தேசிய குழாம்களிலுள்ள அனைத்து வீரர்களுக்கும் கொரோனா தடுப்பூசி

99

தேசிய குழாம்களில் இடம்பெற்றுள்ள அனைத்து வீரர்களுக்கும் கொரோனா தடுப்பூசி வழங்குவதற்கு விளையாட்டுத்துறை அமைச்சர் நாமல் ராஜபக்ஷ நடவடிக்கை எடுத்துள்ளார். 

நாட்டில் தற்போது வேகமாகப் பரவிவரும் கொரோனா வைரஸிலிருந்து வீரர்களைப் பாதுகாக்கும் நோக்கில் உடனடியாக கொரோனா தடுப்பூசிகளை வழங்குமாறு சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு விளையாட்டுத்துறை அமைச்சர் தெரியப்படுத்தியுள்ளதாக விளையாட்டுத்துறைப் பணிப்பாளர் நாயகம் சட்டத்தரணி அமல் எதிரிசூரியா தெரிவித்தார்.

இதன்படி, தற்போது முன்னெடுக்கப்பட்டு வருகின்ற தேசிய குழாம்களில் இடம்பெற்றுள்ள வீரர்களையும், முன்னதாக கலைக்கப்பட்ட தேசிய குழாம்களில் இடம்பிடித்திருந்த வீரர்களையும் விளையாட்டுத்துறை அமைச்சுக்கு வரவழைத்து ஒரே நாளில் அனைவருக்கும் கொரோனா தடுப்பூசி செலுத்துவதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது.

“2022இல் 100 இலங்கை வீரர்களுக்கு வெளிநாட்டு பயிற்சி

இதனிடையே, எதிர்வரும் ஜுலை மாதம் ஆரம்பமாகவுள்ள டோக்கியோ ஒலிம்பிக்கில் பங்குபற்றுவதற்கு எதிர்பார்த்துள்ள வீரர்கள் மற்றும் அதிகாரிகளுக்கு தேசிய ஒலிம்பிக் சங்கத்தின் தலையீட்டினால் கடந்த சில தினங்களுக்கு முன் கொரோனா தடுப்பூசி செலுத்துவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டது.

அவ்வாறு முதல் கட்ட தடுப்பூசியை பெற்றுக்கொண்டவர்களுக்கான இரண்டாவது கட்ட தடுப்பூசி எதிர்வரும் 25ஆம் திகதி நாரஹேன்பிட்டியவில் உள்ள இராணுவ வைத்தியசாலையில் வைத்து செலுத்துவதற்கு தேசிய ஒலிம்பிக் சங்கம் நடவடிக்கை எடுத்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

இதுஇவ்வாறிருக்க, பங்களாதேஷ் சுற்றுப்பயணத்தை முன்னதாக இலங்கை கிரிக்கெட் அணி வீரர்களுக்கும் கடந்த வாரம் சினோபார்ம் தடுப்பூசி செலுத்தப்பட்டது.

வீர வீராங்கனைகளுக்கு மாதாந்தம் ஊட்டச்சத்து பொதிகள்

 அத்துடன், அதன் இரண்டாவது தடுப்பூசி பங்களாதேஷ் சுற்றுப்பயணத்துக்குப் பிறகு இலங்கை அணி வீரர்கள் நாடு திரும்பியதும் வழங்குவதற்கு இலங்கை கிரிக்கெட் சபை நடவடிக்கை எடுத்துள்ளது.

அதேவேளை, அண்மையில் நிறைவுக்கு வந்த இலங்கைக்கான டெஸ்ட தொடருக்கு முன்னதாக பங்களாதேஷ் அணி வீரர்களுக்கு அந்நாட்டு கிரிக்கெட் சபையினால் கொரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டமை குறிப்பிடத்தக்கது

இதேவேளை, முழு உலகத்திலும் இதுவரை 75 சதவீதமான விளையாட்டு வீரர்களுக்கு கொரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

மேலும் பல விளையாட்டு செய்திகளைப் படிக்க ….