் 40 ஓட்டங்களை குவித்து எவின் லுவிஸ் ஆட்டமிழந்தார். 

பின்னர் நான்காவது விக்கெட்டுக்காக பிரண்டென் கிங்குடன் சிம்ரென் ஹிட்மெயர் ஜோடி சேர்ந்தார். நிதானமாக துடுப்பெடுத்தாடிவந்த பிரண்டென் கிங் 31 ஓட்டங்களுடன் அரங்கம் திரும்பினார். அதனை தொடர்ந்து சிம்ரென் ஹெட்மெயருடன் அணித்தலைவர் கிரன் பொல்லார்ட்டும் ஜோடி சேர, அணியின் ஓட்ட எண்ணிக்கை அதிகரித்த வண்ணம் சென்றன.

நான்காவது விக்கெட் இணைப்பாட்டமாக 71 ஓட்டங்கள் அதிரடியாக பெற்றப்பட்டது. டி20 சர்வதேச அரங்கில் கன்னி அரைச்சதம் கடந்த ஷிம்ரொன் ஹெட்மெயர் 41 பந்துகளில் 4 சிக்ஸர்கள், 2 பௌண்டரிகளுடன் 56 ஓட்டங்களை குவித்து ஆட்டமிழந்தார். மறுமுனையில் அதிரடி ஆட்டத்தை வெளிப்படுத்திய அணித்தலைவர் கிரன் பொல்லார்ட் 4 சிக்ஸர்கள், 1 பௌண்டரியுடன் 37 ஓட்டங்களுடன் அதே ஓவரில் ஆட்டமிழந்தார்.   

மேற்கிந்திய தீவுகள் தொடருக்கான இந்திய ஒருநாள், டி20 குழாம்கள் அறிவிப்பு

மேற்கிந்திய தீவுகள் அணியுடன் மட்டுப்படுத்தப்பட்ட ஓவர்கள் கொண்ட கிரிக்கெட் தொடரி….

பின்னர் ஐந்தாவது விக்கெட்டுக்காக முன்னாள் அணித்தலைவர் ஜேசன் ஹோல்டர் மற்றும் விக்கெட் காப்பாளர் தினேஷ் ராம்டீன் ஆகியோர் ஜோடி சேர்ந்தனர். அதிரடி ஆட்டத்தை வெளிப்படுத்திய ஜேசன் ஹோல்டர் 2 சிக்ஸர்கள், 1 பௌண்டரியுடன் 24 ஓட்டங்களையும், ராம்டீன் 1 பௌண்டரியுடன் 11 ஓட்டங்களையும் பெற்று ஆடுகளத்தில் இருந்தனர். 

நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்கள் நிறைவில் மேற்கிந்திய தீவுகள் அணி 5 விக்கெட்டுகள் இழப்பிற்கு 207 ஓட்டங்களை குவித்தது. இந்திய அணியின் பந்துவீச்சில் யுஸ்வேந்திர சஹால் 2 விக்கெட்டுக்களையும், ரவீந்திர ஜடேஜா, வொஷிங்டன் சுந்தர் மற்றும் தீபக் சஹார் ஆகியோர் தலா ஒவ்வொரு விக்கெட் வீதமும் வீழ்த்தினர். 

208 ஓட்டங்களை வெற்றி இலக்காக நோக்கி துடுப்பெடுத்தாட ஆரம்பித்த இந்திய அணிக்கு ஆரம்ப துடுப்பாட்ட வீரர் ரோஹிட் சர்மா ஏமாற்றமளித்தார். அவர் வெறும் 8 ஓட்டங்களுடன் ஆட்டமிழந்தார். ஆனால் இரண்டாவது விக்கெட் இணைப்பாட்டத்திற்காக ராகுலுடன் அணித்தலைவர் விராட் கோஹ்லி ஜோடி சேர்ந்தார். 

ஆரம்பத்தில் விராட் கோஹ்லி ஒரு பக்கம் நிதானமாக துடுப்பெடுத்தாட மறுமுனையில் கே.எல் ராகுல் அதிரடி ஆட்டத்தை வெளிப்படுத்தினார். இருவரும் இணைப்பாட்டமாக 100 ஓட்டங்களை பெற்றுக்கொண்டனர். டி20 சர்வதேச அரங்கில் 7 ஆவது அரைச்சதம் கடந்த ராகுல் 40 பந்துகளில் 4 சிக்ஸர்கள் 5 பௌண்டரிகளுடன் 62 ஓட்டங்களை பெற்று ஆட்டமிழந்தார்.

பின்னர் அணித்தலைவர் விராட் கோஹ்லியுடன் ஜோடி சேர்ந்த விக்கெட் காப்பாளர் ரிஷப் பண்ட் 2 சிக்ஸர்களுடன் 18 ஓட்டங்களை குவித்து ஆட்டமிழந்தார். அதனை தொடர்ந்து அடுத்த ஓவரில் சிரேயஸ் ஐயர் 4 ஓட்டங்களுடன் ஆட்டமிழந்தார். ஆனால் ஆரம்பத்தில் நிதானமாக துடுப்பெடுத்தாடி பின்னர் அதிரடி ஆட்டத்தை வெளிப்படுத்திய விராட் கோஹ்லி இறுதிவரை ஆடுகளத்தில் நின்று அணியின் வெற்றியை உறுதி செய்தார். 

இந்திய தொடருக்கான மேற்கிந்திய தீவுகள் ஒருநாள், டி20 குழாம்கள் அறிவிப்பு

இந்திய மற்றும் மேற்கிந்திய தீவுகள் அணிகளுக்கிடையில் நடைபெறவுள்ள ஒருநாள் மற்றும்…

50 பந்துகளை எதிர்கொண்ட விராட் கோஹ்லி டி20 சர்வதேச அரங்கில் தனது 23 ஆவது அரைச்சதத்தை கடந்து 6 சிக்ஸர்கள் 6 பௌண்டரிகளுடன் ஆட்டமிழக்காது 94 ஓட்டங்களை குவித்தார். மேற்கிந்திய தீவுகளின் பந்துவீச்சில் கெரி பியர் 2 விக்கெட்டுக்களையும், கிரன் பொல்லார்ட் மற்றும் ஷெல்டன் கொட்ரெல் ஆகியோர் தலா ஒவ்வொரு விக்கெட்டையும் வீழ்த்தினர்.

போட்டியின் சுருக்கம்

மேற்கிந்திய தீவுகள் – 207/5 (20) – ஷிம்ரொன் ஹெட்மெயர் 56(41), எவின் லுவிஸ் 40(17), யுஸ்வேந்திர சஹால் 2/36, ரவீந்திர ஜடேஜா 1/30

இந்தியா – 209/4 (18.4) – விராட் கோஹ்லி 94(50), கே.எல் ராகுல் 62(40), கெரி பியர் 2/44, கிரன் பொல்லார்ட் 1/10

முடிவு – இந்திய அணி 6 விக்கெட்டுக்களால் வெற்றி

போட்டியின் ஆட்ட நாயகனாக அணித்தலைவர் விராட் கோஹ்லி தெரிவானார். இரு அணிகளுக்கும் இடையிலான இரண்டாவது டி20 சர்வதேச போட்டி நாளை மறுதினம் (8) திருவனந்தபுரத்தில் நடைபெறவுள்ளது.

>>மேலும் கிரிக்கெட் செய்திகளை படிக்க<<